ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 28
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்                                                        
வியாழன், ஜூலை, 4, 2024
அனைவருக்கும் வணக்கம்
இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 60,61,62 மற்றும் 63 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்
இந்த நாலு ஸ்லோகங்களிலும் அம்பாளின்
பஞ்சப்ரம்ம ஸ்வரூபங்களை பார்க்கப் போகிறோம்.பஞ்சப்ரம்மாக்களை பற்றி முதலில் பார்ப்போம்.பஞ்சப்ரமத்தின் ஐந்து தத்துவங்களின் வெளிப்பாடாக  சத்யோஜாதம்,தத்புருஷம்,அகோரம், வாமதேவம்  மற்றும் ஈசான்யம் அமைந்துள்ளன.சத்யோஜாதத்தில் ப்ரம்மா,
வாமதேவத்தில் விஷ்ணு,அகோரத்தில் ருத்ரன், தத்புருஷத்தில் மஹேஸ்வரன் மற்றும் ஈசானத்தில்
சதாசிவன் என ஐந்து ரூப மூர்த்திகளும் தோன்றினர்.
அவர்கள் முறையே படைத்தல் ,காத்தல்,அழித்தல்,
மறைத்தல் மற்றும் அருளல் எனும் ஐந்தொழில்களை செய்கின்றனர்.அவர்களே ப்ரபஞ்சத்தின்
இயக்கத்திற்கும் ஆற்றலுக்கும் காரணமாயிருக் கின்றார்கள்.லலிதாம்பிகையே இந்த பஞ்ச
ப்ரான ஸ்வரூங்களுமாக விளங்குகிறாள் என்பதையே வரும் ஸ்லோகங்கள் விளக்குகின்றன்.   
பஞ்சப்ரேதா ஸ னாஸீனா, பஞ்சப்ரஹ்ம ஸ்வரூபிணீ |
சின்மயீ, பரமானம்தா, விக்ஞான கனரூபிணீ || 61 ||
த்யான த்யாத்று த்யேயரூபா, தர்மாதர்ம விவர்ஜிதா |
விஸ்வரூபா, ஜாகரிணீ, ஸ்வபம்தீ, தைஜஸாத்மிகா || 62 ||
ஸுப்தா, ப்ராஜ்ஞாத்மிகா, துர்யா, ஸர்வாவஸ்தா விவர்ஜிதா |
ஸ்றுஷ்டிகர்த்ரீ, ப்ரஹ்மரூபா, கோப்த்ரீ, கோவிந்தரூபிணீ || 63 ||
ஸம்ஹாரிணீ, ருத்ரரூபா, திரோதானகரீஸ்வரீ |
ஸதாஸிவானுக்ரஹதா, பஞ்சக்றுத்ய பராயணா || 64 ||
பஞ்சப்ரேதாஸ னாஸீனா, பஞ்சப்ரஹ்ம ஸ்வரூபிணீ |
சின்மயீ, பரமானம்தா, விஜ்ஞான கனரூபிணீ || 61 ||
| பஞ்ச | ஐந்து | 
| ப்ரேத | ப்ரேதங்கள்,இயக்கமற்ற சடலங்கள்
  மீது | 
| ஆஸனாஸீனா | ஆசனம் அமைத்து அமர்ந்திருப்பவள் | 
| பஞ்ச | ப்ரபஞ்சத்தின் மூலகாரணமா ஐந்து | 
| ப்ரம்ம | ப்ரம்மங்களான ப்ரம்ம,விஷ்ணு,ருத்ரன்,மஹேஸ்வரன்
