Thursday, July 18, 2024

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 41

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

 வியாழன் ஜூலை,  18 , 2024

அனைவருக்கும் வணக்கம்

நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில் பீடங்களும் அங்க தேவதைகளும் பற்றிய பதிவுகளைப் பார்த்து வருகிறோம். இன்றோடு இந்த பீடங்களும் அங்க தேவதைகளும் என்ற பகுதி நிறைவுறுகிறது. நாளை முதல் நாம் அடுத்த பகுதியான யோகினி ந்யாஸம் என்ற பகுதியில் உள்ள நாமாவளிகளைப் பார்க்கப் போகின்றோம்.அதனால் இன்று ஐந்து ஸ்லோகங்கலை எடுத்துக் கொண்டு விளக்கலாம் என எண்ணியுள்ளேன்.

எனவே இன்று 93,94,95,96, மற்றும் 97 வது ஸ்லோகங்களைப் பார்க் கப்போகின்றோம்

அம்பாள் எப்படி அங்கங்களின் தலைவியாகவும் உணர்வுகளின் உருவமாகவும் விளங்குகிறாள் என்பதையே இந்த ஸ்லோகங்களும் விளக்குகின்றன

.    
குலா, கோமலாகாரா, குருகுள்ளா, குலேஸ்வரீ |
குளகும்டாலயா, கௌள மார்கதத்பர ஸேவிதா || 93 ||

குஷலா

தேர்ச்சியும் வல்லமையும் நிறைந்தவள்

கோமல்

மென்மையும் நளின்மும் உடைய

ஆகாரா

உருவம்கொண்டவள்

குருகுல்லா

குருகுல்லா என்னும் தெய்வ வடிவானவள்

குல்

குலம் குழு கூட்டம்

ஈஸ்வரீ

ஆள்பவள் குலம் என்பது அறிபவன், அறியப்படுபவன்,அறிவு மூன்றையும்ம் குறிக்கும்

குளகுண்டா

மூலாதாரத்தில் உள்ள சிறு பிளவு துவாரம்

ஆலயா

குடிகொண்டிருப்பவள்

கௌள மார்க

குலமார்க்க வழிமுறைகளை கடைபிடிப்பவர்கள்

தத்பரசேவிதா

வழிபாட்டிர்க்கு உரியவள்

 

அம்பாள் தன் செயல்கள் அனைத்திலும் தர்ச்சியும் வலமையும் கொண்டவள்.மென்மையும் எழிலுனளினம் மிகுந்த மேனியைக் கொண்டவள். கொண்ட வடிவமுடையவள்.          குருகுல்லா என்ற தேவியின் வடிவம் கொண்டவள்.குலமான குழு அல்லது கூட்த்தை ஆள்பவள்.குலம் என்பது அறிபவன், அறியப்படுபவன்,அறிவு மூன்றையும்ம் குறிக்கும். குலகுண்டாலயா  எனும் மூலாதாரத்தில் உள்ள சிறு பிளவுத் துவாரத்தில் நிலைத்திருப்பவள்.கௌல மார்கம் அல்லது குலமார்க்க வழிபாட்டிர்க்கு உரியவள்.

குமார கணனாதாம்பா, துஷ்டிஃ, புஷ்டி, ர்மதி, ர்த்றுதிஃ |
ஸாந்திஃ, ஸ்வஸ்திமதீ, காந்தி, ர்னந்தினீ, விக்னனாஸினீ || 94 ||

குமார

குமரக் கடவுள் முருகன்

கணநாத

வினாயகர்

அம்பா

அன்னையானவள்

துஷ்டி

எப்பொழுதும் திருப்தியுற்றிருப்பவள்

புஷ்டி

ஆரோக்கியமான செழுமைக்கும் வளர்ச்சிக்கும் ஆதாரமானவள்

மதீ

புத்தி ஞானம் மற்றும் அறிவாக வெளிபடுபவள்

த்றுதி

வல்மை துணிவின் ஊற்றாக விளங்குபவள்

ஸாந்தி

சாந்தமும் அமைதியும் நிறைந்தவள்

ஸ்வஸ்திமதி

நிரந்தர இன்பமருளி அதன் வடிவானவள்

காந்தி

ஸ்வயம் ப்ரஹாஸமானவள்

நந்தினி

பேரின்பம் அருள்பவள்

விக்ன

விக்நங்கள்,தடங்கல்களை

நாஸினீ

நாஸம் செய்து அழிப்பவள்

 

