ஶ்ரீலலிதா
சஹஸ்ரநாமம் 51
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
ஞாயிற்றுக்கிழமை ஜூலை, 28, , 2024
அனைவருக்கும் வணக்கம்
நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில் தற்போது
விபூதி விஸ்தாரம் என்ற பகுதியைப் பார்த்து
வருகிறோம்..
இதுவரை 118 ஸ்லோகங்களையும் அவைகளில் உள்ள 589 நாமாவளிகளையும்
பார்த்து விட்டோம்.
இன்று நமது லலிதா சஹஸ்ரநாம வ்ர்ணனைகளின் தொடரில் மூன்று ஸ்லோகங்களைப்
பார்க்கப் போகின்றோம் அவை 119,120, மற்றும் 121 ஆகும். அம்பாளி நாமாவளிகளில் இதுவரை
589 நாமாவளிகளின் வ்ர்ணனைகளைப் பார்த்துவிட்டோம் இன்றைய ஸ்லோகங்களில் 590 முதல் 606
வரையிலான 17 நாமாவளிக்ளைப் பார்ப்போம்.
கடாக்ஷகிம்கரீ பூத கமலாகோடி ஸேவிதா |
ஸிரஃஸ்திதா, சந்த்ரனிபா, பாலஸ்தே ந்த்ர தனுஃப்ரபா || 119 ||
கடாக்ஷ |
கண நேர கடைக்கண் பார்வை |
கிங்கரீ |
சேவைபுரியும் பெண்கள் |
பூத |
பூத உடல் |
கமலா |
தாமரையில் பிறந்த |
கோடி |
கோடி லக்ஷ்மிகளால் |
சேவிதா |
துதிக்கப் படுபவள்.தனது கடாக்ஷத்துக்கு
ஏங்கும் கோடி லக்ஷ்மிகளால் ஆராதிக்கப் படுபவள். |
சிர |
தலையின் உச்சியில், சஹஸ்ராரத்தில் |
ஸ்திதா |
குடியிருந்து வெளிப்படுபவள் |
சந்த்ர |
முழுமதியான சந்திரன் |
நிபா |
போன்று இருப்பவள் |
பால |
நெற்றியின் |
ஸ்த |
நடுவில் உள்ள ஆக் ஞா சக்கரத்தில்
நிலைத்திருப்பவள் |
இந்த்ர |
இந்திரனின் |
தனு |
வில்லான வானவில்போல |
ப்ரபா |
மிளிர்ந்து ஒளிர்பவள் |
அம்பாள் பூத உடல் கொண்ட தங்க்கு பணி புரிய ஏங்கும் பணிப் பெண்களாலும்,தாமரையில்
உதித்த கோடிக் கணக்கான லக்ஷ்மிகளாலும் துதித்து வணங்கப் பெறுகின்றாள்.சிரசின் உச்சியின்
ஆதார ஸ்தானமான் சஹ்ஸ்ராரத்தில் குடியிருந்து தன்னை வெளிப்படுத்துபவள்.முழு மதியைப்
போன்று அழகுடனும் ஸோபையுடனும் விளங்குபவள்.நெற்றியின் மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரத்தில்
நிலைத்திருப்பவள். இந்திரனின் வில்லான வண்னமயமான் வானவில்லைப் போன்று மிளிர்ந்து விளங்குபவள்
ஹ்றுதயஸ்தா, ரவிப்ரக்யா, த்ரிகோணாம்தர தீபிகா |
தாக்ஷாயணீ, தைத்யஹம்த்ரீ, தக்ஷயஜ்ஞ வினாஸினீ || 120 ||
ஹ்ருதய |
இதயங்களில் |
ஸ்தா |
வீற்றிருப்பவள்.பரமேஸ்வரரின்
இதயத்தில் வேதங்கள் மற்றும் வேதப் பொருளாகவும், பக்தர்களின் இதயத்தில் பரமாம்பிகையாகவும்
வீற்றிருக்கின்றாள்ர |
ரவி |
சூரியனைப் போன்று |
ப்ரக்யா |
தெளிவான களங்கமற்ற ஒளி |
த்ரிகோண |
முக்கோணம் |
அந்தர |
