Saturday, July 6, 2024

 

 

 

வர்ணாசிர தர்மம்

சிவதாஸன் ஜகன்நாதன்

ஓம் நமசிவாய:

சனி, ஜூலை, 06, 2024

நமது லிலதா சஹஸ்ரநாம 67 வது ஸ்லோகத்தில் வர்ணாஸ்ரம விதாயினீ என்ற நாமம் வருகின்றது.வர்னாஸ்ரமம் பற்றிய தவறான கருத்துக்கள்.  முக்கியமாக ப்ராம்ண த்வேஷம் என்ற வெறுப்பு அதிகமாக ஒரு குறிப்பிட்ட சாராரிடையே காணப்படுகிறது.இது உன்மையான சனாதன நெறியைப் பற்றிய உணர்வு இல்லாதினாலேயே. நமது சமுதாயத்தில் இந்த தீய மாறுபாடான கருத்து பரவி உள்ளதை நாம் அறிவோம் .எனவே வர்ணாஸ்ரம தர்மம் பற்றிய ஒரு சிறு விளக்கத்தினை இந்த பதில் தர விழைகிறேன்.

வர்ணாசிரம தர்மம் என்பது நமது சனாதன தர்மத்தின் நாடியாகும்.ஆனால் அது சரியான புரிதல் இல்லாத காரணத்தால் மாறுபாடாக விமர்ஸிக்கப் படுகிறது

முதன்மையான விஷயம் என்ன வெனில் வர்ணாஸ்ரமம் பிறப்பினால் மட்டும் நியமிக்கப் படுவதில்லை.இதை நான் கீழ்க்கண்ட விளக்கம் மூலம் விளக்குகிறேன்.அதற்கு முன்னதாக

நமது வர்ணாசிரமத்தில் கூறப்படும் நான்கு வர்ணங்களாவன யாவை என்றும் அவைகளின் குணாதிசயங்கள் என்ன என்பது பற்றியும் பார்ப்போம்

1.ப்ராம்ணன் 2।க்ஷத்ரியன் 3.வைஸ்யன் 4. சூத்திரன்

இவர்களின் பொதுவான வகைப் பாட்டினைப் பார்ப்போம்

ப்ராம்ணன்

இவர்கள் மெய்ப்பொருளின் தேடலில் ஈடு பட்டவர்களாகவும்,த்யானம் ,பூஜை, ப்ரார்த்தனைகள் மற்றும் யாகம் ஆகியவற்றி நாட்டம் உள்ளவர்களாகவும் இருப்பர்.ப்ரபஞ்ச உண்மைகளை உணர்ந்தவர்களாகவும் அவற்றைப் பிறருக்கு எடுத்துறைப் பவர்களாகவும் இருப்பர்.உண்மை எளிமை அஹிம்சை ஆகிய்வற்றைக் குணங்களாக் கொண்டிருப்பர்

க்ஷத்ரியர்கள்  

பிறர் நலனிலும் பொது நலனிலும் அக்கறை கொண்டவர்களாய் இருப்பர்.தைரியம்,பாகுபாடற்ற சமநோக்கு,வலிமை முதலிய அம்சங்களை கொண்டிருப்பர்.

வைசியர்  வியாபாரம்,வேளாண்மை,உழவு,நெசவு,கலை முதலியவற்றை ஏற்றுக்கொண்டவர்கள்.இவர்களின் பங்களிப்பின்றி உணவு உற்பத்தி முதல் மற்ற அன்றாட வாழ்க்கைக்கான எதுவும் சாத்தியமில்லை

சூத்திர்கள்  மக்கள் சேவையில் ஈடுபட்டவர்கள்.பிறருக்கு உழைப் பதிலும் மற்றவர்க்கு சேவை செய்வத்ற்கும் தம் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.மக்கள் சேவையே மஹேசன் சேவை என்ற குறிக்கோளோடடு இருப்பவர்கள், கருனை ,அன்பு, தன்னலமற்ற சேவை அர்ப்பணிப்பு போன்ற அரிய குணங்களைக் கொண்டவர்கள்

