Wednesday, June 12, 2024

 

 

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 6                                                     ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

அனைவருக்கும் வணக்கம்

இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின்  14 மற்றும் 15வது  ஸ்லோகங்களைப் பார்ப்போம்.

14) காமேஸ்வர ப்ரேமரத்ன மணி ப்ரதிபணஸ்தனீ|
னாப்யாலவால ரோமாளி லதா பல குசத்வயீ || 14 ||

 

காமேஸ்வர

காமேஸ்வரரின்

ப்ரேம

ப்ரேமை அன்பு

ரத்னமணி

மதிப்பற்ற ரத்தினங்கள்

ப்ரதிபன

பரிமாற்றமாக

ஸ்தனி

மார்பகங்கள்

 

 

நாப்யாலவால

தொப்புள் கொடியிலிருந்து

ரோமாலி

முடி

லதா

கொடி

ஃபல

கனிகள்

குச த்வயீ

இரு மார்பகங்கள்

 

காமேஸ்வரரான ஈஸ்வரின் ஈடற்ற ப்ரேமைக்கு தன் பெண்மையின் அடையாளமான ஸ்தனங்களை பரிசளிப்பவள்

தொப்புளிலிருந்து தோன்றிய படர் கொடியினின்றும் விளைந்த இரு கனிகளென விளங்கும் மார்பகங்களைக்ன் கொண்டவள்

 

15) லக்ஷ்யரோமலதா தாரதா ஸமுன்னேய மத்யமா |
ஸ்தனபார தளன்-மத்ய பட்டபந்த வளித்ரயா || 15 ||

 

லக்ஷய

கண்ணுக்குப் புலப்படும்

ரோம 

முடி

லதா தாரத

கொடி புறப்படுதல்

சமுன்னேய

முடிவுக்கு வருதல்

மத்யமா

இடை-இடுப்புப் பகுதி

 

 

ஸ்தனபார

கனக்கும் மார்பகங்கள்

தலன்

ஒடிவது

மத்ய

வயிற்றுப் பகுதி

பட்டபந்த

ஒட்டியாணம்

வலித்ரயா

மூன்று மடிப்புகள்

 

 

 

கொடிபோன்ற இடுப்பில் புலப்படும் மெல்லிய ரோமத்தால் மட்டுமே இடை இருப்பதி உணர்த்துபவள்

கனத்த மார்பகத்தைத் தாங்குவதால் வயிற்றுப் பகுதியில் மும்மடிப்பும் மார்பகத்தின் பாரத்தால் ஒடியும் மெல்லிய இடைக்கு ஒட்டியானமும் கொண்டு திகழ்பவள்

 

இன்று இந்த இரண்டு ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேர ருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்

ஓம் நமசிவாய:

சிவதாஸன் ஜகன்நாதன்

புதன்,, ஜூன், 12, 2024

No comments:

Post a Comment