ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 50
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
சனிக்கிழமை ஜூலை, 27, , 2024
அனைவருக்கும் வணக்கம்
நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில் தற்போது
விபூதி விஸ்தாரம் என்ற பகுதியைப் பார்த்து
வருகிறோம்..
இதுவரை 115 ஸ்லோகங்களையும் அவைகளில் உள்ள 571 நாமாவளிகளையும்
பார்த்து விட்டோம்.
ஆக இன்று 116 117,மற்றும் 118 ஆவது ஸ்லோகங்களைப் பார்க் கப்போகின்றோம்.இந்த
ஸ்லோகங்களின் அம்பாளின் 572 முதல் 589 வரையிலான 18 நாமாவளிகளின் வர்ணனைகளைத் தொடருவோம்
இந்த எல்லா ஸ்லோகங்களுமே அம்பாளின் பேரருட் கருணை எப்படி
இந்த ப்ரபஞ்சம் முழுதும் பரவி அனைத்து நிலைகளிலும் காத்து அருள் புரிந்து இகத்திலிருந்து
விடுதலையும் பரலோக ப்ராப்தியும் அளிக்கிறாள் அம்பாள் என்பதை விளக்குகின்றன.
பராஸக்திஃ, பரானிஷ்டா, ப்ரஜ்ஞான கனரூபிணீ |
மாத்வீபானாலஸா, மத்தா, மாத்றுகா வர்ண ரூபிணீ || 116 ||
பரா |
உயர்ந்த, அதி உன்னதமான |
ஸக்தி |
சக்தியாக,பேராற்றலாக விளங்குபவள் |
பரா |
உயர்ந்த, அதி உன்னதமான |
நிஷ்டா |
ஆதாரம், நிஷ்டை த்யானம் மூலம்
ஜகத்தின் மூலம் உறுதியான் பக்தி மூலம் அடையக்
கூடியவள் |
ப்ரக் ஞான |
உயர்ந்த ஞானம் |
கன |
செறிவான ,மிகுந்த ஞான |
ரூபிணீ |
வடிவமானவள் |
மாத்வீ |
உற்சாகம் தரக்கூடிய மதுபோன்ற,
இங்கு களிப்பு தரக்கூடிய அம்ருத நிலை |
பான |
பருகக்கூடிய பானம் |
அலஸா |
பெரு மகிழ்ச்சி கொண்டிருப்பவள்.அம்ருத
த்திற்கொப்பான பெருமகிழ்ச்சி நிலையில் நிலைத்திருப்பவள் |
மத்தா |
பெருமகிழ்ச்சியில் க்ளித்திருப்பவள்
ஆனந்தானுபவம் |
மாத்ருகா |
பெண் தெய்வம், எழுத்தின்
அகர வரிஸை |
ரூபிணீ |
வடிவமாக இருப்பவள் |
அம்பாள் ப்ரபஞ்சத்தின் அதிஉன்னதமான பேராற்றலாக விளங்குகிறாள்.உண்மையான
நிஷ்டை மற்றும் பக்தியின் மூலம் அடையக் கூடியவள்.உயர்ந்த,செறிந்த ,அளவற்ற ஞானத்தின்
வடிவானவள்.உற்சாகம் தரும் மதுபோன்ற பானங்களைப்
பருகுவதால் பெரு மகிழ்ச்சி கொண்டவள்.இங்கு மதுவான பானங்கள் அமிர்தத்தையும் களிப்பு
பேராந்தானுபவத்தையும் குறிக்கும்.மாத்ருகா என்பது பெண் தெய்வமாக அம்பாள் விளங்குவதையும்,அம்பாளே
அக்ஷர வடிவமான் எழுத்துகளாக இருப்பதையும் குறிக்கும்
மஹாகைலாஸ னிலயா, ம்றுணால ம்றுதுதோர்லதா |
மஹனீயா, தயாமூர்தீ, ர்மஹாஸாம்ராஜ்யஸாலினீ || 117 ||
மஹா |
உயர்ந்த உன்னதமான |
கைலாஸ |
திருக்கைலாயத்தில் |
நிலையா |
தனது நாயகரான சிவனுடன் இணைந்திருப்பவள் |
