சகுணமும்
நிர்குணமும்
சிவதாஸன் ஜகன்நாதன்
ஓம்
நமசிவாய:
ஞாயிறு, 30 ஜூன் 2024
நமது லலிதா சஹஸ்ரநாமப் பதிவில் இது நாள் வரையில் அம்பாளின் நிர்குண ஸ்வரூபங்களை பார்த்தோம்.இப்பொழுது அம்பாளின் சகுண ரூபங்களைப் பார்க்கப் போகின்றோம்.அதற்கு முன்பாக சகுணம், நிர்குணம் என்றால் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
மனம் என்பது இன்னது தான் என யாராலும் தெளிவாக தீர்த்து கூறவே
இயலாது. நம் துன்பங்கள் அனைத்திற்கும் ஒரே காரணம் நம் மனம்தான். ஆனால் மனம் எங்கே
உள்ளது என்று தேடினால் அப்படி எதுவுமே நமக்கு இருப்பதாகத் தெரியவில்லை. கற்பனைகளின் உறைவிடமே
மனம் தவிர, மனம் என்ற ஒன்று இல்லை. இல்லாத மாயா மனம் நம்மை
எப்படிஎல்லாம் ஆட்டுவித்து துன்புறுத்துகிறது என்பது நாம் அனைவரும்
உணர்ந்ததே.
மதமும் சனாதன நெறிமுறைகளும் நமக்கு அளித்துள்ள வேதங்கள்,
அனுஷ்டானங்கள், பாராயண விதிகள், பூஜை புனஸ்காரங்கள், நியம நிஷ்டைகள், ஆகமங்கள், அனைத்துமே நாம் நம் மனதை நம்
கட்டுப்பாடிற்கு கொண்டுவர உறுதுணையாய் இருப்பதற்கே யாகும்..
அவ்வாறு செய்யும் உபாசனைகள்
இரண்டு விதமாக உள்ளன. ஒன்று சகுண உபாசனை அதாவது ஒரு உருவத்தை கொண்ட ஏதாவது ஒரே தெய்வத்தின்
வழிபாடு.
மற்றொன்று நிர்குண உபாசனை அதாவது அந்த உருவமும் பெயரும் குணமும் எதுவும் அற்ற
பரம்பொருளை, மனதில் வேறு எதையுமே
சிந்திக்காமல் இருந்து, மனதை மௌனமாக்கும் பிரம்ம உபாசனை.
இவ்விரண்டை குறிக்கும் விதமாகவே மாணிக்கவாசகர்
திருவாசகத்தின் முதல் அடியை "நம:
சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!!" என துவங்கியுள்ளார்.
நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரவடிவில் நாம்
ஈஸனை எண்ணும்பொழுது அங்கே சிவன் எந்த உருவமுமில்லாமல் அந்த உருவமற்ற ஓங்காரத்திலேயே
நிலைத்திருக்கின்றார்.கண்னை மூடிக்கொண்டு நமசிவாய என்று சொல்ல்ம்பொது நமக்கு எந்த உருவமும் கற்பனையிலும் தோன்றுவதில்லை.அங்கே
பரம்பொருளான சிவபெருமான் உருவமற்ற நிர்குணனாக விளங்குகிறார்.
நாதன்தாள் என்ற சொல்லும்போது அங்கே நம் த்யானத்தில் பரமனின் திருவடிகளை
நம்மால் உருவகப் படுத்தி வணங்க முடிகிறது.அதாவது இறவனுக்கு ஒரு உருவம் கொடுத்து வழிபட்
முடிகின்றது இதையே நாம் சகுண வடிவம் எங்கிறோம்
சகுன மற்றும் நிர்குன
உபாசனைகளில் நிற்குண அதாவது மனதில் எந்த வீண் சிந்தனையும் எழாமல் இருக்க பயிற்சி
செய்வதே சிறந்ததாகும். ஏனெனில், கற்பனைகள்
இல்லாத நிலையே நம் சுயநிலை. ஆனால் ஒரு உருவத்தை வழிபடும்போது, அதற்க்கு பெயர், உருவம், குணம்,
தோஷம், முதலிய கற்பனைகள் நாம்
செய்யவேண்டியுள்ளது. எங்கும் நிறைந்து, அனைதுமாயும் உள்ள
பரத்திற்கு நாம ரூபம் தருவது நம் மடமை அன்றோ?!!
சும்மா இருக்கத்தெரியாத
மனதிற்கு எதோ ஒரு இறைவனுடைய நாமத்தை திரும்பத்திரும்ப கூறிக்கொண்டே இருக்க, சிறிது காலத்தில் சும்மாஇருக்க
கற்றுக்கொள்ளும். நாம ஜபம் செய்யும்போது, மனதில் வேறு எந்த
எண்ணமும் எழாமல், எந்த உருவத்தையும் கற்பனை செய்யாமல்
இருத்தல் முக்கியம். ஒரே நாமத்தையே ஜபம் செய்யவேண்டும். மாற்றி மாற்றி ஜபம்
செய்யக்கூடாது.
அனைவராலும் நாமஜபம் செய்ய
சாத்தியமல்ல. அப்படிப்பட்டவருக்கு அளிக்கப்பட்டதே இறை உருவங்கள். ஏதாவது ஒரு
உருவத்தை மனதில் கற்பித்து தியானித்து வர சிறிது காலத்தில் மனம் ஒருமைப்பட்டு
நாமஜபத்திற்க்கோ, மௌனமாய்
இருக்கவோ தயாராகிவிடும். அவ்வாறு தியானம் செய்யும் போது ரூபத்தை மாற்றி மாற்றி
தியானம் செய்யக்கூடாது. ஒரே உருவத்தை தான் நினைக்க வேண்டும். .
நாமஜபம் நம்மை நம் சுய வடிவான
மனதற்ற நிலைக்கு இட்டுச்செல்லும்.
உருவ தியானம் மன
ஒருமைப்பாட்டையே உண்டாக்கும் ஆனால் மனதை நாசம் செய்யாது.
இதன் காரணமாகவேதான் லலிதா சஹஸ்ரநாமத்தில்,அம்பாளின்
நாமங்களில் நிர்குண நாமங்களும், சகுண நாமங்களும் சொல்லப் பட்டுள்ளன.
இந்த சிறிய விளக்கத்துடன் நாம் நளை முதல் அம்பாளின்
சகுண ரூபங்களின் வடிவங்களின் ஸ்லோகங்களைத் தொடருவோம்
இத்துடன் இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்.நாள
அடுத்த இரண்டு ஸ்லோகங்களின் விளக்கமோடு தொடருவோம்.
நன்றி .வனக்கம்
சிவதாஸன் ஜகன்நாதன்
ஓம்
நமசிவாய:
ஞாயிறு, 30 ஜூன் 2024
No comments:
Post a Comment