2 ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம்
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
வெள்ளி, ஜூலை 12, 2024
அனைவருக்கும் வணக்கம்
நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில் இன்று முதல் அம்பாளி நாம்ஸ்வரூபங்களின் வர்ணனைகளை ப் பார்க்கப் போகின்றம்.
நாம் இந்த வனர்னையையும் பதிவையும் ஆரம்பிப்பதர்க்கு முன்னதாக அம்பாளின் நான்கு
த்யான ஸ்லோகங்கள் பற்றிய வர்னையைப் பார்ப்போம்
1)ஸிந்தூராருண விக்ரஹாம் த்ரிநயநாம் மாணிக்ய மௌலிஸ்புரத் தாராநாயகஶேகராம் ஸ்மிதமுகீமாபீநவக்ஷோருஹாம் பாணிப்யாமலிபூர்ணரத்நசஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம்ஸௌம்யாம் ரத்நகடஸ்தரக்தசரணாம் த்யாயேத்பராமம்பிகாம் ॥
சிந்தூருரண
விக்ரஹாம் |
குங்குமத்தின்
நிறத்தி ஒத்த உதிக்கும் சூரியன் போன்ற உருவம் |
திரி நயனாம் |
முக்கண்ணுடையவள் |
மாணிக்க |
மாணிக்கத்தை |
மௌலி ஸ்புரத் |
சிரசில் தரித்தவள் |
தாராநாயக சேகராம் |
நட்சத்திரங்களின்
நாயகனான சந்திரனை உச்சியில் தரித்தவள் |
ஸ்மித முகீ |
புன்னகை சிந்தும்
முகம் |
ஆபீன வக்ஷோருஹாம் |
திண்மையான்
மார்பகமுடையவள் |
பாணிப்யாம் |
கரங்களில் |
அளிபூர்ன |
தேன் நிரம்பிய |
ரத்ன ஷசகம் |
ரத்ன கிண்ணத்தை
ஏந்தியிருப்பவள் |
ரக்தோத் பலம்
பிப்ரதீம் |
சிவந்த மலர்களை
ஏந்தியுள்ளாள் |
சௌம்யாம் |
அழகு பொருந்தியவள் |
ரத்ன கடஸ்த |
ரத்னக் குடத்தில் |
ரத்ன சரணாம் |
சிவந்த பாதங்களை இருத்தியுள்ளாள் |
த்யாயேத் |
வணங்குகிறேன் |
பரமாம் அம்பிகாம் |
இப்படிப் பட்ட
அம்பிகையை |
பொருள்
குங்குமத்தின் நிறத்தை ஒத்த திருமேனியும் முக்கண்ணும் ,சிவந்த
மாணிக்கத்தை சிரசிலும்,சந்திரனை உச்சியிலும் தரித்தவளும், மந்தஹாசப் புன்னகை சிந்துபவளும்,திண்மையான
மார்பகத்தை உடையவளும்,கைகளில் தேன் நிரம்பிய ரத்ன கிண்னத்தையும்,சிவந்த
மலர்களையும் கொண்டவளும் சிவந்த பாதத்தை
ரத்னக் குடத்தில் இருத்தி வீற்றிருப்பவளும் சௌந்தர்யம் பொருந்தியவளுமான அம்பிகையை
த்யானிக்கிறேன்
பொருள்
2)அருணாம் கருணா தரங்கிதாக்ஷீம் த்ருதபாஶாங்குஶ புஷ்பபாண சாபாம் ।
அணிமாதி பிராவ்ருதாம் மயூகைரஹமித்யேவ
விபாவயே பவாநீம் ॥
அருணாம் |
சூரிய அருணோதயம் |
கருணா |
கருணை கொண்டவள் |
தரங்கீ |
அலைகள் |
அக்ஷீ |
கண்கள் |
த்ருத |
சுமந்து ,தரித்துக்
கொண்டிருப்பவள் |
பாஸ |
பாஸம் எனும் சூக்ஷுமப்
பிடிப்பு |
அங்குஸம் |
ஜீவங்களை வசப்படுத்தி
தன்னுள் வைத்திருத்தல் |
புஷ்ப பாணா |
மலர் அம்புகள் |
சாபாம் |
கரும்பு வில் |
அணிமாதி |
அஷ்ட தேவதைகளால் |
ப்ராவ்ருதாம் |
சூழப் பட்டவள் |
மயூஹை |
ஒளிர்கின்ற |
அஹம் |
நான் |
இத்யேவ |
இப்படிப்பட்ட |
விபாவயே |
மஹத்துவம் உடைய |
பவானீம் |
பவானி தேவி |
பொருள்
சூரியோருணோதயத்தின் நிறத்தைக் கொண்டவளும்,அருட்கண்களால்
கருணை அலையை தவழ விடுபவளும்,பாசம் அங்குசம் தரித்தவளும்,மலர் அம்புகளையும் கரும்பு
வில்லையும் கொண்டு அஷ்டமா சித்திகளால் சூழப்பட்டவளுமான் பவானியை த்யானிக்கின்றேன்
3)த்யாயேத் பத்மாஸநஸ்தாம் விகஸிதவதநாம் பத்மபத்ராயதாக்ஷீம்ஹேமாபாம் பீதவஸ்த்ராம் கரகலிதலஸத்தேம பத்மாம் வராங்கீம் ।
ஸர்வாலங்காரயுக்தாம்