இப்பொழுது வர்ணாஸ்ரம் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்ம

வண்ணக்கலவகள் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். நிறங்க்ளில் அடிப்படை நிறங்கள் என நாலு உள்ளன, இந்த நான்கு நிறங்களில் இருந்து நிற சேர்க்கையால், கலவையால், இன்னும் பல நிறங்கள் உருவாக்கப்படுகிறது. இதையே இன்னும் கலந்து பல பல நிறங்கள் உருவாக்க முடியும். வண்ண கம்பெனிகள் இன்று உங்களுக்கு என்ன நிறம் பிடிக்கிறதோ அந்த நிறத்தை தயாரித்து கொடுப்பார்கள்.

இப்பொழுது, வர்ணாசிரம தர்மம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

மனித குணங்கள் மூன்று வகையானது. சாத்வீக, ராஜசீக மற்றும் தாமச குணங்கள் ஆகும் (சாத்வீகம் - அமைதியாய், சாந்தமாய் இருப்பது. ரஜோகுணம் - வீரம், தைரியம், ஆளுமை போன்றது. தமொகுணம் - சோர்ந்து, சக்தி இல்லாமல், உழைக்க விருப்பம் இல்லாமல் இருப்பது)

எப்படி வண்ணங்களில் நாலு மட்டும் அடிப்படையான நிறங்களாக  உள்ளதோ, அதே போல் இவைகளே அடிப்படை குணங்களாகும்

நாம் எல்லோரும் இந்த மூன்று குணங்களுடைய கலவை தான். எப்படி நான்கு நிறங்கள் கொண்டு பல்லாயிரக்கணக்கான மற்ற நிறங்கள் உருவாக்க முடியுமோ அதே போல் மனிதர்களும் இந்த மூன்று குணங்களுடைய பல்லாயிரக்கணக்கான கலவை தான்.வர்ணாசிரமத்தின் அடிப்படை

கீதையில் கண்ணன் சொன்னதை தவறாக புரிந்து, தவறாக சித்தரித்து இருக்கிறார்கள்.

அவரவர் குணத்தை கொண்டும், கர்மத்தை கொண்டும், நானே நான்கு வர்ணத்தை படைத்தேன் — என்றான் கண்ணன்.

குணத்தை, என்பது மேலே குறிப்பிட்ட மூன்று குணங்கள் ஆகும். கர்ம என்றால் இங்கு திறன் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது  திறமை இருந்தால் தான் தொழில் செய்ய இயலும்.

ஒரு எடுத்துக்காட்டு - ஒரு பள்ளிக்கூடத்தில் நான் எனது கணக்கு திறமையால் வாத்தியாராக நியமிக்கப்படுகிறன் என்று வைத்து கொள்வோம். அதே வேளையில், எனக்கு பொறுமை கிடையாது, சட்டென கோபம் வரும் குணம் உண்டு (ரஜஸ்). இதனால் மாணவர்களை அடிக்கும் பழக்கம் உள்ளது. நான் முன்னேற வேண்டும் என்றால், மாணவர்கள் மற்றும் சக வாத்தியார்கள் இடையே நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றால், எனது திறமையை மட்டும் சார்ந்து இருக்க முடியாது, எனது குணத்தையும் மாற்ற வேண்டும் அல்லவா? ரஜோ குணமான கோபத்தை தவிர்த்து அல்லது படிப்படியாக குறைத்து சத்வ குணமான அன்பை வளர்த்து கொண்டால், மாணவர்கள் நன்மதிப்பைப் பெற முடியும்.

