ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 38
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
திங்கள்,, ஜூலை 15, 2024
அனைவருக்கும் வணக்கம்
நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில்
பீடங்களும் அங்க தேவதைகளும் பற்றிய பதிவுகளைப் பார்த்து வருகிறோம். இன்று 84,85 மற்ரு
86 வது ஸ்லோகங்களைப்பார்போம் அம்பாள் எப்படி அங்கங்களின் தலைவியாகவும் உணர்வுகளின்
உருவமாகவும் விளங்குகிறாள் என்பதையே இந்த ஸ்லோகங்கள் விளக்குகின்றன
ஸத்யஃ ப்ரஸாதினீ, விஸ்வஸாக்ஷிணீ, ஸாக்ஷிவர்ஜிதா |
ஷடங்கதேவதா யுக்தா, ஷாட்குண்ய பரிபூரிதா || 84 ||
சாத்ய |
கணப்பொழுதில்,விரைவாக |
ப்ரஸாதினி |
ப்ரசாதமாக
வரமருள்பவள் |
விஷ்வ |
உலகம்,ப்ரபஞ்சம் |
சாக்ஷிணீ |
சாக்ஷியாக
விளங்குபவள் |
சாக்ஷி |
சாக்ஷிக்கு |
வர்ஜிதா |
இல்லாதவள்,
அப்பார்ப் பட்டவள் |
ஷட் |
ஆறு |
அங்க |
அங்கங்களின் |
தேவதா |
தேவதைகளால் |
யுக்தா |
இணைக்
கப்பட்டவள், |
ஷாட்குண்ய |
ஆறு
உன்னதமான் குணங்களால் |
பரிபூரிதா |
நிரப்பப்
பட்டவள் |
அம்பாள்
கணப்பொழுதில் த்ருப்தி யடைந்து வரமருள்பவள்.அம்பாளே தனக்கு சாக்ஷியாக விளங்குகிறாள்.சாக்ஷி
இல்லாது சாக்ஷிக்கு அப்பார்ப் படவள்.அம்பாளே மூல சாக்ஷி யாவாள்.ஆறு அங்க தேவதைகளான்
இதயம்,கேஸம்,சிரஸு,கண்கள், கவஸம்,மற்றும் ஆயுதம் எனும் இவையே. இந்த ஆறு அங்கங்களை ஆள்பவர்கள்.அம்பாளே
இந்த ஆறு தேவதைகளின் ஒருங்கிணைந்த வடிவமாக்க் காக்ஷி அளிக்கின்றாள்.உன்னதமான ஆறு குணங்களான
வளம்,செல்வம்,வளமை,புகழ்,மெய்ஞானம் மற்றும் துறவு ஆகியவற்றல் நிரப்பப் பட்டவள்
னித்யக்லின்னா, னிருபமா, னிர்வாண ஸுகதாயினீ |
னித்யா, ஷோடஸிகாரூபா, ஸ்ரீகண்டார்த ஸரீரிணீ
|| 85 ||
நித்ய |
நிரந்தரம்,
அன்றாடம் |
க்லின்னா |
கருணை,
காருண்யம் |
நிரூபமா |
ஒப்பீட்டுக்கு
அப்பாற்ப் பட்டு ஈடு இணையற்றவள் |
நிர்வாண |
பேரின்பம்,வீடு
பேறு |
சுக |
நிறைவான
மகிழ்ச்சி |
தாயினீ |
அருள்பவள் |
நித்யா |
என்றும் |
ஷோடஸிகா |
பதினாறு
வயதின் இளமையான |
ரூபா |
வடிவம்
கொண்டவள் |
ஸ்ரீகண்ட |
சிவபெருமானின்
கண்டம்,கழுத்து,அங்கம் |
அர்த்த |
பாதி
|
ஷரீரினீ |
உடலைக்
கொண்டவள் |
அம்பாள்
தன்னை நாடிவருபவர்களுக்கு நித்ய கருணைக் கடளாக காக்ஷியளிப்பவள்.தனக்கு உவமையாக யாரும்
இல்லாமல் ஒப்பீட்டுக்கு அப்பார்ப் பட்டு ஈடு இணையற்றவள்.பேரின்பமான வீடு பேறு மகிழ்ச்சி
ஆகியன அருள்பவள்.என்றும் மாறா இளமையுடன் பதினாறு வயது குமரியாக வடிவம் கொண்டவள்.பரமேஸ்வரரின்
உடலில் பாதியை தனது அங்கமாகக் கொண்டு அர்தநாரீயாக விளங்குபவள்க.
ப்ரபாவதீ, ப்ரபாரூபா, ப்ரஸித்தா, பரமேஸ்வரீ |
மூலப்ரக்றுதி ரவ்யக்தா, வ்யக்தா உவ்யக்த ஸ்வரூபிணீ || 86 ||
ப்ரபாவதீ |
பேராற்றலுடன் ப்ரஹாஸிப்பவள், ப்ரபா என்னும் அஷ்டமா சித்திகளால்
சூழப்பட்டவள் |
ப்ரபா |
ஒளிவெள்ளமாய் |
ரூபா |
ஜ்வலிப்பவள் |
ப்ரசித்தா |
ப்ரசித்தமான்வள், புகழ் பெற்றவள் |
பரம |
உயர்ந்த,முழுதுமான |
ஈஸ்வரீ |
பேரரசி,எஜமானி |
மூல |
ஆதாரம்,ஆணிவேர் |
ப்ரக்ருதி |
மூலப் பொருள்,ஆதினிலையிலானவள் |
வ்யக்தா |
தெளிவான,புரிதலுக்கு உட்பட்ட |
அவ்யக்தா |
புரிதலுக்கு உட்படாத |
ஸ்வரூபினீ |
தன்மையை உடையவள் |
அன்னை
பேராற்றலுடன் ப்ரகாசிப்பவள்.ப்ரபா என்னும் அஷ்டமா சித்திகளல் சூழப் பட்டவள்.ஒளிவெள்ளமாக
ஜ்வலிப்பவள்.உயர்ந்த முழுமையான ஒப்புயர்வற்ற பேரரசி.ப்ரபஞ்சத்தின் ஆணிவேர் போன்று
அதன் மூலப் பொருளானவள்.தெளிவான புரிதலுக்கு உட்பட்டும் ,அப்பார்ப் பட்டும் எட்டாத
நிலையிலிருந்து தன்னை தானே அனைத்துமாக வெளிப் படுத்திக் கொள்ளுபவள்
இந்த பதிவுகளை voice ஆகவு தினம் தந்துவருகிறேன் அதையும் கேட்டு
உணர்ந்து மகிழ்ந்து அம்பாளின் பேறருட் கருணைக்குப் பாத்திரமாகுங்கள்
இன்று இந்த ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்
பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன்
ஜகன்நாதன்
திங்கள்,, ஜூலை 15, 2024
No comments:
Post a Comment