ஶ்ரீலலிதா
சஹஸ்ரநாமம் 48
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
வியாழன் ஜூலை, 25, , 2024
அனைவருக்கும் வணக்கம்
நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில் யோகினி ந்யாஸம் என்ற பகுதியை நேற்றோடு
பார்த்து முடித்துவிட்டு இன்று முதல் விபூதி விஸ்தாரம் என்ற
பகுதியைப் பார்க்கப் போகின்றோம்.
இன்று முதல் ஸ்வாஹா என்ற 535 வதுநாமாவளியில் 110 வது ஸ்லோகத்தில்
தொடங்கி அம்பாளின் 989 வது நாமாவளி வரையில் அதாவது 180 வது ஸ்லோகம் வரையில் இந்த அம்பாளின்
விபூதியை விஸ்தரிக்கும் நாமாவளிகளையே பார்க்கப் போகின்றோம்.கடைசியாக உள்ள 11 நாமாவளிகள்
கொண்ட மூன்று ஸ்லோகங்கள் அம்பாளின் சிவ சக்தி ஐக்யத்தைக் கூறுகின்றன். .
ஆக இன்று 110 111, மற்றும் 112
ஆவது ஸ்லோகங்களைப் பார்க் கப்போகின்றோம்.இதில்
110 வது ஸ்லோகத்தின் முதல் பாதி யோஹினீ ந்யாசம் பற்றியது.அதை நான் நேற்றே விளக்கிவிட்டேன்.அதன்
இரண்டாம் பகுதியிலிருந்துதான் விபூதி விஸ்தாரம் ஆரம்பிக்கின்றது .அதிலிருந்து இன்று
ஆரம்பிப்போம்.
இந்த எல்லா ஸ்லோகங்களுமே அம்பாளின் பேரருட் கருணை எப்படி
இந்த ப்ரபஞ்சம் முழுதும் பரவி அனைத்து நிலைகளிலும் காத்து அருள் புரிந்து இகத்திலிருந்து
விடுதலையும் பரலோக ப்ராப்தியும் அளிக்கிறாள் அம்பாள் என்பதை விளக்கு கின்றன.
ஸர்வௌ தனப்ரீதசித்தா, யாகின்யம்பா ஸ்வரூபிணீ |
ஸ்வாஹா, ஸ்வதா,உமதி, ர்மேதா, ஸ்ருதிஃ, ஸ்ம்றுதி, ரனுத்தமா || 110 ||
ஸ்வாஹா |
யாகங்களின் அர்ப்பணிப்பு
மந்திர உச்சாடனமும் அதன் அர்ப்பணிப்புமானவள் |
ஸ்வதா |
ப்ரார்த்தனைகளில் வரும் ஸ்வதா
என்ற உச்சாடண மாயிருப்பவள் |
அமதி |
அஞ்ஞானத்திலும் இருப்பவள் |
மேதா |
மேன்மைடான ஞானவடிவமானவள் |
ஸ்ருதி |
வேதங்கள்,வேதங்களில் இருப்பவள் |
ஸ்ம்ருதி |
வேதங்களை விவரிக்கும் சாரங்களான
புராண மற்றும் இதிகாஸங்களிலும் இருப்பவள் |
அனுத்தமா |
அதி உன்னதமான நிலையில் |
புண்யகீர்திஃ, புண்யலப்யா, புண்யஸ்ரவண கீர்தனா |
புலோமஜார்சிதா, பந்தமோசனீ, பந்துராலகா || 111 ||
புண்ய |
புனிதம்,பாக்யம் |
கீர்த்தி |
புகழ்,பெருமை,மேன்மை,உடையவள் |
புண்ய |
புன்னியத்தினால் |
லப்யா |
அடையக் கூடியவள் |
புண்ய |
புனிதமான,பக்திமிகுந்த |
ஸ்வரண |
காதினால் கேட்கப் படும் |
கீர்த்தனா |
கீர்த்தனைகளை பாடுவோருக்குமட்டுமல்லது
கேட்பவருக்கும்பாக்யம் அளிப்பவள் |
புலோமன் |
புலோமன் என்ற தேவன் |
ஜா, |
மகள், புலோமனின் மகளான இந்திராணி |
அர்ச்சிதா |
அர்ச்சிக்கப் பட்டு துதிக்கப்
படுபவள் |
பந்த |
பந்த பாஸத் தளைகள்,கட்டுகள் |
மோஸனீ |
விடுவிப்பவள் |
பர்பரா |
அழகாக சுருண்டு உள்ள |
அலகா |
முடிக் கற்றை,கூந்தல் |
விமர்ஸரூபிணீ, வித்யா, வியதாதி ஜகத்ப்ரஸூஃ |
ஸர்வ வ்யாதி ப்ரஸமனீ, ஸர்வம்றுத்யு னிவாரிணீ || 112 ||
விமர்ஷ |
காரணம் ,சிந்தனை, ப்ரதிபலிப்பு |
ரூபிணீ |
வடிவமானவள். ப்ரம்மமே ப்ரபஞ்சத்தின்
காரணமாகும்.அம்பாள் அந்த ப்ரம்மத்தின் ப்ரதிபலிப்பனவள்.ஸ்ருஷ்டிக்கு காரணமானவள் |
வித்யா |
ஞான ஸ்வரூபமான்வள் |
வியதா |
பரந்து விரிந்து பரவிய வானம் |
ஆதி |
முதலானவை களும் |
ஜகத் |
பரவி விரிந்த பூமி முழுவதும் |
ப்ரஸூ |
படைத்து உண்டாக்கியவள் அதன்காரணமாக
ஸ்ருஷ்டிகர்த்தாவானவள் |
சர்வவியாதி |
பூத உடல் மற்றும் ஸூக்ஷும
உடலான மனம் ஆன்மா போன்றவைகளின் வியாதிகளை |
ப்ரஷமனீ |
தீர்த்துப் போக்குபவள்.பிறப்பு,இறப்பு
என்ற சுழர்ச்சியை நீக்குபவள் |
சர்வ |
அனைத்து விதமான |
ம்ருத்யு |
மரணம் போன்ற துன்பங்களிலிருந்தும் |
நிவாரணீ |
காத்து நிவாரணம் அளிப்பவள் |
இன்று இந்த ஸ்லோகங்களுடன்
இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்
இந்தப் பதிவுகளை ஒலி மூலமாகவும் தந்துள்ளேன் .கேட்டு மகிந்து அம்பாளின் பேருட் கருணைக்கு பாத்திரமாகுங்கள்.
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
வியாழன் ஜூலை, 25, , 2024
No comments:
Post a Comment