இத்தகைய திறன் மற்றும் குன கலவையால் மனிதர்கள் நான்கு விதமாக வகுக்கப்பட்டு இருப்பது தான் வர்ணாஸ்ரமம். ஆங்கிலத்தில் இதை Categorization என்று சொல்வர். இதை இன்று எல்லா நிறுவனங்களிலும் கான முடியும். Appraisal என்னும் வருடாந்திர மதிப்பீடு செய்வது இதை தான்.

இப்பொழுது கண்ணன் சொன்னதை பார்ப்போமா? இதை ஆன்மீக பார்வையில் பார்த்தால் எளிதாக புரிபடும்.

மனிதன் மீண்டும் மீண்டும் பிறப்பது, தன் வினைபயனால். தானே விதைத்து, அதனால் மீண்டும் பிறந்து, தானே அறுவடையும் செய்கிறான், ஆனால் புரிந்து கொண்டதில்லை. இந்த பிறவி சுழற்றில் இருந்து விடுபட வேண்டுமே, என்ன செய்வது?

பிறக்கும் பொழுது முற்பிறவியின் தாக்கத்தால் சில குணாதிசயங்கள் நமக்கு ஏற்கனவே உள்ளது. இந்த குணகலவையின் பொருட்டால் சில திறன்கள் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அதை எளிதாக கற்று முன்னேற்றம் அடைகிறோம். சிலது குட்டிக்கரணம் போட்டாலும் நாம் கற்று கொள்ள முடிவதில்லை.

மீண்டும் கண்ணனுக்கு வருவோம். நான்கு வர்ணங்கள் என்ன? பிராமணன், க்ஷத்திரியன், வைஸ்யன் மற்றும் சூத்திரன். இப்பொழுது சொல்வதை ஆணித்தரமாக உங்கள் மனதில் ஏற்றி கொள்ளுங்கள் — பிறப்பால் யாரும் இந்த வர்ணம் தான் என்று இருப்பதில்லை. எல்லா கலவையும் நமக்குள் உண்டு, ஆனால் விகிதாச்சாரம் மாறுபடும்., அதாவது அளவிட முடியாத அளவிற்கு கலவைகள் உண்டு. சிலருக்கு சத்வ குணம் ஓங்கி இருக்கலாம், சிலருக்கு ரஜோ குணம் ஓங்கி இருக்கலாம், சிலருக்கு தமோ குணம் அதிகமாக இருக்கலாம். இது அவரவர் முற்பிறவியில் விதைத்த வினையை பொறுத்து தான் அமையும்.

இதை இன்னும் விளக்க முற்படுகிறேன். தயவு கூர்ந்து கவனித்து படிக்கவும்.

நான்கு வர்ணங்கள் பிராமணன், க்ஷத்திரியன், வைஸ்யன் மற்றும் சூத்திரன் ஆகும். பிராமணன் என்றால் என்ன என்பதை கடைசியாக பார்ப்போம், ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் பிராமணன் என்பது ஒரு வர்ணமே அல்ல. மற்ற மூன்றை முதலில் எடுத்து கொள்வோம்.

க்ஷத்திரியன் என்பவர் போராளி, துனிந்து செயல்படும் திறன் உடையவர்.

வைஸ்யன் என்பவர் வியாபாரம், கொடுத்து வாங்கல் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்கள்.

சூத்திரன் உடல் உழைப்பு வேண்டிய வேலைகள் செய்பவர்கள்.

இதை ஆன்மீக பார்வையில் அலசுவோம்.

சூத்திரன் - எவனொருவன் தன் நிலையை கண்டு வருந்தி கொண்டே, சோகத்தில் இருக்கிறானோ, அவன் சூத்திரன். சாந்தோகிய உபநிடதத்தில் சூத்ர என்றால் "சூச்ச த்ராவதி" சோகத்தில் மூழ்கி உருகுபவன். என்று உள்ளது. பிரம்ம சூத்திரம் யாரொருவன் துயரத்தில் மூழ்குகிரானோ அவனே க்ஷத்திரன் என்கிறது. மகாபாரத போரில், அர்ச்சுனன் போரிடாமல் சோகத்தில் முழுகிய பொழுது, கண்ணன் அவனை சூத்திரன் என்கிறான். அதாவது சோகத்தில் முழுகி விட்டாயே என்று சொன்னான். நாம் எல்லோரும் பல சந்தர்ப்பங்களில் சூத்திரர்களாக தான் இருக்கிறோம்.

