ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 49
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
வெள்ளி ஜூலை, 26, , 2024
அனைவருக்கும் வணக்கம்
நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில் நேற்று
முதல் விபூதி விஸ்தாரம் என்ற பகுதியைப் பார்த்து
வருகிறோம்..
ஆக இன்று 113 114, மற்றும் 115 ஆவது ஸ்லோகங்களைப் பார்க் கப்போகின்றோம்.
இந்த எல்லா ஸ்லோகங்களுமே அம்பாளின் பேரருட் கருணை எப்படி
இந்த ப்ரபஞ்சம் முழுதும் பரவி அனைத்து நிலைகளிலும் காத்து அருள் புரிந்து இகத்திலிருந்து
விடுதலையும் பரலோக ப்ராப்தியும் அளிக்கிறாள் அம்பாள் என்பதை விளக்குகின்றன.
அக்ரகண்யா,உசிந்த்யரூபா, கலிகல்மஷ னாஸினீ |
காத்யாயினீ, காலஹந்த்ரீ, கமலாக்ஷ னிஷேவிதா || 113 ||
அக்ர |
முதலாவதாக |
கண்யா |
கவணித்து கணக்கெடுத்தல்.
ப்ரபஞ்ச ஸ்ருஷ்டியில் அம்பாளே முதன்மையானவள் |
அசிந்த்ய |
சிந்தனைக்கும் கற்பனைக்கும்
எட்டாதவள் |
ரூபா |
அனைத்திற்கும் அப்பார்ப்
பட்ட நிலையில் நிற்பவள் |
கலி |
கலியுகம் |
கல்மஷ |
பாபங்கள், அழுக்குகள் |
நாஸினீ |
அழித்துப் போக்குபவள் |
காத்யாயினீ |
காத்யாயன முனிவரின் புதல்வி |
கால |
காலன்,மரணம்,மாற்றங்கள் |
ஹந்த்ரீ |
அழிப்பவள். ஜனன மரண சுழற்சியை
அழித்து முக்தியை அளிப்பவள் |
கமலாக்ஷ |
தாமரையை போன்ற கண்களையுடைய
மஹாவிஷ்ணுவால் |
சேவிதா |
சேவித்து ஆராதிக்கப் படுபவள் |
அம்பாளே ப்ரபஞ்ச ஸ்ருஷ்டியில் முதன்மையானவள். சிந்தனைக்கும் கற்பனைக்கும்
எட்டாதநிலையில் இருந்து அனைத்திற்கும் அப்பார்ப் பட்டவள். பாபங்களும் தோஷங்களும் நிறைந்த
கலியுகத்தின் தீமைகளை நாசம் செய்து அழிப்பவள்.
காத்யாயனர் என்ற முனிவரின் புதல்வியானவள்.ஆக்ஞா சக்கரத்தில் பீட தேவதா
ரூபமான காத்யாயினி தேவி என்றும் பொருள் கொள்ளலாம்.காலம் என்ற மரணத்தை தவிர்த்து அதனைக்
கடந்து நிற்பவள்.ஞானிகளுக்கு ஜனன மரண சுழர்ச்சியை ஒழித்து அருள்பவள்.காலத்தின் நிலையாமையை
பொய்யாக்கி முக்தியை அளிப்பவள்.தாமரைக் கண்களைக் கொண்ட மஹாவிஷ்ணுவால் அர்ச்சித்து
உபசரிக்கப்பட்டு ஆராதிக்கப் பட்டவள்
தாம்பூல பூரித முகீ, தாடிமீ குஸுமப்ரபா |
ம்றுகாக்ஷீ, மோஹினீ, முக்யா, ம்றுடானீ, மித்ரரூபிணீ || 114 ||
தாம்பூல |
தாம்பூலம் |
பூரித |
பூரணமாக முழுதும் பரவியுள்ள |
முகீ |
முகம் மற்றும் வாயில் தாம்பூலம்
