ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 27
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
புதன், ஜூலை, 3, 2024
அனைவருக்கும் வணக்கம்
இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 57,58,59 மற்றும் 60 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்
இந்த நான்கு ஸ்லோகங்களும் அம்பாளின் சகுண உபாஸனையை சொல்லும்
ஸ்லோகங்களாகும். இந்த ஸ்லோகங்களுடன் ஸ்ரீ லலிதாம்பிகையின் சகுண உபாசனை நிறைவு பெறுகின்றது.அடுத்து
வரும் ஸ்லோகங்களில் அம்பாளின் பஞ்சப்ரம்ம ஸ்வரூபங்களை நாளை முதல் பார்க்கப் போகிறோம்
இன்றைய நாலு ஸ்லோகங்களும் அம்பாளின் ஸ்தூல
ஸ்வரூபங்களையே விவரிக்கின்றன
மஹேஸ்வர மஹாகல்ப மஹாதாண்டவ ஸாக்ஷிணீ |
மஹாகாமேஸ மஹிஷீ, மஹாத்ரிபுர ஸுந்தரீ || 57 ||
சதுஃஷஷ்ட் யுபசாராட்யா, சதுஷ்ஷஷ்டி களாமயீ |
மஹா சதுஷ்ஷஷ்டி கோடி
யோகினீ கணஸேவிதா || 58 ||
மனுவித்யா, சந்த்ரவித்யா, சந்த்ரமண்டல மத்யகா
|
சாருரூபா, சாருஹாஸா, சாருசந்த்ர
களாதரா || 59 ||
சராசர ஜகன்னாதா, சக்ரராஜ னிகேதனா |
பார்வதீ, பத்மனயனா, பத்மராக ஸமப்ரபா || 60 ||
மஹேஸ்வர மஹாகல்ப மஹாதாண்டவ
ஸாக்ஷிணீ |
மஹாகாமேஸ மஹிஷீ, மஹாத்ரிபுர
ஸுந்தரீ || 57 ||
மஹேஸ்வர |
சர்வேஸ்வரரான சிவனின் |
மஹா கல்ப |
மஹா கல்பம் என்னும் ஊழிக்கால முடிவில் |
மஹா தாண்டவ |
பரமன் நடத்தும் ஊழித்தாண்டவத்தின் |
சாக்ஷிணீ |
சாக்ஷியாய் இருப்பவள் |
மஹா |
பெருமை மிகுந்த |
காமேஷ |
காமேஸ்வரரான சிவபெருமானின் |
மஹிஷீ |
பட்ட மஹிஷியான மஹாராணியானவள் |
திரிபுர |
மூன்று லோகங்களிலும் |
மஹா |
மிகப் பெரிய |
சுந்தரி |
பேரழகியாக விளங்குபவள் |
|
|
|
|
சர்வேஸ்வரர் மஹா கல்பம் என்ற ஊழிக்காலத்தின்
முடிவில் தனியாக ஊழித்தாண்டவம் ஆடுவார்.அப்பொழுது அனைத்தும் அழிந்துபோய் பரமனும்
அம்பாள் மட்டுமே தனித்திருப்பார்கள்.அப்பொழுது பரமனின் ஊழித்தாண்டவத்திற்கு அம்பாளே
சாக்ஷி யாக இருக்கக் கூடியவள். பெருமை வாய்ந்த
காமேஸ்வரரான பரமனின் பட்ட மகிஷியானவள்.மூன்று உலகங்களிலும் பேரழகியாக விளங்குபவள்
சதுஃஷஷ்ட் யுபசாராட்யா, சதுஷ்ஷஷ்டி களாமயீ |
மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீ
கணஸேவிதா ||
58 ||
சதுஃ |
சதுர் அல்லது நான்கு |
ஷஷ்டி |
அறுபது |
சதுஃஷ்டிஷ |
அறுபத்து நாலு |
உபசார |
உபசரிப்புகளால் |
ஆராத்யா |
ஆராதித்து வணங்கப் படுபவள் |
சது:ஷஷ்டி |
அறுபத்து நாலு |
கலாமயீ |
கலைகளை உள்ளடக்கி விளங்குபவள் |
மஹா |
மிகப் பெரிய |
சது:ஷஷ்டிகோடி |
அறுபத்து நான்கு கோடி |
யோகினீ கண |