ம்ருணால |
தாமரையின் தண்டு |
ம்ருது |
மிருதுவான |
தோர்லதா |
கொடிபோன்ற கரங்கள் |
மஹனீயா |
பெருமைக்கும் போற்றுதலுக்கும்
உரியவள் |
தயா |
பரிவு, கருணை |
மூர்த்தி |
வடிவானவள் |
மஹா |
மாபெரும் |
ஸாம்ராஜ்ய |
ப்ரபஞ்சமெனும் பேரரசின் |
ஷாலினி |
உரிமை கொண்டு அதனை தனதாக்கியவள் |
உன்னதமான உயர்வான கைலாச பர்வத்தில் அம்பாள் தனது நாயகரான பரமேஸ்வரருடன் இனணைந்து உறைகிறாள். தாமரைக் கொடியின் மெல்லிய தண்டு போன்ற மிருதுவான கரங்களை உடையவள். பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரியவள்.பரிவு மற்றும் பெரும் கருணையின் வடிவானவள்.இந்த மாபெரும் ப்ரபஞ்சத்தின் மீது உரிமை கொண்டு அதனை தனதாக்கியவள்
ஆத்மவித்யா, மஹாவித்யா, ஸ்ரீவித்யா, காமஸேவித்தா |
ஸ்ரீஷோடஸாக்ஷரீ வித்யா, த்ரிகூடா, காமகோடிகா || 118 ||
ஆத்ம |
ஆத்மாவின்,ஆத்மார்த்தமான |
வித்யா |
ஞான வடிவானவள் |
மஹா |
மாபெரும், உன்னதமான |
வித்யா |
ப்ரம்ம ஞானம் எனும் பேரறிவுடையவள் |
ஸ்ரீ வித்யா |
ஸ்ரீ வித்தையி ன் வடிவான ஸ்ரீலலிதாம்பிகை |
|
பஞ்சதஸதி மந்திரமாக விளங்குபவள் |
காம |
மன்மதனால் |
ஸேவித்தா |
சேவித்து வணங்கப் படுபவள் |
ஸ்ரீ |
பெருமை மிகுந்த |
ஷோடஷ |
பதினாறு |
அக்ஷர |
எழுத்துக்கள் |
வித்யா |
தத்துவ ஞானமானவள் |
த்ரி |
மூன்று பரிமாணங்கள் கொண்ட |
கூடா |
தன்மை களாக பரிமாணித்திருப்பவள் |
காம |
இச்சை/ஆசை காமேஸ்வரரான பரமேஸ்வரர் |
கோடிகா |
உயர்ந்த உச்சமான நிலை ஆன ந்தத்தின் நிறைவானவள்.சிவனின் அங்கமானவள் |
அம்பாள்
ஆத்மாவின் வடிவமானவள்,ஆத்மார்த்தமான ஞானத்தின் வடிவானவள்.மாபெரும் உன்னதமான ப்ரம்ம
ஞானம் என்னும் பேரறிவு உடையவள். ஸ்ரீ வித்தையி ன் வடிவான ஸ்ரீலலிதாம்பிகை பஞ்சதஸதி
மந்திரமாக விளங்குபவள். மன்மதனால்சேவித்து வணங்கப் படுபவள்.பெருமை மிகுந்த பதினாறு
த த்துவ அக்ஷரங்களான் சோடாக்ஷரியின் தத்துவ
ஞான விளக்கங்களாக அம்பாள் விளங்குகிறாள்.மூன்று பரிமாணங்களான்1.ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம்
2 தர்ம அர்த்த காம 3.சத்வ,ரஜோ, தாமச போன்ற அனைத்துவிதமான மூன்று குணங்களிலும் பரிமானங்களிலும்
அம்பாளே நிலைத்து இருக்கின்றாள்.இச்சைகளின் நிறைவான் உயர்ந்த பரமான ந்த நிலையில் விளங்குகிறாள்.காமேஸ்வ்ர ரான பரமேஸ்வர ரின் அங்கமாக
அர்த்தநாரீயாகவும் விளங்குகிறாள்.
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
சனிக்கிழமை ஜூலை, 27, , 2024
No comments:
Post a Comment