ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 46
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
செவ்வாய் ஜூலை, 23 , 2024
அனைவருக்கும் வணக்கம்
நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில்
யோகினி ந்யாஸம் என்ற பகுதியை பார்த்துக்கொண்டிடுக்கின்றோம்.
இந்த பிரிவில் வரும் நாமாவளிகள்
குண்டலிணீ சக்கரத்தில் ப்ரதிபலிக்கும் யோகினி தேவதைகளை விவரிக்கும் நாமங்களாகும்.முதலில் விஷுக்தி என்ற ஐந்தாவது சக்கரத்தில்
வழிநடத்தும் டாகினீஸ்வரி என்ற யோகினியைப் பற்றிப் பார்த்தோம்.
தொடர்ந்து நாலாவது குண்டலிணீ சக்கரமான அனாஹத த்தில் நிலைகொண்டுள்ள யோகினி சக்தியான ராகிண்யம்பா என்ற யோகினியைப் பற்றிப் பார்த்தோம்.பின் . மூன்றாவது குண்டலிணீ
ஸ்தானமான மணிபூரத்தில் நிலைகொண்டிருக்கும் லாகிண்யம்பா என்ற யோகினியைப் பற்றிப் பார்த்தோம்
நேற்றைய பதிவில்104 மற்றும்105 வது ஆன இரண்டு ஸ்லோகங்களிலும் இரண்டாவது குண்டலிணீ
சக்கரமான ஸ்வாதிஷ்டானத்தில் உறைந்திருக்கும் காகினியம்பா என்ற யோகினியைப் பற்றிப் பார்த்தோம்..இந்த
ஸ்லோகங்கள் காகினி தேவியின் புறத்தோற்றம் மற்றும் இயல்புகளை விவரிக்கின்றன்.
இன்றைய ஸ்லோகங்களில் மூலாதாரம் மற்றும் ஆக்ஞாசக்கரத்தில் அமைந்துள்ள யோஹிணீ தேவியரைப் பற்றிப்
பார்ப்போம்.மூலாதாரமான முதல் ஸ்தானத்தில் ஸாகின்யம்பா என்ற யோகிணீயும் ,புருவ மத்தியில் உள்ள ஆறாவது ஸ்தானமான் ஆக்ஞையில்
ஹாகினீ என்ற ரூபத்திலும் அம்பாள்
நிலை கொண்டுள்ளாள்.
ஆக இன்று 106,107, மற்றும் 108 ஆவது ஸ்லோகங்களைப்
பார்க் கப்போகின்றோம்.
மூலா தாராம்புஜாரூடா, பஞ்சவக்த்ரா,உஸ்திஸம்ஸ்திதா |
அங்குஸாதி ப்ரஹரணா, வரதாதி னிஷேவிதா || 106 ||
மூலாதார |
முதல் சக்தி கேந்திரம்,சிவப்பு
நிறம் கொண்டது |
அம்புஜ |
நாங்கு இதழ்களைக் கொண்ட தாமரை |
ரூடா |
முளைத்தல்,கொடிபோல் படர்ந்திருத்தல் |
பஞ்ச |
ஐந்து |
வக்த்ரா |
முகங்களை உடையவள் |
உ/அஸ்தி |
எலும்பு |
சம்ஸ்திதா |
உள்ளிருந்து வழி நடத்துபவள் |
அங்குஸ |
அங்குஸம் |
ஆதி |
போன்ற, முதலான ஆயுதங்களைத் |
ப்ரஹரணா |
தாங்கியிருப்பவள் |
வரதா |
மூலாதாரத்தில் நிலைகொண்டுள்ள
சக்தி தேவதைகளுள் ஒருவர் |
ஆதி |
முதலிய |
நிஷேவிதா |
உபசரித்து பணி செய்யப் படுபவள் |
சக்தி ஸ்தானங்களில் முதல் ஸ்தானமான மூலாதாரத்தில் நாலு இதழ்களை கொண்ட
சிவந்த தாமரையில் அம்பாள் கொடிபோல் படர்ந்து நிலை கொண்டுள்ளாள்..ஐந்து முகங்களை உடையவள்.உடலின்
எலும்பின் உள் நிலைகொண்டு இருந்து வழி நடத்துபவள். அங்குஸம் போன்ற ஆயுதங்களை கையில்
கொண்டவள்.வரதா என்ற மூலாதாரத் தில் நிலைகொண்டுள்ல சக்தி தேவதியாலும் அவளை ஒத்த மற்ற
தேவதைகளாலும் சூழப் பட்டவள்.அவர்களால் பணியும் தொண்டும் செய்யப் படுபவள்.