உப தெய்வங்களின் குழுவால் |
சேவிதா |
சேவித்து வணங்கப் படுபவள் |
|
|
அம்பாள் அறுபத்து நான்கு விதமான உபசரிப்புகளாலும்
பக்தர்களல் வணங்கப்படுபவள்.ஆய கலைகள் அறுபத்து னான்கினையும் தன் உள்லே உள்லடக்கியவள்.பெருமை
வாய்ந்த அம்பாளின் அறுபத்து நான்கு கோடி உப தேவைதகளாலும் சேவிக்கப் பட்டு வணங்கப்படுபவள்
மனுவித்யா, சந்த்ரவித்யா, சந்த்ரமண்டல மத்யகா |
சாருரூபா, சாருஹாஸா, சாருசந்த்ர களாதரா || 59 ||
மனு |
மனுவினால் |
வித்யா |
விவரிக்கப்
பட்ட ஸ்ரீ வித்யா உபாசனையில் |
சந்த்ர |
சந்திரனால்
விவரிக்கப்பட்ட |
வித்யா |
உபாசனையில்
ஸ்ரீ சக்ரமாகத் திகழ்பவள் |
சந்த்ர மண்டல |
சந்த்ரமண்ட்லக்
கோள் சுற்றின் |
மத்யஸ்தா |
நடுவில் வீறிருப்பவள் |
சாரு |
மனதிர்க்
குஹந்த |
ரூபா |
அழகின் வடிவானவள் |
சாரு ஹாசா |
மனதிர்க்குகந்த
புன்னகை கொண்டவள் |
சாரு சந்த்ர |
அழகிய சந்திரனின் |
கலாதரா |
பிறையை அணிந்தவள் |
மனுவினால் விவ்ரிக்கப் பட்ட ஸ்ரீ உபாசனையிலும்,சந்திரனால்
விவரிக்கப் பட்ட உபாசனையிலும் ஸ்ரீ சக்ரமாகத்திக்ழ்பவள்.சந்திர
மணடல்க் கோள் சுழற்சியின் மத்த்யில் நடு நாயகமாக வீற்றிரிப்பவள்.மனதிற்குஹந்த பேரழகின்
வடிவானவள்.மனதை ஈர்க்கும் புன்னகை உடையவள் அழகிய ஸ்ந்திரப் பிறையை அணிந்தவள்
சராசர ஜகன்னாதா, சக்ரராஜ னிகேதனா |
பார்வதீ, பத்மனயனா, பத்மராக ஸமப்ரபா || 60 ||
சராசர |
அண்ட சராசரங்களையும் |
ஜகன்னாதா |
சகல சக்திகளையும் அடக்கியாளுபவள் |
சக்ரராஜ |
சக்ரங்களின் மகுடமான ஸ்ரீ சக்ரத்தில் |
நிகேதனா |
வசிப்பிடமாகக்கொண்டு நிலைத்திருப்பவள் |
பார்வதீ |
பர்வதராஜன் மகள்,மலை மகள் |
பத்ம |
தாமரைஇதழ்களை ஒத்த நீண்ட |
நயனா |
கண்களை உடையவள் |
பத்மராக |
பத்மராகமெனும் சிவந்த நவரெத்தினகல் |
சமப்ரபா |
இணையாக ஜ்வலிப்பவள் |
|
சிவந்த தாமரை போன்று ஜ்வலிப்பவள் |
|
|
அம்பாள் அண்ட சராஸரங்களையும் சகல சக்திகளையும்
அடக்கி ஆள்பவள். சக்ரங்களின் ஸ்ரீ சக்ரத்தில் வசிப்பிடமாக நிலை கொண்டிருப்பவள்.மலயரசனின்
மகளாக பார்வதியாக நிலைகொண்டிருப்பவள்.தாமரை இதழ்களையொத்த நீண்ட விழிகளை உடையவள்.பத்மராகம்
என்னும் சிவந்த நவரதனக் கல்லைப் போன்றும் செந்தாமரையைப் போன்றும் ஜ்வலிப்பவள்
இந்த விளக்கங்களை voice ஆகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு அம்பாளின்
பேர ருளுக்கு பாத்திரமாகுங்கள்
இன்று இந்த ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்
பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன்
ஜகன்நாதன்
புதன், ஜூலை, 3, 2024
No comments:
Post a Comment