Monday, July 15, 2024

 

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 37

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்                                                                                  

ஞாயிறு, ஜூலை  14, 2024

அனைவருக்கும் வணக்கம்

நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில் இதுவரை நாம் 80 ஸ்லோகங்களைப் பார்த்துவிட்டோம்.இதுவரை க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ்ய ஸ்வரூபம் வரை பார்த்துள்ளோம்

அடுத்ததாக இன்றுமுதல் பீடங்களும் அங்க தேவதைகளும் பற்றிய பதிவுகளைப் பார்க்கப் போகிறோம்

பரா, ப்ரத்யக் சிதீரூபா, ஸ்யம்தீ, பரதேவதா |
மத்யமா, வைகரீரூபா, பக்தமானஸ ஹம்ஸிகா || 81 ||

பரா

அதி உன்னதமான,உருவமற்ற நிலை

ப்ரத்யக்

எதிர்திசையில்,உள்முகமாக திருப்புதல்

சிதீ

அறிவு,ஆன்மா

பஸ்யந்தி

சப்தமாற்றத்தின் இரண்டாம் நிலை

பர

உன்னதமான்

தேவதா

கடவுள்

மத்யமா

சப்தமாற்றத்தின் நடு நிலை,இர்ண்டாம் நிலையான புஷ்யந்திக்கும் நாலாம் நிலையான சப்த நிலைக்கும் நடுவிலிருப்பவள்

வைகரீ

சப்தம்

ரூபா

வடிவானவள்,சப்தமாக தன்னை வெளிப்படுத்தல்

பக்த

பக்தர்களின்

மானஸ

மனதில்

ஹம்ஸிகா

அன்னப் பறவையாய் வாஸம் செய்பவள்

 

இந்த ஸ்லோகத்தில் அம்பாளின் பீடங்களைப்பார்க்கிறோம். பர தேவதையாக அம்பாள் தேவதைகளுக்கெல்லாம் தேவதையாக இருக்கின்றாள்.இதில் அதி உன்னதமான உருவமற்ற நிலையில் ஓசை வடிவாகத்திகழிகின்றாள்
இதில் அம்பாளின் தோற்றமில்லா வடிவம் ஓசையாக வருனிக்கப் படிகிறது.மானுட சரீரத்தில் மூலாதாரத்தில் உருவாகும் ஓசை ப்ரானனுடைய உதவியால் பேச்சாக உருவெடுக்கின்றது.மணிபூரம் என்ற நிலையை எட்டும்போது அது பச்யந்தி என்ற இரண்டாம் நிலையை அடைகின்றது.அனாஹத சக்கரத்தில் அந்த ஓசையில் அறிவு உருவெடுத்து அது மத்யமா எனப்படுகிறது.நாலாவது நிலையான பேச்சாக உருவெடுக்கும்போது அது வைகரீ எனப்படுகிறதுஅம்பாள் இந்த அனைத்து குண்டலியின் நிலைகளிலும் ஸ்தானம் கொண்டு இருக்கின்றாள். அம்பாள் தன்னை சப்தமாகவும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றாள்.பக்தர்களின் மனமான பீடத்தில் அம்பாள் ஒரு அன்னப் பறவையாக வாஸம் செய்கிறாள்.

 

காமேஸ்வர ப்ராணனாடீ, க்றுதஜ்ஞா, காமபூஜிதா |
ஸ்ருங்கார ரஸஸம்பூர்ணா, ஜயா, ஜாலந்தரஸ்திதா || 82 ||

காமேஷ்வர

காமேஷ்வ்ரரான பரமேஸ்வரரின்

ப்ராண

உயிர்

நாடி

ஸ்வாஸமும் னாடித்துடிப்புமானவள்

க்றுத

கிடைக்கப் பெறுதல்

ஞா

அறிவு,ஞானம்

காம

காமதேவனால்

பூஜிதா

பூஜிக்கப் படுபவள்

ஷ்ருங்கார

பேரழகின்

ரஸ

சாரமாகி

சம்பூர்ணா

முழுமையாக வெளிப்படுபவள்

ஜயா

வெற்றியே வடிவானவள்

ஜலாந்தர

ஜலாந்த்ரபீடமான அனாஹதத்தில்

ஸ்திதா

ஸ்திரமாக நிலைத்திருப்பவள்

 

அம்பாள் காமேஷ்வர ரான பரமேஷ்வர ரின் ஸ்வாசமும் உயிர்த் துடிப்புமாக அமைந்து இருக்கின்றாள்.அறிவும் ஞானமும் கிடைக்கப்பெற்று அவைகளின் வடிவமாகவே அம்பாள் திகழ்கின்றாள். காம தேவனால் பூஜித்து வங்கப் படுபவள்.பேரழகின் சாரமாகி அதன் முழு வெளிப் பாட்டு டன் விளங்குபவள்.வெற்றியே வடிவானவள்.ஜலாந்த்ர பீடமான அநாஹதத்தில் ஸ்திரமாக நிலைத்திருக்கின்றாள்

 


ஓட்யாண பீடனிலயா, பிந்துமண்டல வாஸினீ |
ரஹோயாக க்ரமாராத்யா, ரஹஸ்தர்பண தர்பிதா || 83 ||

ஒட்யாண பீட

ஆக்ஞ்யா சக்கரம்

நிலயா

நிலைத்திருப் பவள்

பிந்து மண்டல

ஸ்ரீ சக்ரத்தின் மத்தியில்

வாஸினீ

உறைபவள்

ரஹோ

ரஹஸ்ய பாவம்

யாக

யாகம்,அர்ப்பணிப்பு

க்ரம

முறை ,கோட்பாடு

ஆராத்யா

ஆராதிக்கப் படுபவள் சூக்ஷும வழிபாடு

ரஹஸ்

ரஹசிய

தர்பண

பலி, ஆகாரம், எரிபொருள்

தர்பிதா

சந்தோஷித்து த்ருப்தி அடைபவள்

 

 

அம்பாள் ஆக்ஞ்யா சக்கரத்தில் நிலை கொண்டிருப்பவள். பிந்துமண்டலம் எனும் ஸ்ரீ சக்கரத்தில் உறைபவள்.ரஹஸ்ய பாவத்தில் அர்பணிக்கப் படும் சூக்ஷும வழிபாட்டு முறைகளால் ஆராதிக்கப் படுபவள். அர்பணிக்கப் படும் பலியால் சந்தோஷித்து திருப்தி அடைபவள்

இன்று இந்த  ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்.

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

ஞாயிறு, ஜூலை  14, 2024

 

No comments:

Post a Comment