ஶ்ரீலலிதா
சஹஸ்ரநாமம் 52
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
திங்கள்கிழமை ஜூலை, 29, , 2024
அனைவருக்கும் வணக்கம்
நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில் தற்போது
விபூதி விஸ்தாரம் என்ற பகுதியைப் பார்த்து
வருகிறோம்..
இதுவரை 121 ஸ்லோகங்களையும் அவைகளில் உள்ள 606 நாமாவளிகளையும்
பார்த்து விட்டோம்.
இன்று நமது லலிதா சஹஸ்ரநாம வ்ர்ணனைகளின் தொடரில் மூன்று ஸ்லோகங்களைப்
பார்க்கப் போகின்றோம் அவை ,122, 123 மற்றும் 124 ஆகும். அம்பாளி நாமாவளிகளில் இதுவரை
606 நாமாவளிகளின் வ்ர்ணனைகளைப் பார்த்துவிட்டோம் இன்றைய ஸ்லோகங்களில் 607 முதல் 621
வரையிலான 15 நாமாவளிக்ளைப் பார்ப்போம்.
தேவேஸி, தம்டனீதிஸ்தா, தஹராகாஸ ரூபிணீ |
ப்ரதிபன்முக்ய ராகாந்த திதிமண்டல பூஜிதா || 122 ||
தேவ |
தேவர்களின் |
ஈஷி |
முதன்மையான, தலமையான அரசி |
நீதி |
நன் நடத்தைட,ஒழுக்கம் தவறுபவர்களுக்கு |
தண்ட |
தண்டனை |
ஸ்தா |
ஸ்தாபித்து வழங்குபவள் |
தஹராஸ |
இருதயத்தில் இருக்கும் நுண்ணிய
ஆஹாசம் |
ரூபிணீ |
வடிவமாக இருப்பவள் |
ப்ரதிபத் |
ப்ரதமை என்னும் வளர்பிறையின்
முதல் நாள் |
முக்ய |
முதலில், ஆரம்பத்தில் |
ராகாந்த |
பௌர்னமி, முழுநிலவு வரை |
திதி |
பதினைந்து நாட்களைக் கொண்ட
திதி |
மண்டல |
அந்த மண்டலமான நாட்களில் |
பூஜிதா |
பூஜித்து வணங்கப் படுபவள் |
இந்த ஸ்லோகத்தில் நாலு நாமாவள் உள்ளன அவைகளைப் பார்ப்போம்.அம்பாள் தேவர்களின்
தலைவியாகவும் முதன்மையான அரஸியாகவும் விளங்குகிறாள்.ஒழுக்கம் நந்நடத்தையில் தவறு பவர்களுக்கு
தண்டனை வழங்கி ஒழுக்கத்தை ஸ்தாபிப்பவளாக இருக்கின்றாள். இதயத்தில் உள்ள நுண்ணிய சூக்ஷும
ஆஹாய வடிவமாக பரந்து இருக்கின்றாள்.ப்ரதமை முதல் திதி மண்டலத்தின் இறுதி நாளான பௌர்ணமி
வரையிலான பதினைந்து நாட்களும் பூஜித்து வணங்கப்படுபவள்.
