Sunday, July 21, 2024

 

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 44

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

ஞாயிறு ஜூலை,  21 , 2024

அனைவருக்கும் வணக்கம்

நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில் யோகினி ந்யாஸம் என்ற பகுதியை பார்த்துக்கொண்டிடுக்கின்றோம்.

இந்த பிரிவில் வரும் நாமாவளிகள் குண்டலிணீ சக்கரத்தில் ப்ரதிபலிக்கும் யோகினி தேவதைகளை விவரிக்கும் நாமங்களாகும்.முதலில் விஷுக்தி என்ற ஐந்தாவது சக்கரத்தில் வழிநடத்தும் டாகினீஸ்வரி என்ற யோகினியைப் பற்றிப் பார்த்தோம். தொடர்ந்து நேற்று நாலாவது குண்டலிணீ சக்கரமான அனாஹத த்தில் நிலைகொண்டுள்ள யோகினி சக்தியான ராகிண்யம்பா என்ற யோகினியைப் பற்றிப் பார்த்டோம் .இன்று மூன்றாவது குண்டலிணீ ஸ்தானமான மணிபூரத்தில் நிலைகொண்டிருக்கும் லாகிண்யம்பா என்ற யோகினியைப் பற்றிப் இன்றைய 102 மற்றும்103 வது ஆன இரண்டு ஸ்லோகங்களிலும் பார்ப்போம்.

102) மணிபூராப்ஜ னிலயா, வதனத்ரய ஸம்யுதா |
வஜ்ராதிகாயுதோபேதா, டாமர்யாதிபி ராவ்றுதா || 102 ||

மணிபூர

மூன்றாம் சக்கரமான மணிபூரத்தில்

ஆப்ஜ

தாமரை இதழ்கள் பத்து கொண்டது

னிலயா

நிலைத்திருப்பவள்

வதன

முகங்கள்

த்ரய

மூன்று

ஸம்யுதா

கொண்டிருப்பவள்

வஜ்ர

இந்திரனின் வஜ்ராயுதம்

ஆதிக

போன்ற, முதலான

ஆயுத

ஆயுதங்கள்

உபேத

தாங்கியிருத்தல்

டாமரி

மணிபூர சக்ர யோகிணியை சாழ்ந்துள்ள தேவதைகளுள் ஒருவர்

ஆதிபி

அவரை ஒத்த மற்ற்றவர்களாளும்

ஆவ்ருதா

சூழப் பட்டுள்ளவள்

 

குண்டலிணியின் மூன்றாம் ஸ்தானமான மணிபூரத்தில் அம்பாள் பத்து இதழ்களைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருக்கின்றாள்.இந்த பத்து இதழ்களும் பத்து அக்ஷரங்களையும் மற்றும் அம்பாளை மணிபூரத்தில் சூழ்ந்துள்ள சக்தி தேவதைகளையும் குறிப்பிடுவனவாகும்.அவள் மூன்று முகங்களைக் கொண்டு விளங்குகிறாள். பலமும் ஆற்றலும் மிக்க இந்திரனின் வஜ்ராயுதம் மற்றும் அதனை ஒத்த ஆயுதங்களையும் தாங்கி உள்ளாள். மணிபூர சக்கர யோகினியை சூழ்ந்துள்ள டாமரி என்ற சக்தி தேவதை மற்றும் அவளை ஒத்த பத்து சக்தி தேவதை களாலும்  சூழப் பட்டுள்ளாள்.


103) ரக்தவர்ணா, மாம்ஸனிஷ்டா, குடான்ன ப்ரீதமானஸா |
ஸமஸ்த பக்தஸுகதா, லாகின்யம்பா ஸ்வரூபிணீ || 103 ||

ரக்த

ரத்தத்தின்

வர்ணா

வண்ணமான் சிவந்த நிறமுடையவள்

மாம்ஸ

ஊன், மாமிஸம்

நிஷ்டா

நிறைந்திருந்து வழி நடத்துபவள்

குடான்ன

இனிப்பான் வெல்லம் கலந்த சாதம்

ப்ரீத

பிரிய,விருப்பமான

மானஸா

மனதை உடையவள்

ஸமஸ்த

அனைத்து

பக்த

பக்தர்களுக்கும்

சுகதா

சுகம் அளிப்பவள்

லாகின்யம்பா

லாகினியம்பாள் என்ற பெயருடைய

ஸ்வரூபிணீ

சொரூபத்தை உடையள்

 

அம்பாள் ரத்த சிவப்பு வண்ணத்தில் மிளிர்கின்றாள்.அம்பாள் வெண்மையாக சத்வ குணத்தையும்,சிவப்பாக ரஜோ குணத்தையும்,கருப்பாக தாமஸ குணத்தையும் வெளிக்காட்டுகின்றாள்.இங்கு ரத்த வண்ண சிவப்பு என்பது அம்பாள் ரஜோ குணத்தில் வீற்றிருப்பதைக் காட்டுகின்றது. ஊனான மாமிஸத்தில் நிறைந்து இருந்து ஜீவன்களை வழி நடத்துகின்றாள். ஊன் இல்லாத வெரும் எலும்பும் தோலும் மட்டும் கொண்ட உடல் நிறைவடையாது. எனவே உடலுக்கு முழுமையான வடிவம் கொடுக்கும் ஊனாக அம்பாள் திகழ்கிறாள்.இனிப்பான வெல்லமும் அரிசியும் கலந்து சமைக் கப் பட்ட அன்னமான சர்க்கரைப் பொங்கலை மிகவும்  விரும்பும் மனதை உடையவள்.ப்ரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராஸிகளுக்கும் சுகத்தை அளிப்பவள்.இத்தகைய பெருமைகளை உடைய லாகினி என்ற ஸ்வரூபம் உள்ள அம்பாளாகத் திகழ்கின்றாள்.

இந்த பதிவுகளை voice ஆகவு தினம் தந்துவருகிறேன் அதையும் கேட்டு உணர்ந்து மகிழ்ந்து அம்பாளின் பேறருட் கருணைக்குப் பாத்திரமாகுங்கள்

இன்று இந்த  ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்.

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

ஞாயிறு ஜூலை,  21 , 2024

 

No comments:

Post a Comment