Thursday, July 11, 2024

  

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 34

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்                                                                                

வியாழன், ஜூலை  11, 2024

அனைவருக்கும் வணக்கம்

இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 76,77 மற்றும் 78 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்.

இன்றைய முதல் நாம் அம்பாளின் க்ஷேத்ர ஸ்வரூப வர்ணனைகளைப் பார்க்கப் போகின்றோம். க்ஷேத்ரம் என்பது ஒரு ஸ்தலம் அல்லது இடம் என்று பொருள் படும்.இங்கே க்ஷேத்ரம் என்பது இந்த ப்ரபஞ்சம்,நாம் வாழும் உலகம்,நாம் வசிக்கும் இடம் கடைசியாக நமது உடல் அனைத்டையும் குறிக்கும்.அம்பாளே இந்த அனைத்திலும் உறைந்திருந்து ,அவைகளாகவேத் திகழ்கிறாள்.அந்த ஸ்வரூபங்களையும் அவைகளின் தன்மைகளையுமே இந்த பிரிவில் க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ ரூபம் பற்றிப் பார்ப்போம்.இந்த வ்ர்ணனை 76 முதல் 80 வது ஸ்லோகங்களில் சொல்லப் பட்டுள்ளது க்ஷேத்ர என்றால் உடலான ரூபத்தையும் க்ஷேத்ரக்ஞ்ய என்றால் ஜீவங்களின் அறிவும் ஆன்மாவுமாகும் என்று பொருளாகும்.வரும் 5 ஸ்லோகங்களும் இவைகளையே விளக்குகின்றன்.

க்ஷேத்ரஸ்வரூபா, க்ஷேத்ரேஸீ, க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ பாலினீ |
க்ஷயவ்றுத்தி வினிர்முக்தா, க்ஷேத்ரபால ஸமர்சிதா || 76 ||

க்ஷேத்ர

ஸ்தலம் இங்கு உடலாகவும் சரீரமாகவும்

ஸ்வரூப

வடிவம் கொண்டுள்ளது.அம்பாள் ரூப வடிவமாக தன்னை வெளிப் படுத்திக் கொள்ளுகிறாள்

க்ஷேத்ர

அனைத்துரூபங்களிலும்

ஈஷீ

ஆள்பவள் க்ஷேத்ரனனான ஈஸனின் துணைவி

க்ஷேத்ர

ஜீவன்களின் உடல் மற்றும் ஆன்மாவின்

க்ஷேத்ரக்ஞ்ய

அவைகளின் அறிவாகவும் அறிபவனாகவும்

பாலினி

அனைத்தையும் பரிபாலிப்பவள்

க்ஷய

தாழ்ந்த ,தேய்கின்ற

வ்ருத்தி

வளர்கின்ற

நிர்முக்தா

விடுபட்டவள்.உயர்ச்சி,வீழ்ச்சி களுக்கு அப்பார்ப் பட்டவள்

க்ஷேத்ர

ப்ரபஞ்சம் மற்றும் ஜீவங்களின்

பால

பரிபாலனம் சிவனின் குழந்தை வடிவம்

சமர்ச்சிதா

அல்ங்கரித்து வழிபடுதல், தேவர்களால் ஸ்ருதித்து வணங்கப் படுபவள்,ஈஸனால் போற்றப் ப்டுபவள்

இந்த க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ்ய ஸ்வரூப வர்னணையில்  அம்பாள் இந்த ப்ரபஞ்சத்தின் அனைத்தின் வடிவமாகவும் தன்னை வெளிப் படுத்திக்கொள்ளுகிறாள். அம்பாளே அனைத்து ர்ரூபங்களிலும் ஆள்பவளாகவும்,க்ஷேத்ரேசனின் துணைவியாகவும் விளங்குகிறாள்.ஜீவங்களின் உடல் மற்றும் அவைகளின் ஆன்மாகவும் ,மற்றும் அவஈகளின் அறிவாகவும் அறிபவளாகவும் விளங்குகிறாள்.அனைத்தையும் பரிபாலனம் செய்யும் தாயாகவும் விளங்குகிளாள்.உயர்ச்சி மற்றும் வீழ்ச்சிக்கு அப்பார்ப் பட்டவளாக விளங்குகிறாள்.ப்ரபஞ்சம் மற்றும் ஜீவராசிகளை ப்ரிபாலனம் செய்பவளாகவும்,,ஈசனால் போற்றப் அடுபவளாகவும்,தேவர்களால் துதித்து வங்கப் படுபவளாகவ்ம் இருக்கின்றாள்.ன


