Monday, July 8, 2024

 

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 31

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்                                                                                

திங்கள், ஜூலை  8, 2024

அனைவருக்கும் வணக்கம்

இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 70,71 மற்றும் 72 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்.

இந்த ஸ்லோகங்களிலும் அம்பாளின் பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபங்களின் வர்ணையே தொடர்கின்றது.                                          .

னாராயணீ, னாதரூபா, னாமரூப விவர்ஜிதா |
ஹ்ரீம்காரீ, ஹ்ரீமதீ, ஹ்றுத்யா, ஹேயோபாதேய வர்ஜிதா || 70 ||

நாராயணீ

நாராயண அம்சத்தின் பெண் வடிவம்

நாத

ஒலியின்

ரூபா

வடிவமானவள்,ஓம் எனும் நாத வடிவம்

நாமரூப

பெயர் வடிவம்

விவர்ஜிதா

இல்லாதவள்,அப்பார்ப் பட்டவள்

ஹ்ரீம்காரீ

ஹ்ரீம் எனும் பீஜாக்ஷர மந்திரமானவள்

ஹ்ரீமதீ

ஆர்ப்பாட்டமற்ற அடக்கமானவள்

ஹ்ருத்யா

இதயத்தில் வசிக்கும் ஹ்ருதயவாசினி

ஹேய

கழித்தல், விலக்குதல்

உபாத்யேய

தேர்ந்தெடுத்தல் ,அனுமதித்தல்

வர்ஜ்தா

இல்லாதவள், அப்பார்ப் பட்டவள்

 

 

அம்பாள் நாராயணனின் பெண் அம்சமான நராயனீயாக விளங்குகிறாள்.அவளே நாராயணின் தங்கையாகவும் கருதப் படுகிறாள்.ஓம் எனும்  நாத ஒலிவடிவின் ரூபமாக விளங்குகிறாள்.தனக்கென ஒரு குறிப்ப்ட்ட பெயர் வடிவம் இல்லாது அதற்கு அப்பார்ப் பட்டவளாவாள். ஹ்ரீம் எனும் பீஜாக்ஷர மந்திரமானவள்.ஆர்ப்பாட்டங்களுக்கு அப்பார்ப் பட்டு அடக்கமானவள்.ஜீவாத்மாக்களின் ஹ்ருதயத்தில் வசிக்கும் ஹ்ருதயவாஸினி யாவாள்.விருப்பு வெருப்பு தேர்ந்தெடுத்தல் அனுமதித்தல் போன்ற செயல்களுக்கு அப்பார்ப் பட்டவள்.


ராஜராஜார்சிதா, ராஜ்ஞீ, ரம்யா, ராஜீவலோசனா |
ரம்ஜனீ, ரமணீ, ரஸ்யா, ரணத்கிங்கிணி மேகலா || 71 ||

ராஜ ராஜ

பேரசர்களாலும் மாமன்னர்களாலும்

அர்ச்சிதா

துதித்து அர்ச்சிக் கப்படுபவள்

ராஜ்ஞீ

ப்ரபஞ்சத்தின் மஹாராணியானவள்

ரம்யா

பேரழகும் வனப்பும் நிறைந்தவள்

ராஜீவ

தாமரை,மான்,மீன்

லோசனா

விழியாள்

ரஞ்சனீ

ஜீவன்களை ,மகிழ்ச்சிக்குட்படுத்துபவள்

ரமணீ

இன்பமும் மகிழ்ச்சியுமானவள்

ரஸ்யா

ப்ரபஞ்சத்தின் சாரமாயிருப்பவள்

ரணத்

ஒலிக்கும்

கிண்கிணி

சிறுமணி ஒலி

மேகலா

ஒட்டியாணம் அணிந்தவள்.

மன்னாதி மன்னர்களாலும் துதித்து வணங்கப் பெறுபவள் அம்பாள்.இந்த ப்ரபஞ்சத்தின் தலைவரான மஹேஸ்வரரின் மனைவியாய் அனைத்தின் மஹாராணியானவள்.பேரழகும் வனப்பும் மிகுந்தவள்.தாமர இதழ்,மானின் விழி மற்றும் மீன் விழிகளை கொண்டவள்.இன்பமும் மகிழ்ச்சியும் நிறைந்தவள்.அதோடு ஜீவராஸிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துபவள். ப்ரபஞ்சத்தின் சாரமாயிருப்பவள்.கிண்கிணி என்று மெல்லிதாக ஒலிக்கும் மேகலை என்றொ ஒட்டியானத்தை இடையில் அணிந்தவள்

ரமா, ராகேந்துவதனா, ரதிரூபா, ரதிப்ரியா |
ரக்ஷாகரீ, ராக்ஷஸக்னீ, ராமா, ரமணலம்படா || 72 ||

ரமா

ஐஷ்வர்யம் அருளும் மஹாலக்ஷ்மி

ராகாஇந்து

முழு நிலவு

வதனா

மதிமுகம் கொண்டவள்

ரதி ரூபா

ரதியை ஒத்த பேரழகு உடையவள்

ரதிப்ரியா

ரதியிடம் ப்ரியம் கொண்டவள்

ரக்ஷாகரீ

ரக்ஷித்து போஷிப்பவள்

ராக்ஷஷ

அரக்கன்,அரக்க குணமுடையவர்கள்

அக்னி

தீயாய் பொசுக்கி அழிப்பவள்

ராமா

வஸீகரமும் நளினமும் கொண்டவள்

ரமண

மனதிற்கினிய

லம்படா

வசீகர்மும் கவர்ச்சியுமான் தோற்றமுடையவள்

 

ஐஷ்வர்யம் அருளும் மஹாலக்ஷ்மி உருவானவள்.முழு நிலா போன்ற மதிமுகம் கொண்டவள்.ரதியின் அழகுக்கு இணையான பேரழகைக் கொண்டவள்.ரதியிடம் மிகுந்த ப்ரியம் கொண்டவள்.ஜீவராசிகளை காத்து அருள்பவள்.அரக்க குணம் கொண்ட தீயவ்ரகளை தீயாய்ப் பொசுக்கி அழிப்பவள்.வசீகரமும் நளினமும் கொண்டவள்.பரமேஸ்வ்ர ரின் மனதை மகிழ்விக்கும் அழகும் கவர்ச்சியும் கொண்டவள்

இந்த விளக்கங்களை voice ஆகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு அம்பாளின் பேர ருளுக்கு பாத்திரமாகுங்கள்

இன்று இந்த  ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்.

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

திங்கள், ஜூலை  8, 2024

 

No comments:

Post a Comment