Monday, July 1, 2024

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 25

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்                                                        

திங்கள், ஜூலை, 1,  2024

அனைவருக்கும் வணக்கம்

இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் ,51,52 மற்றும் 53 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்

இந்த மூன்று ஸ்லோகங்களும் பின் வரும் சில ஸ்லோகங்களும் அம்பாளின் சகுண உபாஸனையை சொல்லும் ஸ்லோகங்களாகும்.இவைகளும் அம்பாளின் ஸ்தூல ஸ்வரூபங்களையே விவரிக்கின்றன

51) துஷ்டதூரா, துராசாரமனீ, தோஷவர்ஜிதா |
ஸர்வஜ்ஞா, ஸாந்த்ரகருணா, ஸமானாதிக வர்ஜிதா || 51 ||

துஷ்ட

துஷ்டர்கள், கொடியவர்கள்

தூரா

தூரத்தில் விலகியிருப்பவள்

துராசார

கொடும் பாவச் செயல்கள்

ஷமனீ

வேரறுப்பவள்

தோஷ

தோஷங்கள்,பிழைகள்

வர்ஜிதா

இல்லாதவள்

சர்வஞ்க்யா

ஞானியானவள்

சாந்த்ர

அதிகமான

கருணா

கருணையும் இரக்கமும் உள்ளவள்

சமானிதிக

சரினிகர் சமானம்

வர்ஜிதா

இல்லாதவள்

 

 


அம்பாள் துஷ்டர்கள் மற்றும் கொடியவர்களிடமிருந்து விலகி இருப்பவள்.அவர்களின் ப்ரார்த்தனைக்கு எட்டாதவள்.கொடுமையான பாவச் செயல்களை வேரறுப் பவள்.தன்மீது எந்தவிதமான தோஷங்களோ பிழையோ இல்லாதவள்.பெரும் ஞானியானவள்.அதிகமான கருணைகொண்டு தனக்கு யாரும் நேரோ சரிநிகர் சமானமோ இல்லாதவள்.


52) ஸர்வக்திமயீ, ஸர்வமங்களா, ஸத்கதிப்ரதா |
ஸர்வேஸ்வரீ, ஸர்வமயீ, ஸர்வமந்த்ர ஸ்வரூபிணீ || 52 ||

சர்வ

சகல விதமான

சக்திமயீ

வலாமை பொருந்தியவள்

சர்வ

அனைத்து

மங்களா

அனுகூலங்களின் சாரமானவள்

சத்கதி

உயர்ந்த கதி

ப்ரதா

வழங்குபள்

ஸர்வ

அனைத்தையும்

ஈஸ்வரீ

ஆட்சிசெய்பவள்

சர்வ மயீ

அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவள்

சர்வ

அனைத்து

மந்த்ர

மந்திரங்கள் மற்றும் மந்த்ர சாதனங்கள்

ஸ்வரூபிபீணீ

உருவமானவள்

 லிதாம்பாள் சர்வ வல்லமை பொருந்தியவளாக விளங்குகிறாள்.மங்களமான அனைத்து அனுகூலங்களின் சாரமாக விளங்குகிறாள்.ஜீவங்களுக்கு உயர்ந்த நற்கதி அளிப்பவள்.சர்வ அண்டங்களையும் ஆட்சி செய்பவள்.ப்ரபஞ்சத்தின் அனைத்துப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவள்.அனைத்து மந்திரங்கள் மற்றும் மந்த்ர சாதனங்களின் உருவமானவள்

53) ஸர்வயந்த்ராத்மிகா, ஸர்வதந்த்ரரூபா, மனோன்மனீ |
மாஹேஸ்வரீ, மஹாதேவீ, மஹாலக்ஷ்மீ, ர்ம்றுடப்ரியா || 53 ||

சர்வ யந்த்ர

யந்த்ர சாதனங்களான தகடு போன்றவை

ஆத்மிகா

அவைகளின் சக்தியாயிருப்பவள்

சர்வ

அனைத்து

தந்த்ர

வழிபாட்டு முறையின் நுணுக்கம்

ரூபா

வடிவமாக விளங்குபவள்

மனோன்மனீ

உயர்ந்த மனோ நிலையின் மகுடமானவள்

மாஹேஷ்வரீ

மஹேஸ்வரரின் பத்தினியானவள்

மஹாதேவி

மஹாதேவரின் பத்தினியாகி,தேவாதி தேவர்களுக்கும் தலைவியாய் இருப்பவள்

மஹாலக்ஷ்மி

சுபீக்ஷம் நல்கும் மஹாலக்ஷ்மி வடிவானவள்

ம்ருட

சர்வேஸ்வரரின் பெயரில் ஒன்று

ப்ரியா

நேசத்திற்கும் அன்பிற்கும் உரியவள்,ஈஸ்வரரை நேசிப்பவள்

 

 

பூஜை முறையில் வைத்து வணங்கப் படும் யந்த்ர சாதனங்களின் சக்தியாக இருப்பவள்.அனைத்து வழிபாட்டு முறைகளின் நுணுக்கங்களின் வடிவமானவள்.உயர்ந்த மனோ நிலையில் உள்ளவள்.சஹஸ்ரத்தில் ஈஸ்வரரருடன் இணைந்திருப்பவள். மஹேஸ்வரின் பத்தினியானவள்.மஹாதேவரின் பத்தினியானவள்.தேவாதி தேவர்களுக்கும் தலைவியாய் இருப்பவள்.நல்வாழ்வும் செல்வமும் நல்கும் மஹாலக்ஷ்மி வடிவமானவள்.சர்வேஸ்வர ரின் அன்பிற்கும் பாஸத்திர்க்கும் உரியவள்.ஈஸ்வரனை நேசிப்பவள்

இந்த விளக்கங்களை voice ஆகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு அம்பாளின் பேரருளுக்கு பாத்திரமாகுங்கள்

இன்று இந்த  ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்.

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

திங்கள், ஜூலை, 1, 2024

 

  

No comments:

Post a Comment