  மற்றும் சதாசிவன் ஆகியோரின்  | 
| ஸ்வரூபினீ | தோற்றங்களாக விளங்குபவள் | 
| சின்மயீ | சுத்த சைதன்யமாக விள்ங்குபவள் | 
| பரமானந்தா | சச்சிதானதம் என்னும் பரமானந்தமானவள் | 
| விஞ்ஞான கன | தூய அறிவாற்றலின் | 
| ரூபிணீ | வடிவாக வியாதிருப்பவள் | 
| 
 | 
 | 
                                                                                                                                             
அம்பாள் ஐந்து ப்ராணன் அற்ற சடலங்களின் மீது அமர்ந்திருக்கின்றாள்.ப்ரபஞ்சத்தின்
ஐந்து பிம்பங்களான ப்ரம்ம,விஷ்ணு,ருத்ரன்,மஹாதேவர் மற்றும் சதாசிவன் ஆகியோரின் தோற்றங்களாக
விளங்குகிறாள் சுத்த சைதன்யம் என்னும் பேரானந்தப் பேறறிவாக விளங்குபவள்.ச ச்சிதான ந்தமெனும்
பரமான ந்தமாய் விளங்குபவள்.தூய அறிவாற்றலின் வடிவாய் வியாதித்திருப்பவள் 
த்யானத்யாத்று த்யேயரூபா, தர்மாதர்ம விவர்ஜிதா |
விஸ்வரூபா, ஜாகரிணீ, ஸ்வபம்தீ, தைஜஸாத்மிகா || 62 ||
| த்யான | தியானம் | 
| த்யாத்ரு | த்யானிப்பரான சிந்தனையாளர் | 
| த்யேய | த்யானிக்கப் படும் பொருள் | 
| ரூபா | ஊடுருவி இருப்பவள் | 
| தர்ம | தர்ம செயல்கள் | 
| அதர்ம | அதர்ம செயல்கள் | 
| விவ்ர்ஜிதா | பாதிகப்படாது அப்பார்ப் பட்டவள் | 
| விஷ்வரூபா | பேரண்டமே வடிவமானவள் | 
| ஜாகரிணீ | விழிப்பு நிலையில் தன்னை
  காட்டிக் கொள்பவள் | 
| ஸ்வபந்தீ | சொப்பனத்திலும் வியாபித்திருப்பவள் | 
| தைஜசாத்மிகா | தைஜச ஆத்மாவாக கனவு நிலையிலும்
  இருப்பவள் | 
அம்பாள்
தியானமாகவும்,தியானிப்பவராகவும் தியானிக்கப் படுகின்ற பொருளாகவும் அவளே விளங்குகிறாள்.அனைத்திலும்
அம்பாளே ஊடுறுவி இருக்கின்றாள்.தர்ம மற்றும் அதர்ம செயல்களால் பாதிக்கப் படாது அவைகளுக்க  அப்பார்ப் பட்டவளாக விளங்குகிறாள்.இந்த பேரண்டமே
உருவான விஷ்வரூபி யாக இருக்கின்றாள்
உணர்வு நிலைகள் நான்காகும். அவை விழிப்பு,கனவு,உறக்கம் மற்றும் துரியம்.ஜாகிரிணீ
என்று என்று விழிப்பு நிலையில் தன்னைக் காட்டிக் கொள்ளுகிறாள்.
