Friday, July 12, 2024

 

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 35

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்                                                                                

வெள்ளி, ஜூலை  12, 2024

அனைவருக்கும் வணக்கம்

இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 79 மற்றும் 80 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்.

இன்றும் நாம் அம்பாளின் க்ஷேத்ர ஸ்வரூப வர்ணனைகளைப் பார்க்கப் போகின்றோம். இன்று 79 மற்றும் 80 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்.இவைகளிலும் அம்பாளின் க்ஷேத்ர,க்ஷேத்ரக்ஞ்ய குணங்களே விவரிக்கப் படுகின்றன.அதோடு இந்த உபாஸனை நிறைவு பெறுகின்றது .நாளை முதல் பீடங்களும் அங்க தேவைகளுக்கான நாம ரூபங்களை பார்க்கப் போகின்றோம்

தாபத்ரயாக்னி ஸம்தப்த ஸமாஹ்லாதன சந்த்ரிகா |
தருணீ, தாபஸாராத்யா, தனுமத்யா, தமோ‌உபஹா || 79 ||

தாப

வலி,மனம் அல்லது உடல் உபாதை

த்ரயாக்னி

மூன்றுவித அக்னிகள்

சந்தப்த

அவதியுற்ற, துயருற்ற

ஸம

சமமான, இணையான

ஆஹ்லாதன

திருப்தியுறச்செய்தல்,மகிழ்வூட்டல்

சந்த்ரிகா

நிலனின் ஒளி

தருணீ

ஸாஸ்வதமான இளமையை உடையவள்

தாபஸ்

தபஸ்விகளால்

ஆராத்யா

துதித்து வணங்கப்படுபவள்

தனு

மெல்லிய

மத்யா

மத்ய பகுதியான இடை உடையவள்

தமோ

தாமஸ குணம்

தமோஉபஹா

தாமஸமென்னும் இருளை நீக்குபவள்

 

மூன்று வித அக்னிகளால் மனம் மற்றும் உடலால் வலியும் உபாதையும் உடையவர்களின் துன்பங்களை நிலவின் குளிர்ச்சியைப் போல தீர்த்து ஆறுதல் அளிப்பவள்.சாஸ்வதமான இளமை உடையவள்.பெரும் தபஸிகளால் ஆராதித்து வணங்கப் படுபவள். மெல்லிய இடையை உடைய மெல்லிடையாள்.முக்குணங்களில் தாழ்மையானதான் தாமஸ் குணம் என்ற இருளை நீக்குபவள்


சிதி, ஸ்தத்பத லக்ஷ்யார்தா, சிதேக ரஸரூபிணீ |
ஸ்வாத்மானம் தலவீபூத ப்ரஹ்மாத்யானம்த ஸந்ததிஃ || 80 ||

சிதி

சிந்தனை,அறிவு,ஆத்மா வடிவானவள்

த்த

ப்ரம்மம் ,மெய்ப்பொருள்

பத

சொல்,ப்ரயோகம்,கருத்து

லக்ஷ்யார்த்த

அவைகளின் மறைப் பொருளாகும்

சித்

அறிவு ஆன்மா,எண்ணம்

ஏகரஸ

ஈடுபாடு,ஒருமுக சிந்தனை

சிதேக ரஸ

அறிவின் ஒரு முனைப்பாடு

ரூபிணீ

அவற்றின் உருவம் கொண்டவள்

ஸ்வாத்மா

சுயமாகிய

ஆனந்த

ஆன்மப் பேரின்பனிலை

ஆல

மிகுதியாக

விபூத

சிறந்து விளங்குதல்

ப்ரம்மாத்ய

பிரம்மாவில் தொடங்கி

ஆனந்த

மகிழ்ச்சி

சந்ததி

படைக்கப் பட்ட சந்ததிகள், ஜீவன்கள்

 

அம்பாளே சிந்தனை அறிவு மற்றும் ஆன்ம வடிவானவள்.அவளே மெய்ப் பொருளின் வடிவமாகவும் விளங்குகிறாள்.சுத்த சைதன்யம் என்னும் மாசற்ற அறிவின் வடிவமாக அம்பாளேத் திகழ்கின்றாள்.ஆன்மப் பேரின்ப நிலையில் சுயமாக தானே விளங்குபவள்.ப்ரம்மா முதல் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளின் ஆந்த நிலையைக் காட்டிலுன் உயர்ந்த பரமான ந்த நிலையில் வீற்றிருப்பவள்.

இந்த விளக்கங்களை voice ஆகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு அம்பாளின் பேர ருளுக்கு பாத்திரமாகுங்கள்

இன்று இந்த  ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்.

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

வெள்ளி, ஜூலை  12, 2024

 

No comments:

Post a Comment