வைஸ்யன் - இறைவன் இருக்கிறான், அவனுக்கு பூஜைகள் செய்து, ஏதாவது கொடுத்து யாசகமாக ஏதாவது பெற்று கொள்பவர்கள். இறைவனை ஒரு வியாபாரியாக, அணுகும் முறை. கண்டிப்பாக நாம் எல்லோரும் பல வேறு தருணங்களில் இப்படி இருந்து இருக்கிறோம்..

க்ஷத்திரியன் — தன் நிலையை பற்றிய கேள்விகள் பல, அதற்கு விடை தேடும் படலத்தில் முழு முனைப்புடன் செயல்பட்டு அதற்கு உண்டான சாதனைகளை சிரமம் பார்க்காமல் மேற்கொள்ள புறப்படுகிறவன். சோகத்தில் முழுகாமல் அதை மாற்ற கடும் முயற்சி எடுப்பவர்கள்.

நாம் எல்லோரும் மேலே சொன்ன மூன்று வர்ணங்களில் தத்தளிக்கிறோம். ஒரே வர்ணத்தில் இருப்பதில்லை.

கடைசியாக பிராமணன்

எவன் ஒருவன் எந்த நொடியிலும் சோகத்தில் மூழுகுவதில்லையோ, ஆசாபாசங்களில் சிக்காமல், எப்போழுதும் எல்லோரிடமும் கருணை பொழியும் மனதுடன், எந்த பலனும் எதிர்பாராமல் தன் கடமையை செய்யும், தன் உண்மை நிலையை உணர்ந்து இருக்கிறானோ அவனே பிராமணன். எல்லா குணங்களுக்கும் அப்பாற்பட்டவன் பிராமணன். அதனால் தான் குணாதித  த்ரிகுண ரகித என்று சொல்வது உண்டு. அதனால் தான் பிராமணன் என்பது ஒரு வர்ணமே அல்ல என்றும் சொல்லலாம். எப்படி எல்லா கறைகளையும் நீக்கிய பின் துணி தூய்மை அடைந்து வெள்ளையாகிறதோ, அதேபோல் எந்த குணத்தின் சாரமும், கறையும் இல்லாதவர் பிராமணன் என்று கூறலாம். வெண்மையை ஒரு நிறம் என்றும் சொல்லலாம், எந்த நிறமும் இல்லாதது தான் வெண்மை என்றும் சொல்லலாம் அல்லவா?

இப்பொழுது சொல்லுங்கள், எத்தனை பிராமணர்கள் இருப்பார்கள் என்று? விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு தான் இருப்பார்கள். பிறப்பால் யாரும் இந்த வர்ணம் தான் என்று சொல்ல முடியாது. எல்லாம் கலவை தான். நம் கலவை என்ன என்பதை அறிய நான் யார் என்ற கேள்வி எழ வேண்டும். அந்த கேள்விக்கு விடை தேடும் பொழுது, சூத்திரனாக சோகத்தில் முழுகாமல், வைஸ்யனாக எதிர் பலன் பாராமல், ஒரு க்ஷத்திரியனாக போர் புரிவோம்.

உண்மையான ப்ராம்ணனாகமிளிர்ந்து சர்வேஸ்வரரின் பேரருள் பெற்றுய்வோம்

அன்பே சிவம் ❤️

சிவதாஸன் ஜகன்நாதன்

ஓம் நமசிவாய:

ஜூலை 6, சனி 2024

 

No comments:

Post a Comment