Monday, July 22, 2024

 

262.மஹா கணபதிஸ்வாமியின்                                   சோடேஸ நாமாவளிகள்.

 

நமது ஸநாதனத்தில்  பல்வேறு தெய்வங்கள் உள்ளன. அவர்களின் முதலில் வணங்கக் கூடிய முதல் பொருள் கடவுளாக விளங்குபவர் விநயாக பெருமான்.

அவருக்கு விநாயகர், கணபதி, யானைமுகம் கொண்டவர் என பல பெயர்கள் உள்ளன.அவருக்கு                                                                                                               1. சோடேஸ நாமாவளிகள்   16பெயர்கள்                                                                                

2.அஷ்டோத்ரங்கள்                                                                                                108நாமங்கள்                                                                                                                          3.ஸஹஸ்ர நாமங்கள்                                                                                                        1008 போற்றிகள்


கணபதி என்ற பெயரில் மொத்தம் பல  பெயர்கள் உள்ள நிலையில், விநாயகரின் உருவத்தை வைத்தும் அவர் செய்யும் அருஞ்செயல்களை வைத்தும் அவருக்கு பெயர்கள் உள்ளன. அப்படி விநாயகருக்கு உள்ள 16 பெயர்களான ஸோடேஸ நாமாவளிகள்  என்ன என்பதை இங்கு விளக்கத்தோடு பார்ப்போம்

விநாயகரின் 16 பெயர்கள்!

 

சுமுகாயகர்

அழகிய முகம் கொண்டவர்

ஏகதந்தர்

ஒற்றைத் தந்தம் கொண்டவர்

கபிலர்

பழுப்பு நிறமானவர்

கஜகர்ணர்

யானை காது கொண்டவர்

 

லம்போதரர்

பெரிய வயிற்றை உடையவர்

விகடன்

புத்திக்கூர்மை மிக்கவர்

விக்னராஜர்

தடைகளை அகற்றுபவர் அல்லது அழிப்பவர்

விநாயகர்

மேலான தலைவர்

 

துமகேது

அசுரன் தாமோதரனை வென்றவர்

கணாத்யட்சர்

பூதகணங்களுக்கு எல்லாம் தலைவர்

பாலச்சந்திரர்

பிறை சந்திரனை சூடியவர்

கஜானனர்

யானைமுகம் கொண்டவர்.

வக்ரதுண்டர்

வளைந்த துதிக்கை கொண்டவர்

சூர்ப்பகர்ணர்

முறம் போன்ற காது கொண்டவர்

ஹேரம்பர்

ஐந்து முகங்களை கொண்டவர்

ஸ்கந்த பூர்வஜர்

கந்தன் எனும் முருகனுக்கு முன் பிறந்தவர்

 

இந்த அழகிய ஸ்லோகத்தை பொருளோடு படித்துணர்ந்து மஹா கணபதியின் திவ்ய சோடேஸ நாமாவளிகளை தினம் ப்ரார்த்தி த்து அவரருள் பெற்றுய்வோமாக.

சிவதாஸன் ஜகன்நாதன்

திங்கள்,  ஜூலை 22,  2024

 

No comments:

Post a Comment