ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 12
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
செவ்வாய்,ஜூன் 18 2024
அனைவருக்கும் வணக்கம்
இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 26 மற்றும்  27 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்
இந்த இரண்டு ஸ்லோகங்களில் பண்டாசுர வதத்துக்குப்
புறப்படும் அன்னை அவளால் சூழ்ந்திருந்து படை நடத்தும் பிறதேவியர் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது
சக்ரராஜ ரதாரூட ஸர்வாயுத பரிஷ்க்றுதா |
கேயசக்ர ரதாரூட  மந்த்ரிணீ பரிஸேவிதா || 26 ||
கிரிசக்ர ரதாரூட தண்டனாதா புரஸ்க்றுதா |
ஜ்வாலாமாலினி காக்ஷிப்த வஹ்னிப்ராகார மத்யகா || 27 ||
| சக்ர ராஜ | ஸ்ரீ
   லலிதாம்பிகையின் ரதம் | 
| ரதாரூட | ரத்தில்
  ஏறி ஆரோகணித்து | 
| சர்வாயுத | எல்லாவித
  ஆயுதங்களும்  | 
| பரிஷ்க்ருதா | சூழ்ந்து
  அலங்கரிக்கப் பட்டு | 
|  |  | 
| கேயச்சக்ர | கேயச்சக்கரம்
  எனும் ரதம் | 
| ரதாரூட | ரதத்தில்
  ஆரோகணித்து | 
| மந்த்ரிணீ | மந்த்ரிணீ
  தேவி | 
| பரிசேவிதா | உயர்ந்த
  அன்பினால் பணி செய்தல் | 
அனைத்து ஆயுதங்களையும் தாங்கி சக்ர ராஜம் என்னும் தனது தேரில் ஏறிபெரும்
சேனையை அணி செய்திருப்பவள்
கேயச் சக்கரம் என்ற ரதத்தில் அமர்ந்த மந்த்ரிணீ தேவியால் தொண்டு செய்யப்
படுபவள்
கிரிசக்ர ரதாரூட தண்டனாதா புரஸ்க்றுதா |
ஜ்வாலாமாலினி காக்ஷிப்த வஹ்னிப்ராகார மத்யகா || 27 ||
| கிரிச் சக்ர | கிரிச்சக்ரம்
  என்னும்  | 
| ரதாரூட | ரதத்தில்
  ஏறி | 
| தண்ட நாதா | வராஹீ
  எனப்படும் தேவி | 
| புரஸ்க்ருதா | கவணித்து
  துணை இருப்பவள் | 
|  |  | 
| ஜ்வாலாமாலினி | ஜ்வாலாமாலினி
  தேவி | 
| க்ஷிப்த | அனுப்பிய | 
| வஹ்னி | அக்னி
  தேவதை | 
| ப்ரகார | கோட்டை,அரண் | 
| மத்யகா | மத்தியில்,
  நடுவில் | 
|  |  | 
கிரிச் சக்கரம் என்னும் தேரில் ஏறிவரும் தண்டநாதா எனும் வராஹீயால் புடைசூழப்பட்
டிருப்பவள்
ஜ்வாலாமாலினி எனும் தேவியால் ஏறப்டுத் தப்பட்ட அக்னிக் கோட்டையின் மத்தியில்
இருந்து அமர்ந்து படை நடத்துபவள்
இந்த
ஸ்லோகங்களுக்கான விளக்கங்களை voice மூலமும் கொடுத்துள்ளேன் கேட்டு மகிழுங்கள்
இன்று இந்த
இரண்டு ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து
அம்பிகையின் பேர ருள் பெற்றுய்யுங்கள்
நாளை மீண்டும்
சந்திப்போம்
ஓம் நமசிவாய:                                                               
சிவதாஸன்
ஜகன்நாதன்                                                          
திங்கள்,, ஜூன்,17, 2024
 
No comments:
Post a Comment