Tuesday, July 2, 2024

 

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 26

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்                                                        

செவ்வாய், ஜூலை, 2, 2024

அனைவருக்கும் வணக்கம்

இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் ,54,55 மற்றும் 56 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்

இந்த மூன்று ஸ்லோகங்களும் பின் வரும் சில ஸ்லோகங்களும் அம்பாளின் சகுண உபாஸனையை சொல்லும் ஸ்லோகங்களாகும்.இவைகளும் அம்பாளின் ஸ்தூல ஸ்வரூபங்களையே விவரிக்கின்றன

 

மஹாரூபா, மஹாபூஜ்யா, மஹாபாதக னாஸினீ |
மஹாமாயா, மஹாஸத்த்வா, மஹாக்தி ர்மஹாரதிஃ || 54 ||

மஹாபோகா, மஹைஸ்வர்யா, மஹாவீர்யா, மஹாபலா |
மஹாபுத்தி, ர்மஹாஸித்தி, ர்மஹாயோகேஸ்வரேஸ்வரீ || 55 ||


மஹாதந்த்ரா, மஹாமந்த்ரா, மஹாயந்த்ரா, மஹாஸனா |
மஹாயாக க்ரமாராத்யா, மஹாபைரவ பூஜிதா || 56 ||

 

மஹாரூபா, மஹாபூஜ்யா, மஹாபாதக னாஸினீ |
மஹாமாயா, மஹாஸத்த்வா, மஹாக்தி ர்மஹாரதிஃ || 54 |

மஹா

ப்ரண்டமாய் பரந்து விரிந்த

ரூபா

உருவத்திற்கு சொந்தமானவள்

மஹா

அதி உன்னத உயர்ந்த ஸ்தானத்தில் உள்ள

பூஜ்யா

பூஜைக்குரிய

மஹாபாதக

மாபெரும் பாதகத்தையும் குற்றத்தையும்

நாஸினீ

அழித்து ( மன்னித்தருள்பவள் )

மஹா

மிகப் பெரிய

மாயா

மாய வலையாய் விளங்குபவள்

மஹா சத்வா

முக்குணங்களில் முதன்மையான சத்வ குன வடிவாக விளங்கி அதன் ப்ரதியானவள்

மஹா ஷக்தி

அளப்பரிய ஆற்றல் கொண்டவள்

மஹா

மாபெரும்

ரதீ

பேரானந்தத்திர்க் குரியவள்

அம்பாள் ப்ரம்மாண்டமாய் பரந்து விரிந்த ரூபத்தினை உடையவள். அதி உன்னதமான உயர்ந்த ஸ்தானஸ்தில் உள்ள பூஜைக்கு உரியவள்.பெரும் பாதகங்களைய்ம் குற்றச் செயல்களையும் அழித்து மன்னித்தருள்பவள்.ப்ரபஞ்சத்தின் பெரிய மாய வலையாய் விளங்குபவள்.மூன்று குணங்களில் முதன்மையான சத்வ குணத்தின் வடிவமாய் விளங்கி அதனைப் ப்ரதிபலிப்பவள்.அளப்பரிய ஆற்றல் கொண்டவள்.மாபெரும் பேரானந்தத்திர்க்கு உரியவள்

 

மஹாபோகா, மஹைஸ்வர்யா, மஹாவீர்யா, மஹாபலா |
மஹாபுத்தி, ர்மஹாஸித்தி, ர்மஹாயோகேஸ்வரேஸ்வரீ || 55 ||

மஹா

பெரிய

போஹா

செல்வமாகத் திகழ்பவள்

மஹா

பெருமையான

ஐஷ்வர்யா

அனைத்தையும் மேலாட்சி செய்பவள்

மஹா வீர்யா

அளவில்லாத வீர்யமும் வல்லமையும் மிக்கவள்

மஹா பலா

பெரும் திட பலம் கொண்டவள்

மஹாபுத்தி

ஞானத்தின் மகுடமாய் ஜ்வலிப்பவள்

மஹா சித்தி

வீடு பேறு என்ற் இறுதி இலக்காக நிலைப்பவள்

மஹா

மிகப் பெரிய

யோகேஷ்வர்

யோகிகளுக்கெல்லாம்

ஈஷ்வரி

தலைமையான ஈஸ்வரியானவள்

 

 

 

அம்பாள் பெரும் செல்வமாகத் திகழ்பவள்.உலகின் பெருமையான அனைத்தையும் மேலாட்சி செய்பவள். அளவற்ற வீர்யமும் வலிமையும் கொண்டவள். பெரும் திட பலம் கொண்டவள்.ஞானத்தின் மகுடமாய் ஜ்வலிப்பவள்.வீடு பேறு என்ற இறுதி இலக்காக நிலைத்திருப்பவள்.மிகப் பெரிய யோகிகளுக்கெல்லாம் தலைமையான ஈஸ்வரியாகத் திகழ்பவள்

 

 

மஹாதந்த்ரா, மஹாமந்த்ரா, மஹாயந்த்ரா, மஹாஸனா |
மஹாயாக க்ரமாராத்யா, மஹாபைரவ பூஜிதா || 56 ||

மஹா தந்த்ரா

தந்த்ர சாஸ்த்ரங்களின் இறுதி இலக்கானவள்

மஹா மந்த்ரா

மந்திரங்களில் அதி உன்னதமானதானவள்

மஹாயந்த்ரா

வழிபாட்டு யந்திரங்களில் முதன்மையானவள்

மஹாஸனா

சிகரத்தில் ஆசனமிட்டு கொலுவிருப்பவள்

மஹா யாகக்ரம

யாக,யக்யங்களின் விதி முறைகளால்

ஆராத்யா

ஆராதிக்கப் படுபவள்

மஹா பைரவ

சிவனின் அம்ஸமான் மஹா பைரவரால்

பூஜிதா

பூஜிக்கப் ப்டுபவள்

தந்த்ர சாஸ்த்ரங்களின் இறுதி இலக்கானவள்.மந்திரங்களில் அதி உன்னதமான மந்திரமானவள்.வழிபாட்டு யந்திரங்களில் முதன்மையானவள்.சஹஸ்ர சிகரத்தில் ஆஸனமிட்டு கொலுவிருப்பவள் பெரும் யாக யக்யங்களின் விதி முறைகளால் ஆராதிக்கப் படுபவள்.சிவனின் அம்ஸமான் பைரவரால் பூஜிக்கப் படுபவள்

இந்த விளக்கங்களை voice ஆகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு அம்பாளின் பேர ருளுக்கு பாத்திரமாகுங்கள்

இன்று இந்த  ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்.

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

செவ்வாய், ஜூலை, 2, 2024

 

  


No comments:

Post a Comment