ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 32
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
செவ்வாய், ஜூலை 9, 2024
அனைவருக்கும் வணக்கம்
இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 73,74 மற்றும் 75 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்.
இந்த ஸ்லோகங்களிலும் அம்பாளின் பஞ்ச ப்ரம்ம
ஸ்வரூபங்களின் வர்ணையே தொடர்கின்றது.இந்த மூன்று ஸ்லோகங்களுடன் அம்பாளின் பஞ்ச ப்ரம்ம
ஸ்வரூபங்களின் வர்ணனை நிறைவுறுகின்றது.இவைகளில் அம்பாளின் உள்ளுறையும் சுபாவங்களும்
தன்மைகளும் விளக்கப் படுகின்றன. .
73) காம்யா, காமகளாரூபா, கதம்ப குஸுமப்ரியா |
கல்யாணீ, ஜகதீகந்தா, கருணாரஸ ஸாகரா || 73 ||
காம்யா |
விரும்பத்தக்கவள்-இச்சாசக்தியாக
இருப்பவள் |
காமகளா |
ஆசை மற்றும் காமங்களின் |
ரூபா |
உருவானவள் ஜகத் ஸ்ருஷ்ட்டிக்
காரணமானவள் |
கதம்ப குசும |
கதம்ப மலர்களின்மீது |
ப்ரியா |
பிரியம் கொண்டவள் |
கல்யாணீ |
சுபீக்ஷமும் நல் வளமும் நல்குபவள் |
ஜகத் |
உலகம் மற்றும் ப்ரபஞ்சத்தின் |
கந்தா |
ஆணிவேரானவள் |
கருணாரஸ |
கருணையே வடிவான,பாவமான |
சாகரா |
பெரும் கடலானவள் |
அம்பாள் அனைவராலும் விரும்ப் படும் இச்சா சக்தியாக இருப்பவள்.லோக ஸ்ருஷ்டியின்
காரணமாக ஆசை மற்றும் காமத்தின் காரணமாக இருப்பவள்.கதம்ப மலர்களின்மீது பிரியம் கொண்டவள்.
கல்யாணியாக சுபீக்ஷமும் நல்வாழ்வும் அருள்பவள்.இந்த ப்ரபஞ்சத்தின் ஆணிவேராக உள்ளவள்.கருணை
எனும் பாவம் கொண்டவள்,பெரும் கருணைக் கடலானவள்.
74) களாவதீ, களாலாபா, காம்தா, காதம்பரீப்ரியா |
வரதா, வாமனயனா, வாருணீமதவிஹ்வலா || 74 ||
கலாவதீ |
அனைத்துக் கலைகளின் சாரமானவள் |
கலா |
கலைகளின் |
ஆலாபா |
நயத்துடன் உறையாடுபவள் |
காந்தா |
காந்தமாய் வசீகரிக்கும்
இயல்பானவள் |
காதம்பரீ |
பெண் தெய்வமான கலைமகள் |
ப்ரியா |
அன்புகொண்டவள்,கதம்ப மலர்களை
விழைபவள் |
வரதா |
ப்ரார்த்தனைக்கு வரங்கள்
அருள்பவள் |
வாம |
அற்புதமான |
நயனா |
அழகிய விழிகளை உடையவள் |
வாருணீ |
மதுமயக்கும் அமிர்தம் |
மத |
தன்னிலை மறந்த உற்சாகம் |
விஹ்வலா |
உணர்ச்சிப் பரவஸத்திற்கு
உட்படுபவள் |
அனைத்து கலைகளின் சாராம்சமானவள்.கலை
நயத்துடன் உறையாடுபவள்.காந்தமாய் வசீகரிக்கும் இயல்பானவள்.காதம்பரி என்ற கலைமகளின்
மீது அன்புகொண்டவள்.மற்றும் கதம்ப மலர்களின் மீது பிரியம் கொண்டவள்.ஜீவராசிகளின்
ப்ரார்த்தனைக்கு ஏற்ப வரங்கள் அருள்பவள்.அற்புதமான் அழகிய விழிகளை உடையவள்.மயக்கும்
அமிர்தத்தினால் உண்டாகும் தன்னிலை மறந்த உற்சாகத்தினால் உணர்ச்சி பரவஸமடைபவள்.
75) விஸ்வாதிகா, வேதவேத்யா, விந்த்யாசல னிவாஸினீ |
விதாத்ரீ, வேதஜனனீ, விஷ்ணுமாயா, விலாஸினீ || 75 ||
விஷ்வ |
ஜகம், உலகம், ப்ரபஞ்சம் |
அதிகா |
பெரியதானவள் அறிவுக்கும்
புலங்களுக்கும் அப்பாற்பட்டு எட்டமுடியாதவள் |
வேத |
மெய்ப் பொருளான வேதம் |
வேத்யா |
உணரப்படுபவள் |
விந்த்யா |
விந்திய |
அசல |
மலைத்தொடர் |
நிவாஸினீ |
வசிப்பவள்,வாசம் செய்பவள் |
விதாத்ரீ |
அன்னையாக் ப்ரபஞ்சத்தை ஸ்ருஷ்டித்து
பரிபாலிப்பவள் |
வேத |
வேதங்களை |
ஜனனீ |
ஸ்ருஷ்டித்தவள் |
விஷ்ணு |
மஹாவிஷ்ணுவின் |
மாயா |
மாயா சக்தியாக விளங்குபவள் |
விலாஸினி |
ஸ்ருஷ்டி என்ற விளையாட்டில்
ஈடுபட்டிருப்பவள் |
ப்ரபஞ்சத்தைவிட பெரியாதானவள்.அதனால்
புலன்களுக்கும் அறிவுக்கும் எட்டாதவள். மெய்ப் பொருளான வேதத்தால் உணரப் படுபவள். விந்திய
மலைத் தொடரில் வாஸம் செய்பவள்.. அன்னையாக உலகத்தை படைத்து ஸ்ருஷ்டி செய்து பரிபாலிப்பவள்.வேதங்களை
ஸ்ருஷ்டித்தவள்.மாயவனான மஹாவிஷ்ணுவின் மாயா சக்தியாக விளங்குபவள்.ஸ்ருஷ்டி என்னும்
விளையாட்டில் ஈடுபட்டிருப்பவள்
இந்த விளக்கங்களை voice ஆகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு
அம்பாளின் பேர ருளுக்கு பாத்திரமாகுங்கள்
இன்று இந்த ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்
பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன்
ஜகன்நாதன்
செவ்வாய், ஜூலை 9, 2024
No comments:
Post a Comment