ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 40
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
புதன் ஜூலை, 17 , 2024
அனைவருக்கும் வணக்கம்
நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில்
பீடங்களும் அங்க தேவதைகளும் பற்றிய பதிவுகளைப் பார்த்து வருகிறோம். இன்று 90,91
மற்றும் 92 வது ஸ்லோகங்களைப்பார்போம் அம்பாள் எப்படி அங்கங்களின் தலைவியாகவும்
உணர்வுகளின் உருவமாகவும் விளங்குகிறாள் என்பதையே இந்த ஸ்லோகங்கள் விளக்குகின்றன
ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமங்கள் மொத்தம்
183 ஸ்லோங்களை கொண்டவை.இன்று நாம் 92 ஸ்லோகத்தோடு சரிபாதியாக 50% ஸ்லோகங்களை நிறைவு
செய்கிறோம் அம்பாளின். பேரருட் கருணையினால் வரும் நாட்களில் மீதமுள்ள 50% மான 91 ஸ்லோகங்களையும்
நிறைவு செய்து அம்பாளின் அருளையும்,சர்வேஸ்வரின் கடாக்ஷத்தையும் பெற்றுய்வோம்.ர
.
சிச்சக்தி, ஸ்சேதனாரூபா, ஜடஸக்தி, ர்ஜடாத்மிகா |
காயத்ரீ, வ்யாஹ்றுதி, ஸ்ஸந்த்யா, த்விஜப்றுந்த னிஷேவிதா || 90 ||
சித் |
பரிசுத்தமான அறிவின் |
ஷக்தி |
ஆற்றலானவள் |
ஸ்சேதனா |
தன்னுணர்வு ,தன்னறிவு |
ரூபா |
ஞான வடிவமானவள் |
ஜட |
உயிரற்ற, ஆன்ம விழிப்பற்ற,அறிவற்ற |
ஷக்தி |
நிலையின் வெளிப்பாடாக விளங்குபவள் |
ஜடாத்மிகா |
ஜடரூபத்தில் ஊடுருவி இருப்பவள் |
காயத்ரீ |
காய்த்ரி தேவியின் வடிவமாக
விளங்குபவள் |
வ்யாஹ்ருதி |
காய்த்ரி மந்திரத்தின் தெய்வீக
உச்சரிப்பில் உள்ளுறைபவள். தெய்வீக சொற்களின் ஆற்றலாய்த்திகழ்பவள்.பூர்,புவ,சுவஹ |
சந்த்யா |
சந்தித்தல் கூடுதல் இணைப்பு
ஜீவ பரமாத்ம சங்கமத்துக்கு காரணமானவள் |
த்விஜ |
இருபிறப்புடையோர் |
வ்ருந்த |
குழு,கூட்டம் |
நிஷேவிதா |
உபசரித்து கௌரவிக்கப் படுதல் |
அம்பாள் பரிசுத்தமான
அறிவின் ஆற்றலானவளாக விளங்குகிறாள்.தூய ஞானத்தின் வடிவமாகவும் அம்பாள் விளங்குகிறாள்.ஜட
வஸ்துக் களின் உணர்வற்ற,ஆன்ம விழிப்பற்ற, அறிவற்ற
நிலைகளின் வெளிப்பாடாக விளங்குகிறாள்.ஜடத்திலும் அம்பாளே ஊடுறுவி இருக்கின்றாள்.காயத்ரி
தேவியின் ரூபமாக அம்பாள் விளங்குகின்றாள். காயத்ரி மந்திரத்தின் தெய்வீக உச்சரிப்பின்
சொற்களாக விளங்குகிறாள்.ஓம் பூர் புவ: சுவஹ என்னும் காயத்ரி மந்திரத்தின் மூன்று வார்த்தைகளே
இம்மூவுலகங்களின் பெயர்களாக விளங்குகின்றன். வ்யாஹ்ருதியாக அம்பாளே இந்த மூவுலகங்களையும்
ஆண்டுகொண்டு திகழ்கிறாள்.ஜீவ பரமாத்ம் சந்திப்புக்கும் ஐக்கியத்தும் காரணாய் விளங்குகிறாள்.த்விஜ
என்பது இரு பிறப்பு உடையவர்களை குறிக்கும்.பூவுலைகில் ஸ்தூலமாகவும்,பின்னர் இறப்பிர்க்குப்
பின் அதை இர்ண்டாவது பிறப்பாக கருதுவதுண்டு.ஜ்வதவ்ருந்த என்னும் சொல் பிறந்து மரனத்திர்க்குப்
பின் தம்மை ஆன்மீகப் பயனத்தில் ஏற்றுக் கொண்டரை அம்பாள் உபசரித்துக் கொண்டாடுவாள்
என்பதாகும்.
