ஶ்ரீலலிதா
சஹஸ்ரநாமம் 53
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
செவ்வாய்க்கிழமை ஜூலை, 30, , 2024
அனைவருக்கும் வணக்கம்
நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில் தற்போது
விபூதி விஸ்தாரம் என்ற பகுதியைப் பார்த்து
வருகிறோம்..
இதுவரை 124 ஸ்லோகங்களையும் அவைகளில் உள்ள 606 நாமாவளிகளையும்
பார்த்து விட்டோம்.
இன்று நமது லலிதா சஹஸ்ரநாம வர்ணனைகளின் தொடரில் மூன்று ஸ்லோகங்களைப்
பார்க்கப் போகின்றோம் அவை ,125, 126 மற்றும் 127 ஆகும். அம்பாளி நாமாவளிகளில் இதுவரை
621 நாமாவளிகளின் வ்ர்ணனைகளைப் பார்த்துவிட்டோம் இன்றைய ஸ்லோகங்களில் 622 முதல் 644
வரையிலான 23 நாமாவளிக்ளைப் பார்ப்போம்.
க்லீம்காரீ, கேவலா, குஹ்யா, கைவல்ய பததாயினீ |
த்ரிபுரா, த்ரிஜகத்வந்த்யா, த்ரிமூர்தி, ஸ்த்ரிதஸேஸ்வரீ || 125 ||
க்லீம் |
க்லீம் என்னும் பீஜ மந்திரம் |
காரீ |
அந்த மந்திரத்தின் வடிவமானவள் |
கேவலா |
எதையும் சாராது தனித்து நிற்பவள்,
முழுமையானவள்,எல்லாமுமானவள் |
குஹ்யா |
அனைவராலும் எளிதாக உணரப்
படாத மறை பொருளானவள் |
கைவல்ய |
மோக்ஷம்,வீடு பேறு |
பத |
பதவி, ஸ்தானம் |
தாயினீ |
வழங்குபவள், முக்தியளிப்பவள் |
த்ரி |
அனைத்து மூன்றுகளும்,முத்தேவர்,முச்சக்தி,மூவுலகம், முத்தொழில்கள்,முக்காலம் என
அனைத்தும் |
புரா |
அனைத்திற்கும் புராதணமானவள் |
த்ரிஜக |
மூன்று லோகங்களிலும் பூ
,புவர் சுவர் |
வந்த்யா |
போற்றி வணங்கத்தக்கவள் |
த்ரிமூர்த்தி |
மும் மூர்த்திகளின் ஐக்கிய
வடிவமானவள் |
த்ரிதாஸ |
தெய்வங்கள்,தேவர்கள்,கடவுள்கள் |
ஈஸ்வரீ |
சர்வேஸ்வரி, ப்ரபஞ்சத்தின்
தலைவி |
எல்லா தெய்வங்களுக்கும் ஒரு மூல மந்திரம் உண்டு .அதில் அம்பாளின் பீஜ
மந்திரம் க்லீம் பீஜம் என்றால் விதை அதுவே உற்பத்தியின் ஆதாரமாகும்.எதையும் சாராது
தனித்து நின்று தன்னுடைய பெருமையை உணர்த்துபவள்.குஹை என்பது மறைவிடம் அம்பாள் ஞானத்தின்
மறை பொருளாக இருந்து சாதாரண் ஜீவராசிகளால் எளிதி உண்ரப் படமுடியாதவள்.வீடு பேறு
என்னும் மோக்ஷம் வழங்கி ஜீவாத்மாக்களுக்க் முக்தி அளிப்பவள்.அனைத்துவிதமான மூன்றுகளான
முக்தேவர்கள்,முச்சக்தி, மூவுலகம், மூன்று குணம், முக்காலம், முத்தொழில் போன்ற அனைத்திற்கும்
முதன்மையாகி புராதணமானவள். பூர்,புவ,சுவ என்னும் மூன்று உலகங்களிலும் போற்றி வணங்கப்
படுபவள். ப்ரம்ம விஷ்ணு ருத்ர எனும் மும்மூர்த்திகளின் ரூபங்களின் ஐக்கிய வடிவமானவள்.
மூன்று உயர்வான ரிஷிகள்,தேவர்கள் மற்றும் கடவுள்களின் தலைவியானவள் ப்ரபஞ்சத்தின் தலைவியானவள்.