ஸததமபயதாம் பக்தநம்ராம் பவாநீம்
ஶ்ரீவித்யாம் ஶாந்தமூர்திம் ஸகல ஸுரநுதாம் ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ॥
த்யாயேத் |
ப்ரார்த்தித்து வணங்குகிறேன் |
பத்மாஸனஸ்தாம் |
தாமரையில் வீற்றிருப்பவள் |
விகசித |
ஒளிரும் |
வதனாம் |
வதனம் உடையவள் |
பத்ம பத்ராய |
தாமரை இதழ்களை ஒத்த |
அக்ஷீ |
கண்கலை உடையவள் |
ஹேமாபாம் |
பொன்னென மிளிர்ந்து ஜ்வலிப்பவள் |
பீத வஸ்த்ராம் |
ப்ரஹாசிக்கும் ஆடைகளை தரித்தவள் |
கரகலித |
கரங்களில் |
லசத் |
மின்னும் |
ஹேம பத்மாம் |
தங்கத் தாமரை |
வராங்கீம் |
வரங்களின் வடிவமானவள் |
சர்வ |
சகல விதமான |
அலங்காரயுக்தாம் |
ஆபரண அலங்காரத்துடன் பூரித்திருப்பவள் |
சததம் |
எப்பொழுதும் |
அபயதாம் |
அபயபம் அளிப்பவள் |
பக்த நம்ராம் |
பக்தர்களுக்கு இரங்கி செவிசாய்ப்பவள் |
ஸ்ரீவித்யாம் |
வித்தையின் இருப்பிடம்,ஞான ஸ்வரூபி |
ஷாந்த மூர்த்திம் |
அமைதியின் இருப்பிடம் |
சுர |
தேவர்களால்,தெய்வங்களால் |
அனுதாம் |
வணங்கப் படுபவள் |
சம்பத் |
செழிப்பும் வளமும் |
பிப்ரதாத்ரீம் |
தந்தருள்பவள் |
த்யாயேத் |
த்யானித்து வணங்குகிறேன் |
பவானீம் |
பவானி அம்பாளை |
பொருள்
பத்மத்தில் வீற்றிருப்பவளும்,ஒளிரும்
திங்களென முகமுடையவளும்,தாமரை இதழை ஒத்த கண்களை உடையவளும்,ப்ரகாசிக்கும் பட்டாடை தரித்தவளும்,கைகளில்
மிளிரும் தங்கத்தாமரையைய் கொண்டவளும்,சகல விதமான ஆடை ஆபரண அலங்காரங்களுடன் பூரித்திருப்பவளான்
பவனியை வணங்குகிறேன்
ஸகுங்குமவிலேபநா மலிகசும்பி கஸ்தூரிகாம் ஸமந்த ஹஸிதேக்ஷணாம் ஸஶரசாப பாஶாங்குஶாம்। அஶேஷஜநமோஹிநீமருணமால்யபூஷம்பராம் ஜபாகுஸும பாஸுராம் ஜபவிதௌ ஸ்மரேதம்பிகாம் ॥
ஸகுங்கும |
அழகான குங்குமத்தை |
விலேபனாம் |
பூசி அணிந்திருப்பவள் |
அளிகசும்பி |
நெற்றியில்
முத்தமிட்டிருக்கும் |
கஸ்தூரிகாம் |
கஸ்தூரித்
திலகம் |
ஸமந்த் ஹசி |
மெல்லிய புன்னகை |
தேக்ஷணாம் |
கொண்டிருப்பவள் |
சரசாப |
அம்பு வில் |
பாஸாம் |
ஜீவன்களைக்
கட்டும் பிணைப்ப |
அங்குசம் |
அங்குசமான
அடையாளம் |
அஸேஷ |
எல்லாமும்
எல்லோரும் |
ஜனமோஹினீம் |
ஜனங்ளால் மோஹிக்கப்
படுபவள் |
அருண மால்ய |
சிவந்த செந்தூர
மாலை |
பூஷாம்பராம் |
அலங்காரமாக
உடுத்தியிருப்பவள் |
ஜபாகுஸும |
செம்பருத்தி
மாலை |
பாஸுராம் |
மின்னும் |
ஜப விதௌ |
ஜபத்தின் போது
அதன்விதிகளின் படி |
ஸ்மரேத் |
த்யானித்து
வணங்குகிறேன் |
பொருள்
குங்குமத்தி
பூசியிருப்பவளும்,நெற்றியில் கஸ்தூரித் திலகம் கொஞ்சுபவளும்,மென்மையான புன்னகை
சிந்துபவளும்,அம்பு வில் பாசாஅங்குசம் ஏந்தியவளும்,எல்லா ஜீவங்களும் தன்னித்தில்
அன்பு கொள்லச் செய்திருப் பவளும்,சிகப்பு மாலை செம்பருத்தி பூ சூடியிருப்பவளும்
அழகு அணிசெய்யும் அலங்காரத்துடன் ஜ்வலிப்பவளுமான அம்பிகையை ஜபத்தின் பொழுது
த்யானிக்கிறேன்
இன்று இந்த ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்நாளை மீண்டும் வழக்கமான் அம்பாளின் நாமாவளி ஸ்லோகங்களைப் பார்ப்போம
இந்த பதிவின் வாய்வழி உறையையும் தந்துள்ளேன் அதையும் கேட்டு இன்புற்று அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன்
ஜகன்நாதன்
வெள்ளி, ஜூலை 12, 2024
No comments:
Post a Comment