தைஜசாத்மிகாவாக இரண்டாவதான கன்வு நிலையில்தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றாள்
ஸுப்தா, ப்ராஜ்ஞாத்மிகா, துர்யா, ஸர்வாவஸ்தா விவர்ஜிதா |
ஸ்றுஷ்டிகர்த்ரீ, ப்ரஹ்மரூபா, கோப்த்ரீ, கோவிந்தரூபிணீ || 63 ||    
| சூப்தா | ஆழ்ந்த உறக்கத் தன்மையிலிருப்பவள் | 
| ப்ராக்ஞாத்மிகா | ஆழ் உறக்க நிலையில் இயங்கும் காரண சரீரத்தின்
  ஞானமாக மிளிர்பவள் | 
| துர்ய | னிகரற்ற துரிய நிலையில் ஊடுருவியிருப்பவள் | 
| சர்வாவஸ்த | சகலமான உணர்வு நிலைகள் | 
| விவர்ஜிதா | விலகி இருந்து அப்பார்ப் பட்டவள் | 
| ஷ்ருஷ்டிகர்த்ரீ | ப்ரபஞ்சத்தை ஸ்ருஷ்டித்து உண்டாக்குபவள் | 
| ப்ரம்ம ரூபா | ஷ்ருஷ்டி கர்த்தா ப்ரம்மனின் வடிவானவள் | 
| கோப்த்ரீ | அனைத்தையும் ரக்ஷிப்பவள் | 
| கோவிந்த | காக்கும் கடவுள் விஷ்ணுவின் | 
| ரூபிணீ | வடிவமானவள் | 
                                                                                                                       
மூன்றாவதான ஆழ்ந்த உறக்க நிலையில் தன்னை ப்ராக்ஞாத்மிகாவென்ற காரண சரீரத்தின்
ஞானமாக மிளிர்கின்றாள்.நாலாவது நிலையான நிகரற்ற துரிய நிலையில் ஊடுறுவி இருக்கின்றாள்.இந்த
நாலு உணர்வு நிலைகளிலும் அம்பாள் ஊடுறுவி இருந்தாலும் அத்தனை உணர்வு நிலைகளுக்கும்
அப்பார்ப் பட்டு அவைகளிடமிருந்து விலகியே நிற்பவள்
ப்ரபஞ்சத்தை ஷ்ருஷ்டித்து உண்டாக்குபவள்.ஷ்ருஷ்டி
கர்த்தாவன ப்ரம்மனின் வடிவமானவள்.காக்கும் கடவுளான மஹாவிஷ்ணுவின் வடிவாகி அனைத்தையும்
ரக்ஷிப்பவள்
 ஸம்ஹாரிணீ, ருத்ரரூபா, திரோதானகரீஸ்வரீ |
ஸதாஸிவானுக்ரஹதா, பஞ்சக்றுத்ய பராயணா || 64 ||
| ஸம்ஹாரிணீ | ஸம்ஹாரம் செய்து அழிப்பவள் | 
| ருத்ர | ஸம்ஹார மூர்த்தியான் ருத்ரரின் | 
| ரூபா | ரூபமாக விளங்குபவள் | 
| திரோதானகரீ   | அனைத்துலகங்களையும் ப்ரளய காலத்தில் ஒடுக்கி
  மறையச் செய்பவள் | 
| ஈஸ்வ்ரீ | ப்ரபஞ்சத்தை ஆட்சிசெய்பவள் | 
| சதாசிவா | சர்வகாலமும் கருனை மழை பொழிபவள் | 
| அனுக்ரஹதா | ஸ்ருஷ்டிக்கெல்லாம் அருள் பொழிபவள் | 
| பஞ்ச க்ருத்ய | ஐந்துவிதமான் தொழில்கள் | 
| பராயணா | முழுவதையும் | 
| பராயணா | தன்னை ஈடுபடுத்திக் கொள்பவள் | 
| 
 | 
அம்பளே அனைத்தையும் அழிக்கும் சம்ஹாரிணியாகவும் விளங்குகிறாள்.அவளே
சம்ஹார மூர்த்தியான ருத்ரராகவும் விளங்குகிறாள்.அதன் காரணமாக ப்ரளய காலத்தில் அனைத்து
உலகங்களையும் ஒடுக்கி மறையச் செய்கிறாள். 
ஈஸ்வரியாக இந்த ப்ரபஞ்சத்தை ஆட்சி செய்கிறாள்.ஐந்தொழில்களின் மூலப்பொருளாகி
அவைகளை இயக்குபவள். அவ் வைந்து தொழில்களில் தன்னை முழுதுமாக ஈடுபடுத்திக் கொண்டவள்
சதா காலமும் கருணை மழை பொழிபவள்.ஷ்ருஷ்டிக் கெல்லாம் அனுக்ரஹம் என்னும் அருள் மழை
பொழிபவள்.
இந்த விளக்கங்களை voice ஆகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு அம்பாளின்
பேர ருளுக்கு பாத்திரமாகுங்கள்
இன்று இந்த  ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்
பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:                                                               
சிவதாஸன்
ஜகன்நாதன்                                                          
வியாழன், ஜூலை, 4, 2024
 
No comments:
Post a Comment