த்ர்யக்ஷரீ, திவ்யகந்தாட்யா, ஸிந்தூர திலகாம்சிதா |
உமா, ஸைலேந்த்ரதனயா, கௌரீ, கந்தர்வ ஸேவிதா || 126 ||
த்ரியக்ஷரீ |
ப்ரணவத்தின் வடிவமான ஓம் ன்
அகாரம், உகாரம் மகாரம் ங்களின் வடிவமானவள் |
திவ்ய |
தெய்வீகமா ன பெருமை மிகுந்த |
கந்த |
நறுமணம் |
ஆட்யா |
கொண்டு திகழ்பவள் |
சிந்தூர |
குங்குமம் |
திலகம் |
நெற்றிப்பொட்டு |
அஞ்சிதா |
அலங்கரிக்கப் பட்டிருத்தல் |
உமா |
பார்வதி தேவி சிவனும் லக்ஷ்மியும் |
சைல |
மலை ,பர்வதம் |
இந்த்ர |
தலைவன், அரசன் |
தனயா |
புத்திரி,மகள் |
கௌரி |
வெளிர் மஞ்சள் கலந்த சிவந்த
நிறமுடையவள் |
கந்தர்வ |
கந்தர்வகளால் |
சேவிதா |
சேவித்து வணங்கப் படுபவள் |
ஓம் என்னும் ப்ரனவ மந்திரத்தின் அக்ஷரங்களான அகார,உகார மகாரங்களின் வடிவமாகத்
திகழ்பள். தன் மீது தெய்வீகமான
நறுமனம் மிகுந்து திகழ்பவள்.நெற்றியில் சிந்தூரத்திலான நெறிப் பொடினைக் கொண்டு அலங்கரிக்கப்
படுபவள்.உமா வின் அக்ஷரங்களான் உகாரத்தில் சிவபெருமானும்,மகாரத்தில் மஹாலக்ஷ்மியும்
இணைந்திருந்து உமா என்னும் மங்களமாகத் திகழ்பவள்.ஹிமவான் என்னும் மலை அரசனின் மகளாகப்
பிறந்து பர்வத குமாரியானதல் பார்வதியானவள்.வெளிர் மஞ்சளும் சிவப்பும் கலந்த அழகான
வண்ணத்தில் மிளிர்பவள்.பெருமை கொண்ட கந்தர்வர்களால் சேவித்து வணங்கப் படுபவள்
விஸ்வகர்பா, ஸ்வர்ணகர்பா,உவரதா வாகதீஸ்வரீ |
த்யானகம்யா,உபரிச்சேத்யா, ஜ்ஞானதா, ஜ்ஞானவிக்ரஹா || 127
விஷ்வ |
உலகம்,ப்ரபஞ்சம் |
கர்பா |
கருவாக
தன்னில் சுமந்தவள் ப்ரபஞ்சமாதா |
ஸ்வர்னகர்பா |
பொன்னிறமக
மிளிந்து ப்ரபஞ்சத் தோற்றத்தின்போது தனித்து மின்னுபவள் |
உ/அவரதா |
வரமருளாது
அபகாரம் செய்து தீவினையாளர்களை தண்டிப்பவள் |
வாக |
பேச்சு
குரல், வாக்கு |
ஈஸ்வரீ |
அவைகளின்
அதிபதி தலைவி |
த்யான |
உண்மையான
த்யானத்தினால் |
கம்யா |
அடையக்
கூடியவள் |
அபரிதா |
வரையறுக்கப்படுதல் |
சேத்யா |
முடியாத,
இயலாதவள் |
ஜ்ஞானதா |
ப்ரம்ம
ஞானத்தை அருள்பவள் |
ஜ்ஞான |
மெய்
ஞானத்தின் |
விக்ரஹா |
வடிவமாகத்திகழ்பவள் |
ஊழிக்காலம்
முடிந்தபின் ப்ரபஞ்ச உற்பத்தியின் போது அனைத்தையுமே தன் கருவாக சுமந்து உற்பத்தியின்
தாயாக ப்ரபஞ்ச மாதாவானவள்.அந்த ப்ரபஞ்சத்தோற்றத்தின் பொழுது அம்பாள் பொன்னிறமான வண்ணத்தில்
மிளிர்ந்து மின்னுபவள்.வ்ரங்கள் அருளும் தெய்வமான அம்பாள் தீவினையாளர்களுக்கு அபகாரம்
செய்து அவர்களை தண்டிப்பவள்.வாக்கு,குரல் மற்றின் பேச்சின் தலிவியானவள்.உண்மையான் த்யானத்தினால்
அடையக்கூடியவள். அம்பாள் எந்தவிதமான வரையறைக்கும் உட்படாதவள்.வரையறுக்கப் பட முடியாதவள்.
மெய்ஞானத்தின் வடிவமாகத்திகழ்ந்து, ப்ரம்ம ஞானத்தை ஜீவாத்மாக்களுக்கு அருள்பவள்.
இத்துடன் இந்த இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்.இவைகளை ஒலி
வடிவமாகவும் தந்துள்ளேன் கேட்டும் படித்தும் மகிழ்ந்து அம்பாளின் பேருட் கருணைக்கும்
சர்வேஸ்வரரின் கடாக்ஷத்துக்கும் பாத்திரமாகுங்கள்.
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
செவ்வாய்க்கிழமை ஜூலை, 30, , 2024
No comments:
Post a Comment