முருகனான குமாரன் மற்றும் கண நாதனான வர்களின் அன்னையானவள்.அனைத்திலும் த்ருப்தியுற்றிருப்பவள்.செழுமை வளர்ச்சி வளம் ஆகியவற்றின் ஆதாரமானவள்.புத்தி ஞானம் மற்றும் அறிவாக வெளிப்படு பவள்.வலிமை துணிவு மற்றும் ஆற்றலின் ஊற்றாக விளங்குபவள். சாந்தமும் அமைதியும் நிறைந்தவள்.நிரந்தரமான பேரின்ப வடிவாகி அப்பேரின்பத்தை அருள்பவள்.ஸ்வயம் ப்ரகாசியாகி தானே ப்ரகாசித்து ஜ்வலிப்பவள்.பேரின்பம் தரும் நந்தினியானவள்.ஜீவராசிகளின் தடைகளையும் விக்னம்களையும் நீக்குபவள்.

 

தேஜோவதீ, த்ரினயனா, லோலாக்ஷீ காமரூபிணீ |
மாலினீ, ஹம்ஸினீ, மாதா, மலயாசல வாஸினீ || 95 ||

தேஜோவதீ

ப்ரஹாஸம் மிகுந்து ஒளிமயமானவள்

த்ரி

மூன்று

நயனா

கண்களை உடையவள் அறிவின் பூர்ணமான

லோலாக்ஷி

உருட்டும்,  அலைபாயும்கண்களை உடையவள்

காம

ஆசையின்

ரூபிணீ

வடிவமானவள்

மாலினீ

அட்டிகையும் மாலைகளையும் தரித்தவள்

ஹம்ஸினீ

அன்னப் பறவை போன்று தவம்,வைராக்யம் ,நிஷ்களங்கத்தைப் ப்ரதிபலிப்பவள்

மதா

ப்ரபஞ்சத்தின் அன்னையானவள்

மலயாஸல

மலையாள மலைப் பகுதியில்

வாஸினீ

வசிப்பவள்

 

ப்ரகாஸம் மிகுந்து பேரொளியானவள்.மூன்று கண்களை உடையவள் அதில் மூன்றாம் கண் அரிவின் பூர்னத்துவத்தையும் ஞானத்தையும் குறிக்கும்.ஆசையினால் அலைபாய்ந்து உருட்டும் அழகிய கண்களை உடையவள்.இதுவர் ஷ்ருஷ்டியின் ஆதாரமாகும்.ஆசை ஆர்வம் மறும் வேட்கைகளே ஷ்ருஷ்டிக்கு ஆதாரமான்வைகளாகும்.அட்டிகையும் மலர் மாலைகளையும் சூடியவள். அன்னப் பறவை போன்று தவம்,வைராக்யம் ,நிஷ்களங்கத்தைப் ப்ரதிபலிப்பவள்.ப்ரபஞ்சத்தின் அன்னையானவ.மலையாள நாட்டின் பர்வதங்களில் வாசம் செய்பவள்

ஸுமுகீ, னளினீ, ஸுப்ரூஃ, ஸோபனா, ஸுரனாயிகா |
காலகண்டீ, காந்திமதீ, க்ஷோபிணீ, ஸூக்ஷ்மரூபிணீ || 96 ||

சுமுகீ

எழில்மிகுந்த இன்முகத்தவள்

நளினி

மெ ன் தாமரையை ஒத்த வனப்புடாய்ய தளிர் மேனியை உடையவள்

ஷுப்ரூ

அழகிய புருவத்தை உடையவள்

ஷோபனா

சோபை மிகுந்த அழகுடையவள்

ஸுர

தேவர்கள் ,கடவுள்களின்

நாயிகா

அனைத்து தெய்வங்களின் தலைவியானவள்

கால

கருத்த

கண்டீ

கழுத்தை உடையவள்,கருநீல கண்டனின் பத்தினியானவள்

காந்திமதீ

சோபையில் மின்னுபவள்

க்ஷோபிணீ

படைபிப்பின்துவக்கமானஆதாரசலனமானவள்

சூக்ஷ்ம

நுட்பமான நுண்ணறிவுடையவள்

ரூபிணீ

ஐம்புலங்களுக்கு அப்பார்ப் பட்டுள்ளவள்

 

