Wednesday, July 24, 2024

 

 

 

 

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 47

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

புதன் ஜூலை, 24, , 2024

அனைவருக்கும் வணக்கம்

 நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில் யோகினி ந்யாஸம் என்ற பகுதியை பார்த்துக்கொண்டிடுக்கின்றோம்.  

இன்றோடு இந்த யோஹினீ ந்யாஸம் நிறைவ் பெறுகின்றது.இன்றைய ஸ்லோகங்களில் குண்டலிய்ன் ஏழாவது ஸ்தானமான் சஹஸ்ராரத்தில் உறைகின்ற யாஹிண்யம்பா என்ற டாஹினி ஸ்வரூபம் பற்றிப் பார்க்கப் போகின்றோம்.

.

ஆக இன்று 109, மற்றும் 110 ஆவது ஸ்லோகங்களைப் பார்க் கப்போகின்றோம்.

ஸஹஸ்ரதள பத்மஸ்தா, ஸர்வ வர்ணோப ஸோபிதா |
ஸர்வாயுததரா, ஸுக்ல ஸம்ஸ்திதா, ஸர்வதோமுகீ || 109 ||

சஹஸ்ர

சஹஸ்ராரம் என்ற உச்சி ஸ்தானத்தில்ஆயிரம்

தள

இதழ்களைக் கொண்ட

பத்ம

தாமரை மலரில்

ஸ்தா

நிலைத்து இருப்பவள்

ஸர்வ

அனைத்து

வர்ண

வண்ணங்களும் கொண்டு

சோபிதா

சோபையுடன் ஜ்வலிப்பவள்

சர்வ

சகல விதமான

ஆயுதா

ஆயுதங்களுடன்

தரா

விளங்குபவள்

சுக்ல

சுக்கிலம்,ஜீவ நாடியான விந்து

சம்ஸ்ததா

நிலைகொண்டிடுந்து வழி நடத்துபவள்

சர்வதோ

எங்கும் கணக்கற்ற

முகீ

முகங்களைஉடையவள்,எவ்விடத்திலும்,எத்திசையிலும் வியாபித்திருக்கும் முகங்களை உடையவள்

 

குண்டிலிணீயின் ஏழாவது ஸ்தானமான சஹஸ்ராரத்தில் குடிகொண்டுள்ள யாஹிண்யம்பா எண்ற ஸ்வரூபமுடைய யோஹினி ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவள்.அம்பாள் அனைத்து வண்ணங்களையும் கொண்டு ஜ்வலிப்பவள்.தன் கரங்களில் சகலவிதமான ஆயுதங்களையும் கொண்டிருப்பவள்.ஜீவ ராஸிகளின் உயிர் சாரமான சுக்கிலத்தில் நிலைகொண்டிருந்து வழி நடத்துபவள்.எல்ல இடங்களிலும் திசைகளிலும் வியாபித்திருந்துன் எண்ணற்ற முகங்களை உடையவள்.


ஸர்வௌ தனப்ரீதசித்தா, யாகின்யம்பா ஸ்வரூபிணீ |
ஸ்வாஹா, ஸ்வதா,உமதி, ர்மேதா, ஸ்ருதிஃ, ஸ்ம்றுதி, ரனுத்தமா || 110 ||

சர்வ

சகல விதமான் பொருள்களாலும்

ஓதன

சமைக்கப் பட்ட அரிசியிலான அன்னம்

ப்ரீத

பிரியமான

சித்தா

மனதை உடையவள்

யாஹிண்யம்பா

யாகின்யம்பா

ஸ்வரூபிணீ

உருவமுடையவள்

 

சகலவிதமான பொருள்களையும் அரிசியுடன் சேர்த்து சமைக்கப் பட்ட சாதத்தை விரும்பி ஏற்கும் மனதை உடையவள் இத்தகைய யோஹினீ தேவி யாஹிண்யம்பாள்.

 

இன்று இந்த  ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்

 இவைகளை குரல் ஒலியாகவும் தந்துள்ளேன் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருளுக்குப் பாத்திரமாகுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்.

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

செவ்வாய் ஜூலை,  23 , 2024

 

 

No comments:

Post a Comment