Monday, July 15, 2024

  

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 39

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

செவ்வாய்,, ஜூலை  16, 2024

அனைவருக்கும் வணக்கம்

நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில் பீடங்களும் அங்க தேவதைகளும் பற்றிய பதிவுகளைப் பார்த்து வருகிறோம். இன்று 87,88 மற்றும் 89 வது ஸ்லோகங்களைப்பார்போம். அம்பாள் எப்படி அங்கங்களின் தலைவியாகவும் உணர்வுகளின் உருவமாகவும் விளங்குகிறாள் என்பதையே இந்த ஸ்லோகங்கள் விளக்குகின்றன

                                                                                                                                       

 வ்யாபினீ, விவிதாகாரா, வித்யா‌உவித்யா ஸ்வரூபிணீ |

மஹாகாமே யனா, குமுதாஹ்லாத கௌமுதீ || 87 ||

 

வ்யாபினீ

எங்கும் பர்ந்து விரிந்து வியாபித்திருப்பவள்

விவித

பலவிதமான

ஆகார

உருவம், தோற்றங்களை உடையவள்

வித்யா

பேறறிவு

அவித்யா

அறியாமை

ஸ்வரூபிணீ

உருவமாக விளங்குபவள்

கௌமுதீ

நிலவொளி போன்ற தனது இருப்பினால்

ஆஹ்லாத

மகிழ்வூட்டி

மஹாகாமேஷ

பரமேஸ்வரின்ர

நயன

கண்களை

குமுத

செந்தாமரை மலர் போல் மலர்ச்செய்பவள்

 

அம்பாள் இந்த ப்ரபஞ்சம் முழுவதும் தானே பரந்து விரிந்து வியாபித்து இருப்பவள்.பலவதமான தோற்ற நிலைகளையும் உருவங்களையும் கொண்டிருப்பவள்.பேறறிவாகவும் அறியாமையாகவும் எங்கும் எதிலும் வியாபித்து நிறைந்திருப்பவள்.இதன் பொருள் ஜீவாத்மாக் களின் விழிப்பு நிலை மற்றும் உறக்க நிலை என அனைத்திலும் அம்பாளே மறைபொருளாக இருந்து அனைத்தையும் நடத்துகிறாள். குளிர்ந்த நிலவின் ஒளியைப் போன்ற தனது இருப்பினாலும் வடிவத்தாலும் சிவனை மகிழ்வூட்டி அவரது செந்தாமரை போன்ற கண்களை மலரச் செய்கிறாள்.

 

பக்தஹார்த தமோபேத பானுமத்-பானுஸந்ததிஃ |
ஸிவதூதீ, ஸிவாராத்யா, ஸிவமூர்தி, ஸ்ஸிவம்கரீ || 88 ||

 

பக்த

பக்தர்களின் மீது கொண்ட

ஹார்த

அன்பு பிரியம்,பரிவு

தமோ

தாமஸ குணம்

பேத

பேதம் வித்தியாசம்என்ற அறியாமையை

பானுமத்

ப்ரகாஸமான சூரியனின்

பானுஸந்ததி

வரிசைத் தொடரான கதிர்களால் அழிப்பவள்

ஷிவ

சிவனை

தூதி

தன் தூதுவராக்கியவள்

சிவ

சிவனால்

ஆராத்யா

வணங்கப் படுபவள்

சிவமூர்த்தி

சிவஸ்வரூபமானவள்

ஷிவ

மங்களம்,சௌபாக்யம்

கரீ

வழங்கும் கரமுடையவள்,அவைகளுக்குக் காரணமானவள்

 

பக்தர்களின் மீது கொண்ட அன்பினாலும் பிரியத்தாலும் அவர்களிடம் குடி கொண்டுள்ல தாமஸ குணம், அறியாமை பேதம் வித்தியாசம் போன்ற தாழ்ந்த குணங்களை தன்னுடைய மிளிரும் சூரியக் கதிர்போன்ற ப்ரஹாஸத்தால் அகலச் செய்பவள்.சிவபெருமானையே தனது தூதுவராக்கியவள்.அதாவது தன் செயல்பாடுகளை சிவபெருமான் மூலமாக நிறைவேற்றுபவள்.அம்பாளே சிவஸ்வரூபமான சிவமூர்த்தியாகி அவரால் வணங்கப் படுபவள். மங்களங்களுக்கும்,சௌபாக்யத்துக்கும் காரணமாகி அவைகளை வழங்கும் கரம் கொண்டவள்.