தரித்தவள் |
தாடிமீ |
மாதுளை |
குஸும |
மலர்போன்ற சிவந்த நிறம் |
ப்ரபா |
ஒளிர்ந்து மிளிர்ந்து மின்னுபவள் |
ம்ருக |
மான் |
அக்ஷீ |
கண்களை உடையவள் |
மோஹினீ |
மோஹனமாக வசீகரிப்பவள் |
முக்யா |
அனைத்திலும் ப்ரதான மானவள் |
ம்ருடானீ |
ம்ருடர் என்ற சிவபெருமானின்
பத்தினி, மகிழ்ச்சி அளிப்பவள் |
மித்ர |
நட்பு |
ரூபிணீ |
வடிவானவள்,ப்ரபஞ்சத்தின்
அனைத்துயிர் களுக்கும் உற்ற தோழியானவள் |
தாம்பூலம் தரித்து சிவந்த
நிறமும் நல்ல நறுமணம் கமமும் வாயை உடைய முகமுடையவள்.மாதுளை
மலர் போன்ற சிவந்த நிறத்தில் ஜ்வலித்து மின்னுபவள். மானின் விழிகளைப் போன்ற அழகிய
விழிகளை உடையவள்.தன்னுடைய மோஹனத்தினால் யாவரையும் வசீகரிக்கக் கூடியவள்.ப்ரபஞ்சத்தின்
அனைத்திலும் அம்பாளே ப்ரதானமானவள்.ம்ருடர் எனும் பரமேஸ்வரரின் பத்தினியான ம்ருடானி
யானவள்.அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பவள்.னட்பு வடிவமாயிருந்து ப்ரபஞ்சத்தின் அனைத்து
உயிர்களுக்கும் அம்பாள் உற்ற தோழியாக விளங்குகிறாள்.
னித்யத்றுப்தா, பக்தனிதி, ர்னியந்த்ரீ, னிகிலேஸ்வரீ |
மைத்ர்யாதி வாஸனாலப்யா, மஹாப்ரளய ஸாக்ஷிணீ || 115 ||
நித்ய |
நிதமும்,
என்றென்றும் மாறாத |
த்ருப்தா |
மன நிறைவும்
த்ருப்தியும் கொண்டவள் |
பக்த |
பக்தர்களுக்கு |
நிதி |
மாபெரும்
செல்வமான பொக்கிஷமாக உள்ளவள் |
நியந்த்ரீ |
புவனத்தை
கட்டுப் படுத்தி ஆள்பவள் |
நிகில |
பரிபூரணமான |
ஈஷ்வரீ |
கட்டுப்
படுத்தி ஆளும் ஈஸ்வரி / அரசியான தலைவி |
மைத்ர |
நட்பு
உறவு |
ஆதி |
போன்ற
மேன்மையான |
வாஸனா |
எண்ணம்,ஆசை,இயல்பு
போன்ற குணங்கள் |
லப்யா |
அடையக்
கூடியவள் |
மஹாப்ரளய |
பேரழி,ப்ரபஞ்சத்தின்
ஒடுக்கம் |
சாக்ஷிணீ |
சாக்ஷியாக
விளங்குபவள் |
அம்பாள்
என்றென்றும் மறாத மன நிறைவும் த்ருப்தியும் கொண்டவள். பக்தர்களுக்கு பெரும் செல்வப்
பொக்கிஷமானவள்.பரிபூரணமாக இந்த புவனத்டைக் கட்டுப் படுத்தி ஆள்பவள்.இந்த ப்ரபஞ்சத்தின்
தலைவியானவள்.நட்பு உறவு போன்ற மேன்மையான குணங்களில் ஆவல் கொண்டு அவ்வித மேன்மையான பண்புகளால்
அடையக் கூடியவள். பேரூழிக் காலத்தில் ப்ரபஞ்சத்தின் ஒடுக்கத்தின் போது தான் மட்டுமே
நிலைத்திருந்து அதற்கு சாக்ஷியாக இருப்பவள்.
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
வெள்ளி ஜூலை, 26, , 2024
No comments:
Post a Comment