முத்கௌதனா ஸக்த சித்தா, ஸாகின்யம்பா ஸ்வரூபிணீ |
ஆஜ்ஞா சக்ராப்ஜனிலயா, ஸுக்லவர்ணா, ஷடானனா || 107 ||
முத்க |
பச்சைப்பயறு உளுந்து போன்ற
பயறு வகைகள் |
ஓதன |
சமைக்கப் பட்ட அரிசி சாதம் |
ஸக்த |
பிரியமான,பிடித்தமான |
சித்தா |
மனமுடையவள் |
ஸாகின்யம்பா |
ஸாகினீ என்ற யோகினி ரூபம்
கொண்டவள் |
ஆக்ஞா சக்ர |
அறாம்படி நிலை சக்திகேந்திரமான
ஆக்ஞா சக்கரம் ப்ருவ மத்திய்ல் உள்ள ஞான சக்கரம் |
ஆப்ஜ |
வெளிர் நிற ஈரிதழ் தாமரை
மலர் |
நிலயா |
அமர்ந்து நிலைகொண்டிருப்பவள் |
ஷுக்ல |
வெண்மையான வண்ணமுடையவள் |
ஷட |
ஆறு |
ஆனன |
முகங்களைக் கொண்டவள் |
|
|
பச்சைப் பயிறு உளுந்து போன்ற பயிறுகளை அரிசியுடன் சேர்த்து சமைக்கப் பட்ட
சாதத்தை பிரியமுடன் ஏற்கும் மனமுடையவள். இத்தகைய குணங்களைக் கொண்ட ஸாகினி அம்பாள்
மூலாதாரத் தில் நிலை கொண்டுள்ளாள்.
அடுத்து ஆறாவது ஸ்தானமான நெற்றியில் புருவ மத்தியில் அமைந்துள்ள ஆக்ஞா
சக்கரத்தில் வெளிர் நிற இரண்டு இதழ்களைக் கொண்ட் தாமரை மலரில் அமர்ந்து நிலைகொண்டுள்ளவள்.அம்பாள்
தூய வெண்மையான நிறமும் ஆறு முகங்களும் கொண்டவள்.
மஜ்ஜாஸம்ஸ்தா, ஹம்ஸவதீ முக்யஸக்தி ஸமன்விதா |
ஹரித்ரான்னைக ரஸிகா, ஹாகினீ ரூபதாரிணீ || 108 ||
மஜ்ஜா |
எலும்பு மஜ்ஜை |
சம்ஸ்த்தா |
உள்ளிருந்து
வழி நத்துபவள்ட |
ஹம்ஸவதி |
ஆக்ஞா சக்கரத்தில்
சூழ்ந்துள்ள சக்தி தேவதை |
முக்ய |
ப்ரதான, முக்கியமான |
ஷக்தி |
சக்தி தேவதைகள்
க்ஷமவதி |
ஸமன்விதா |
தொடர்புகொண்டு
இணைந்து இருப்பவள் |
ஹரித்ரா |
மஞ்சள் |
அன்னைக |
கலந்த சாதம் |
ரஸிகா |
மிகுந்த விருப்பமுடையவள் |
ஹாகினீ |
ஹாகினீ
என்ற யோகினீ ரூபம் |
ரூப |
வடிவம் |
தாரிணீ |
தாங்கியவள் |
அம்பாள் எலும்பின் உள்ளே இருக்கும் மஜ்ஜையில் ஸ்தானம் கொண்டு வழி
நடத்துகிறாள். ஆக்ஞா சக்கரத்தின் சூழ்ந்துள்ள சக்தி தேவதைகளான ஹம்சவதி மற்றும் க்ஷமாவதி
என்பவர்களால் சூழப் பட்டு பணி செய்யப் படுகின்றாள்.மஞ்சள் கலந்து அரிசியுடன் சமைக்கப்
பட்ட அன்னத்தை விரும்புபவள்.இத்தகைய குணங்களை உடைய யோகிணிதேவி ஹாகினி என்ற பெயர் கொண்டு
விளங்குகிறாள்.
இந்த பதிவுகளை voice ஆகவு தினம் தந்துவருகிறேன் அதையும் கேட்டு
உணர்ந்து மகிழ்ந்து அம்பாளின் பேறருட் கருணைக்குப் பாத்திரமாகுங்கள்
இன்று இந்த ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்
பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன்
ஜகன்நாதன்
செவ்வாய் ஜூலை, 23 , 2024
No comments:
Post a Comment