களாத்மிகா, களானாதா, காவ்யாலாப வினோதினீ |
ஸசாமர ரமாவாணீ ஸவ்யதக்ஷிண ஸேவிதா || 123 ||
கலா |
கலைகள், கலைகளின் வடிவங்கள் |
ஆத்மிகா |
உயிராக, ஆன்மாவாக விளங்குபவள் |
கலா |
கலைகளின் |
நாதா |
வடிவமானவள் |
காவ்ய |
காவியங்கள்,காப்பியங்கள் |
ஆலாப |
பேசுதல் ,உரையாடுதல் |
வினோதினி |
கேட்டு மகிழ்பவள் |
ஸசாமர |
இறைவனுக்கு வீசப்படும் சாமரம் |
ரமா |
லக்ஷ்மி ஸ்ரீதேவி அலைமகள் |
வாணீ |
ஸரஸ்வதி,கலைமகள் |
சவ்ய |
இடம் வலம் |
தக்ஷிண |
வலம் தென்புறம் |
ஸேவிதா |
சாமரம் வீசித் துதிக்கப்
படுபவள் |
இந்த ஸ்லோகத்திலும் நாலு நாமாவளி களே விவரிக்கப் படுகின்றன.கலைகளாகவும்
கலைகளின் வடிவங்களாகவும் அவைகளின் ஆத்மாகவும் உயிராகவும் அம்பாள் விளங்குகிறாள்.காவியங்கள்
மற்றும் காப்பியங்கள் பற்றிப் பேசுவதிலும் பேசப்படுவதைக் கேட்பதிலும் மிகுந்த மகிழ்ச்சி
கொண்டவள்.அலைமகளான லக்ஷ்மியாலும்,கலைமகளான சரஸ்வதியாலும் வலமும் இடமும் இருந்து சாரம்
வீஸி துதிக்கப்பெற்றவள்
ஆதிஸக்தி, ரமேயா,உஉத்மா, பரமா, பாவனாக்றுதிஃ |
அனேககோடி ப்ரஹ்மாம்ட ஜனனீ, திவ்யவிக்ரஹா || 124 ||
ஆதிஷக்திர் |
ப்ரபஞ்சத்தின்
மூலாதார சக்தியானவள் |
அமேயா |
அளக்க
முடியாத அளவற்றவள் |
ஆ/உத்மா |
சகல ஜீவராஸிகளின்
ஜீவனாக உறைபவள் |
பரமா |
மிக உயர்ந்த
,ஒப்பற்றவள் |
பாவனா |
மாசு
மருவற்றவளாக |
க்ருதி |
படைப்பின்
பொருள்க்ள் அனைத்தையும் புனிதப் படுத்தும் த்ன்மை கொண்டவள் |
அனேககோடி |
பலப்
பல எண்ணற்ற கோடிக்கனக்கான |
ப்ரம்மாண்ட |
ப்ரம்மாண்டமான்
அண்டமான ப்ரபஞ்சம் |
ஜனனீ |
தாயாய்
இருந்து தோற்றுவித்தவள் ப்ரபஞ்சமாதா |
திவ்ய |
தெய்வீகமான |
விக்ரஹா |
உடல்
அமைப்பு அழகுடன் கொண்டவள் |
இந்த
ஸ்லோகத்தில் அம்பாளின் ஏழு நாமாவளிகள் விவரிக்கப் படுகின்றன அம்பாளே இந்த ப்ரபஞ்சத்தின்
மூலமன ஆதிசக்தி யானவள்.அளக்கமுடியாத அளவற்றவள்.எல்லாவற்றிலும் எல்லா நிலைகளிலும் பெரியதானவள்.அன்னையே
சகல ஜீவராஸிகளின் ஜீவனாக உறைபவள்.பரமமாக இருந்து ஒப்பற்ற தன்மை யுடையவள்.மாசு மருவற்றவளாகவும்
புனிதமானவளாவும் இருந்து படைப்பின் பொருள்கள் அனைத்தையும் புனிதப்படுத்துபவள்.பலப்பல
எண்ணற்ற கோடிகளான அண்டமான ப்ரபஞ்சம் முழுவதையும் தாயாக இருந்து தோறுவித்தவள். தெய்வீகமான
சோபையும் உடல் அழகும் கொண்டவள்.
இத்துடன் இந்த இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்.இவைகளை ஒலி
வடிவமாகவும் தந்துள்ளேன் கேட்டும் படித்தும் மகிழ்ந்து அம்பாளின் பேருட் கருணைக்கும்
சர்வேஸ்வரரின் கடாக்ஷத்துக்கும் பாத்திரமாகுங்கள்.
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
திங்கள்கிழமை ஜூலை, 29, , 2024
No comments:
Post a Comment