விஜயா, விமலா, ந்த்யா, ந்தாரு ஜனவத்ஸலா |
வாக்வாதினீ, வாமகேஸீ, வஹ்னிமண்டல வாஸினீ || 77 ||

விஜயா

அனைத்திலும் அனைத்தையும் வெல்பவள்

விமலா

அப்பழுக்கற்ற தூய்மையானவள்.

வந்த்யா

வணக்கத்துக்கும் போற்றுதலுக்குமுரியவள்

வந்தாரு

மதிப்பளித்து புகழ்பாடும்

ஜன

மக்கள்

வத்ஸலா

வாத்ஸல்யம்,அன்பு,பரிவு,கருணை பொழிபவள்

வாக்

சொல் ,வாக்கியம்

வாதினீ

 அவற்றின் ஆதாரமாய்த் திகழ்பவள்

வாமகேஷீ

அழகான் வனப்பான கேசம் உடையவள்

வஹ்னி

அக்னி, நெருப்பு

மண்டல

கோள வீதி, மண்டலம்

வாஸினீ

வசிப்பவள், மூலாதாரத்தில் நிலைத்திருப்பவள்

அம்பாள் அனைத்திலும் வெல்லக்கூடிய வெற்றியே உருவானவள்.அப்பழுக்கற்ற தூய்மையானவள்.வணக்கத்துக்கும் போற்றுதலுக்கும் உரியவள்.தன்னை மதித்து புகழ்பாடும் பக்தர்கள்மீது அன்பு பரிவு கருணையை பொழிபவள்.சொல் வாக்கியம் ஆகியவற்றின் ஆதாரமாகத்திகழ்பவள்.வனப்புடைய அழகான கூந்தலை உடையவள்.அக்னி மண்டலக் கோள வீதிய்ன் மத்திய்ல் நிலை கொண்டிருப்பவள். மூலாதாரத்தில் நிலைத்திருப்பவள்


பக்திமத்-கல்பலதிகா, ஸுபா விமோசனீ |
ஸம்ஹ்றுதாஸேஷ பாஷம்டா, ஸதாசார ப்ரவர்திகா || 78 ||

பக்திமத்

பக்தர்கள்

கல்ப

எண்ணம், நோக்கு, சிந்தனை

லதிகா

இளம்கொடி,பக்தர்களுக்கு இச்சைகளை அனுக்ரஹிக்கும் கல்பலதிகக் கொடியானவள்

பஸு பாஸ

பந்தம் மற்றும் பாசங்கள்

விமோஸினி

ப்ற்றறுத்து விமோசனம் அளிப்பவள்

ஸம்ஹ்ருதா

சம்ஹரித்தல்,அழித்தல்

ஸேஷ

மீதமுள்ளது, எஞ்சியது

பாஷாண்டா

தவறான் கோட்பாடுகள் உடையவர்கள்

சத

சத்வம்,உண்மை,சத்தியம்

ஆசார

நந்நடத்தை,ஒழுக்கம்

ப்ரவர்த்திகா

தூண்டுபவள்,ஊக்குவிப்பவள்

 

 

 

பக்தர்களின் எண்ணம் நோக்கம் சிந்தனையின் படி அவர்களின் இச்சைகளை கல்பலதிக் கொடியைப் போல பூர்த்தி செய்பவள்.பந்த பாஸங்களை ப்ற்ற றுத்து பாப விமோசனம் அளிப்பவள்.தவறான கோட்பாடு உடையவர்களின் எண்ணங்களை வேரறுத்து அழிப்பவள்.சத்வம்,உன்மை நல்ல நடத்தை மற்றும் ஒழுக்கம் போன்ற உயர்ந்த குணங்களை ஊக்குவிப்பவள்

இந்த விளக்கங்களை voice ஆகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு அம்பாளின் பேர ருளுக்கு பாத்திரமாகுங்கள்

இன்று இந்த  ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்.

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

வியாழன், ஜூலை  11, 2024

 

 


 

No comments:

Post a Comment