எழில்மிகுந்த இன்முகத்தைக் கொண்டவள். மெ ன் தாமரையை ஒத்த வனப்புடாய்ய தளிர் மேனியை உடையவள். அழகிய புருவத்தை உடையவள். சோபை மிகுந்த அழகுடையவள்.தேவர்கள் மற்றும் பிற தெய்வங்களின் தலைவியானவள்.கருநீலக் கழுத்தை உடையவள்.நீலகண்டனான பரமேஸ்வரரின் பத்தினியானதாலும் அர்த்தநாரீஸ்வரராக சிவனின் உடலில் பாதியைக் கொண்டிருப் பதாலும் அம்பாளும் நீல கண்டமுடையவளாகின்றாள். சோபித்து அந்த சோபையில் மின்னுபவள்.படியப்பின் துவக்கமான ஆதார சலனம் என்ற அசைவின் வடிவமானவள். ஐம்புலங்களின் உணர்வுகளுக்கு அப்பார்ப் பட்டு நுட்பமான நுண்ணிய வடிவம் உடையவள்.


வஜ்ரேஸ்வரீ, வாமதேவீ, வயோ‌உவஸ்தா விவர்ஜிதா |
ஸித்தேஸ்வரீ, ஸித்தவித்யா, ஸித்தமாதா, ஸ்வினீ || 97 ||

வஜ்ரேஸ்வரீ

ஆறாம்நித்யதேவிவிஷுக்தியில்வீற்றிருப்பள்

வாமதேவி

வாமதேவரான சிவனாரின் பத்தினி

வயோஉவஸ்தா

குழந்தை,இளமை,மூப்பு என்ற் பருவங்கள்

விவர்ஜிதா

கடந்து அதன் தாக்கத்துக்கு உட்படாதவள்

சித்த

சித்தர்களின்

ஈஸ்வரீ

தலைவியாய் அவர்களால் வணங்கப்படுபவள்

சித்த

சித்த வித்தையின்

வித்யா

சாரமானவள்

சித்த

சித்திகளின்

மாதா

ஆதாரம்,மூலமானவள்,சித்தர்களின் மாதா

யஸஸ்

புகழ்,பெரும் கீர்த்தி

வினீ

உடையவள்

 

நித்ய தேவிகளில் ஆறாவது தேவியான வாஜ்ரேஸ்வரி விஷுக்தி சக்கரத்தில் வீறிருப்பவள். வாமதேவரின் பத்தினியாகி வாமதேவியாக விளங்குபவள்.வாம தேவம் பரமேஸ்வரரின் ஐந்து முகங்களில் வடக்கு நோக்கிய முகமாகும். இது வாமதேவரின் காக்கும் தொழிலின் ப்ரதிநிதியாக அம்பாள் காட்டப் படுகின்றாள்.வ்யோவஸ்தா என்ற பருவங்களான் குழந்தை பருவம்,இளமை,மூப்பு என்ற எல்லைகளை கடந்து அவைகளின் தாக்கத்துக்கு ஆட்படாதவள். சித்தர்களின் தலைவியாய் அவர்களால் வணங்கப்படுபவள்.பஞ்சதஸி மந்த்ரமான சித்த வித்தையின் சாரமானவள். சித்திகளின்ஆதாரம்,மூலமானவள்,சித்தர்களின் மாதாவானவள்.பெரும் ப்ரசித்தமும் கீர்த்தியும் உடையவள்.

 

                                                                                                                                   

இந்த பதிவுகளை voice ஆகவு தினம் தந்துவருகிறேன் அதையும் கேட்டு உணர்ந்து மகிழ்ந்து அம்பாளின் பேறருட் கருணைக்குப் பாத்திரமாகுங்கள்

இன்று இந்த  ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்.

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

வியாழன் ஜூலை,  18 , 2024

  

No comments:

Post a Comment