தத்த்வாஸனா, தத்த்வமயீ, பம்சகோஸாந்தரஸ்திதா |
னிஸ்ஸீமமஹிமா, னித்யயௌவனா, மதஸாலினீ || 91 ||
தத் |
அது என்ற த த்துவய மயமானவள் |
தத் ஆஸனா |
அதுவுமாகி அதுவாகவே இருப்பவள்
அம்பாள் |
தத் த்வம் |
நீ ,உன்னிடம் அனைத்து ஜீவராசி
களிடமும் |
அயீ |
மாதா, ப்ரபஞ்சத்தின் மாதாவானவள் |
பஞ்ச |
ஐந்து |
கோஷ |
உறைகின்ற |
அந்தர |
உள்ளே |
ஸ்திதா |
நிலைபெற்றிருப்பவள் பஞ்ச
கோஷங்களில் ஊடுருவி இருப்பவள் |
நிஃஸ்ஸீம |
எல்லையற்ற |
மஹிமா |
மஹிமையும் ஆற்றலும் உடையவள் |
நித்ய |
என்றும் .சாஸ்வதமாக |
யௌவனா |
இளமையுடன் திகழ்பவள் |
மத |
மகிழ்ச்சி சந்தோஷம் |
ஷாலினீ |
கொள்பவள், அடைபவள் |
தத்துவங்கள் என்பவை
,ஐந்து கர்மேந்திரியங்கள்,ஐந்து ஞானேந்திரியங்கள்,பஞ்ச தன்மாத்ரைகள்,நான்கு அந்தகரணங்களான
மனம்,புத்தி, அகங்காரம்,மற்றும் சித்தம் ஆகும் அம்பாள் இவை அனைத்திலும் நிலை பெற்று
இருக்கின்றாள் என்பதையே தத்வாஸனா என்ற நாமம் கூறுகிறது. அது என்ற தத்துவயமானவள். நீ,உன்னிடம், மற்றும் அனைத்து ஜீவ ராசிகளிடமும் ப்ரபஞ்சத்தின் மாதா உறைகின்றாள்.ப்ரபஞ்சமே அம்பாளிடமிருந்து
புறப்பட்ட துகள் என்பதால் அனைத்திற்கும் தாயானவளாய் உள்ளாள்.பஞ்ச கோஷங்களான 1.ஸ்தூல
சரீரமான அன்னமய கோஷம்,2. ப்ராணமய கோஷம் 3.சூக்ஷம சரீரமான மனோமய கோஷம் 4. விஞ்ஞான மய
கோஷம் மற்றும் 5.ஆனந்தமய கோஷம் என
ஐந்து கோஷங்களிலும் அம்பாள் ஊடுருவி உறைந்திருக் கின்றாள்.அளவற்ற மஹிமையும் ஆற்றலும்
கொண்டவள்.என்றும் சாஸ்வதமான் இளமையுடன் இருப்பவள்.பெஉமகிழ்ச்சியில் மிளிர்ந்து விளங்குபவள்.
மதகூர்ணித ரக்தாக்ஷீ, மதபாடல கண்டபூஃ |
சந்தன த்ரவதிக்தாங்கீ, சாம்பேய குஸும ப்ரியா || 92 ||
மத |
களிப்பு சந்தோஷம்,மகிழ்ச்சி |
கூர்ணித |
உருட்டல்,சுழற்றுதல் |
ரக்த |
ரத்த சிவப்பான் |
அக்ஷி |
கண்கள் ப்ரம்மானதத்ததின் வெளிப்பாடாக தன் சிவந்த கண்களை சுழற்றுபவள் |
மத |
களிப்பு சந்தோஷம்,மகிழ்ச்சி |
பாடல |
இளம் சிவப்பு |
கந்த |
கன்னங்கள் |
பூ |
உடையவள், இருக்கப் பெற்றவள் |
சந்தன |
சந்தனம் |
திரவ |
திரவம் குழம்பு |
திக்த |
தடவியிருப்பவள் |
அங்க |
உடலின் அங்கங்களின் மீது |
சாம்பேய |
ஷண்பக மரம் |
குஸும |
மலர்கள் |
ப்ரியா |
விரும்பி அணிபவள் |
ப்ரம்மானந்தத்தின் களிப்பு மேலீட்டால்
உவப்பு மேலிட தன் அழகிய சிவந்த கண்களை சுழற்றுபவள்.பெரு உவகையினால் மெருகேறி மிளிகின்ற
ரோஜா நிறக் கன்னங்களை உடையவள்.சந்தனக் குழம்பை தன் மேனி எங்கும் பூசி மகிழ்பவள்.ஷண்பக
மலர்களை மிகவும் நேஸிப்பவள்.
இந்த பதிவுகளை voice ஆகவு தினம் தந்துவருகிறேன் அதையும் கேட்டு
உணர்ந்து மகிழ்ந்து அம்பாளின் பேறருட் கருணைக்குப் பாத்திரமாகுங்கள்
இன்று இந்த ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்
பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன்
ஜகன்நாதன்
புதன் ஜூலை, 17 , 2024
No comments:
Post a Comment