.
ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 30
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
ஞாயிறு, ஜூலை 7, 2024
அனைவருக்கும் வணக்கம்
இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 67 ,68 மற்றும்
69 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்.
இந்த ஸ்லோகங்களிலும் அம்பாளின் பஞ்ச ப்ரம்ம
ஸ்வரூபங்களின் வர்ணையே தொடர்கின்றது .இந்த ஸ்லோகங்களில்
அம்பாளே எவ்வாறு ப்ரபஞ்சத்தின் எல்லா உயிரினங்களின் மூல காரணமாக இருக்கின்றாள்
என்பதையும் வேத ஆகமங்களும் ப்ரம்ம,விஷ்ணு மற்றும் இந்த்ராதி தேவர்களும் எவ்வாறூ
அம்பாளை வணங்குகிறார்கள் என்பதும் விவரிக்கப் படுகிறது
ஆப்ரஹ்ம கீடஜனனீ, வர்ணாஸ்ரம விதாயினீ |
னிஜாக் ஞாரூப னிகமா, புண்யாபுண்ய பலப்ரதா || 67 ||
ஆப்ரஹ்ம |
ப்ரம்மாவுடன் சேர்ந்து |
கீட |
கிருமிகள் புழு பூச்சிகளின் |
ஜனனீ |
தாயனவள் |
வர்ணாஷ்ரம |
வாழ்வின் நிலைகள்,குலவேற்றுமைகள் |
விதாயினீ |
ஏற்படுத்தியிருத்தல்,நியமித்தல் |
நிஜ |
இயல்பாக உள்ளுறையும் |
ஆக்ஞா |
ஆணைகள் |
ரூப |
ரூபம் கொண்டு |
நிகமா |
ஆகமங்கள் வேதங்கள் |
புண்யா |
புண்ணியமான |
அபுண்யா |
புண்ணியமற்ற பாபங்கள் |
பல |
பலங்கள் |
ப்ரதா |
வழங்குபவள் |
லோகமாதவான அம்பாள் இந்த ப்ரஞ்சத்தின் முதல் ஆக்கும் கடவுளான ப்ரம்ம முதல்,உயிரிங்களில்
கடையினமான Bacteria கிருமிக்கள் வரை அனைத்தையும் படைக்கும் தாயாக விளங்குகிறாள்.வரணாஸ்ரம
தர்மத்தை ஏற்படுத்தி நியமத்திருப்பவள். ந்யாயமாகவும் உண்மையாகவும் உள்ள ஆணைகளின் ரூபம்
கொண்டு ஆகமங்களாக விளங்குபவள்.புண்ணிய மற்றும் புண்ணியமற்ற பாபச் செயல்களின் பலாபலன் களை செய்தவற்கு வழங்குபவள்
ஸ்ருதி ஸீமந்த ஸிந்தூரீ க்றுத பாதாப்ஜ தூளிகா
|
ஸகலாகம ஸந்தோஹ ஸுக்தி ஸம்புட மௌக்திகா || 68 ||
ஷ்ருதி |
வேதம், வேதவடிவமான மாதா |
சீமந்த |
உச்சி வகிடு |
சிந்தூர |
குங்குமம் |
க்ருத |
பெறப்பட்ட |
பாதாப்ஜ |
பாத தாமரைகள் |
தூலிகா |
துக்ள்கள் தூசிகள் |
சகல |
சர்வமும், முழுவதும் |
ஆகம |
வேத சாஸ்த்ரங்கள் |
சந்தோஹ |
முழுமையும் ,அனேகமும் |
ஷுக்தி |
முத்துச் சிப்பி |
ஸம்புட |
தொகுப்பு |
மௌத்திக |
முத்து |
.நான்கு வேதங்களை தேவதைகளாக உருவகப் படுத்தி அவர்கள் அன்னையைத் தொழும்போது
அம்பாளின் சிவந்த பாதத் தூள்கள் சிந்தூரமாக அவர்களின் வகிடை அலங்கரிக்கின்றன.ஜீவன் களின் பாப புண்ணியங்களின் பலா பலங்களை பங்கிட்டுக்
கொடுப்பவள் அம்பாளே. ஆகமங்களும் வேதங்களும் நல்ல முத்தை சுமந்து நிற்கும் சிப்பியைப்
போண்றவைகளே.அதன் உள்ளே உறையும் பரம்பொருளே சாரமானதாகும்.முத்தை சிப்பியிலிலிருந்து
அடைவதைப் போல் அம்பாளின் கருணையை அடைய ஆகமங்களும் வேதங்களும் துணை புரிகின்றன்.
புருஷார்த ப்ரதா, பூர்ணா, போகினீ, புவனேஸ்வரீ |
அம்பிகா,உனாதி னிதனா, ஹரிப்ரஹ்மேம்த்ர ஸேவிதா
|| 69 ||
புருஷார்த்த |
மானுட குறிக் கோளுடன் கூடிய இலக்குகளை |
ப்ரதா |
வழங்குபவள் |
பூர்ணா |
குறைபாடு அற்ற முழுமையானவள் |
போகினீ |
துய்யப்பவள்,அனுபவிப்பவள் |
புவனேஸ்வரீ |
சகல புவனங்களையும் ஆள்பவள் |
அம்பிகா |
ப்ரபஞ்சத் தாயானவள் |
அனாதிநிதனா |
ஆதி அந்தம் இல்லாத சாஸ்வதமானவள் |
ஹரி |
மஹாவிஷ்ணு |
ப்ரம்ம |
ப்ரம்மா |
இந்த்ர |
இந்திரன் |
சேவிதா |
வணங்கப் படுபவள் |
|
|
மனிதப் பிறவியின் குறிக் கோள்களின் இலக்குகளை அடய அனுக்ரஹிப்பவள். மனிதனின்
தேடல்கள் நான்கு ஆகும் அவை தர்ம,அர்த்த ,காம மற்றும் மோக்க்ஷமாகும்.அறம்,பொருள்
,இன்பம் மற்றும் வீடு என்று தமிழில் சொல்லுவோம்.இவைகளை ஜீவாத்மாக்கள் அடைய அம்பாளே
வழிவகுக்கிறாள்.அம்பாள் பூர்னத்துவம் பெற்ற முழுமயானவள்பூர்ணம் என்பது அள்ளக் குறையாத
அக்ஷய பாத்திரம் போன்றது மற்றும் சாஸ்வதன்மானது.புவன ஈஸ்வரியாக அம்பாள் புவனம் முழுவதியும்
ஆக்ஷி செய்கிறாள்.அம்பிகா என்று ப்ரபஞ்சத்தின் தாயாக விளங்குகிறாள்.ஆதி அந்தமில்லாத என்றும் நிலைத்திருக்கும் சாஸ்வதமானவள்.உயர்ந்த
தேவர்களான ப்ரம்ம,விஷ்ணு மற்றும் இந்திரனால் வணங்கப் படுபவள்
இந்த விளக்கங்களை voice ஆகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு
அம்பாளின் பேர ருளுக்கு பாத்திரமாகுங்கள்
இன்று இந்த ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்
பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன்
ஜகன்நாதன்
ஞாயிறு, ஜூலை 7, 2024
No comments:
Post a Comment