ஸிவப்ரியா  ஸிவபரா, ஸிஷ்டேஷ்டா, ஸிஷ்டபூஜிதா |
அப்ரமேயா, ஸ்வப்ரகாஸா, மனோவாசாம கோசரா || 89 ||

ஷிவ

சிவனுக்கு,சிவனை

ப்ரியா

நேஸிக்கப் படுபவள், நேஸிப்பவள் பரஸ்பரம்

பரா

இன்னொன்று வேறானது

அபரா

இன்னொன்றில்லாதது

ஸிவ அபரா

சிவனிடம் ஒருமித்த பக்தியை செலுத்துபவள்

ஷிஷ்டா

நேர்மையான கட்டுப் பாடு உடையவள்

இஷ்டா

பண்பாளர்களின் ப்ரியத்துக்கு உகந்தவள்

ஷிஷ்ட

சீலமிக்க பண்பாளர்கள்

பூஜிதா

பூஜிக்கப் படுபவள்

அப்ரமேயா

எல்லையற்று புலன்களால் உணர முடியாதவள்

ஸ்வ

சுயமாக,தானே

ப்ரகாஸா

ப்ரஹாசித்து ஜ்வலிப்பவள் ஸ்வயம் ப்ரகாஸீ

மனோ

மனதால்,கற்பனையால்

வாசம்

வாக்கு,பேச்சு, பேச்சின் கருத்து

அகோசரா

அடைய முடியாத எல்லைக்கப்பார்ப் பட்டவள்

 

சிவனுக்கு ப்ரீதியாகி அவரால் நேசிக்கப் படுபவள் மற்றும் சிவனை நேசித்து மகிழ்பவள்.இதுவே பரஸ்பரமான அன்பாகும்.ஒன்று மற்றொன்று என்ற பேதங்களுக்கு அப்பார்ப் பட்டவள்.அம்பாள் சிவனிடமிருந்து அப்பார்ப் பட்டு வேறுபட்டவள் அல்ல.சிவனிடம் ஒருமித்த பரிபூரண பக்தியை செலுத்துபவள். லலிதாம்பிகையே சிவனாக் கருதி அவளே சிவத்திற்கு அப்பார்ப் பட்ட பரப்ரம்ம மாக உள்ளாள் என்று கருதுவோரும் உண்டு.பண்பாளர்களின் பிரியத்துக்கு உரியவள்.பண்பாளர்களின் மீது பிரியம் கொண்டவள். சீலம் மிக்க பண்பாளர்களால் பூஜிக்கப் படுபவள்.எல்லையற்ற ஸ்வரூபினியாக இருப்பதால் ஐம்புலங்களால் உணரப் பட முடியாதவள்.ஸ்வயம் ப்ரஹாசமாகி தானே உள்ளொளியாய் ஜ்வலிப்பவள் மனதின் புரிதலுக்கும் வாக்கின் கருத்துக்கும் அகப் படாமல் எல்லையிலாது விரிந்து காணப் படுபவள்.புலங்களின் திறனுக்கு அப்பார்ப் பட்டவள்.

 

இந்த பதிவுகளை voice ஆகவு தினம் தந்துவருகிறேன் அதையும் கேட்டு உணர்ந்து மகிழ்ந்து அம்பாளின் பேறருட் கருணைக்குப் பாத்திரமாகுங்கள்

இன்று இந்த  ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்.

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

செவ்வாய்,, ஜூலை  16, 2024

 

 


 

  

No comments:

Post a Comment