அதன் உள்ளே |
தீபிகா |
ஒளியானவள், மூலாதார சக்தியில்
நிலைபெற்று மிளிர்பவள் |
தாக்ஷாயணீ |
தட்சப் ப்ரஜாபதியின் மகளாக
அவதரித்தவள் |
தைத்ய |
திதி என்ற அசுரர்களின் தாய் |
ஹந்த்ரீ |
வதம் செய்து அழித்தவள் |
தக்ஷ யக்ஞ |
தக்ஷனின் யாகத்தை |
வினாசினீ |
நாஸம் செய்து அழித்தவள் |
பரமேஸ்வரரின் இதயத்தில் வேதங்களாகவும் வேதத்தின் சாரமாகவும் வீற்றிருக்கும்
அம்பாள் பக்தர்களின் இதயங்களில் பரமாம்பிகையாக மிளிர்கிறாள். ப்ரகாசிக்கும் சூரியனைப்
போன்று தெளிவான களங்கமில்லா ஒளியுடன் திகழ்கிறாள். ஸ்ருஷ்டி ஸ்தானமான மூலாதாரத்தின்
உள்ளே நிலைபெற்று மிளிர்கின்றாள்.தக்ஷனின் மகளாக தாக்ஷாயணீயாக அவதரித்தவள். திதி
என்ற அசுரர்காளின் தாய் பெற்ற அசுரர்களை அழித்தவள். ஈஸ்வரனை இழிவுபடுத்த எண்ணி தக்ஷன்
செய்த யாகத்தை நாஸம் செய்து அழித்தவள்
தராம்தோளித தீர்காக்ஷீ, தரஹாஸோஜ்ஜ்வலன்முகீ |
குருமூர்தி, ர்குணனிதி, ர்கோமாதா, குஹஜன்மபூஃ || 121 ||
தர
|
கொண்டிருத்தல் |
ஆந்தோலித |
அசைந்து
அலைபாயுதல், ஆடுதல் |
தீர்க |
நீண்ட
,நெடிய |
அக்ஷீ |
கண்களை
உடையவள் |
தர |
கொண்டிருத்தல் |
ஹாஸ |
மந்தஹாசம்,புன்னகை |
உஜ்வலன் |
ப்ரஹாஸமான |
முகீ |
முகம்
வதனம் கொண்டவள் |
குரு |
குரு
ஆச்சார்ய |
மூர்த்தி |
வடிவம்
கொண்டு பக்தர்களுக்கு போதிப்பவள் |
குண |
உயர்ந்த
மேன்மையான குணங்களின் |
நிதி |
களஞ்சியம்,
பொக்கிஷமானவள் |
கோமாதா |
புனிதமான
பசுக்களின் தாயாஇ விளங்குபவள் |
குஹ |
குஹன்,ஸ்கந்தன்,
முருகன் |
ஜன்ம |
பிறப்பிற்கு
ஆதாரமான |
பூ |
பூவுலகில் |
அம்பாளின்
கண்களின் அழகை இந்த நாமாவாளி நீண்ட, அசைந்துகொண்டிருக்கும்,அலைபாயும்
தீர்க்கமான கண்களை உடையவள் என்று விவரிக்கின்றது.அம்பாளின் முக வதனம் ப்ரஹாஸமான மந்தஹாஸமான
புன்னகையுடன் விளங்குகின்றது.குருமூர்த்தியாக இருந்து பக்தர்களின் அஞ்ஞானத்தைப் போக்குகிறாள்.உயர்ந்த
உன்னதமான குணங்களின் பொக்கிஷமாகவும் கள்ஞ்சியமாகவும் விளங்குகிறாள்.முருக குஹ ஷண்முகன்
பிறப்பிற்கு அன்னையே ஆதாரமாகவும் காரணமாகவும் விளங்குகிறாள்.
இத்துடன் இந்த இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்.இவைகளை ஒலி
வடிவமாகவும் தந்துள்ளேன் கேட்டும் படித்தும் மகிழ்ந்து அம்பாளின் பேருட் கருணைக்கும்
சர்வேஸ்வரரின் கடாக்ஷத்துக்கும் பாத்திரமாகுங்கள்.
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
ஞாயிற்றுக்கிழமை ஜூலை, 28, , 2024
No comments:
Post a Comment