Tuesday, June 11, 2024

  

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 5

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

அனைவருக்கும் வணக்கம்

இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின்  12 மற்றும் 13வது  ஸ்லோகங்களைப் பார்ப்போம்.

12) அனாகலித ஸாத்றுய சுபுக ஸ்ரீவிராஜிதா |
காமேபத்த மாங்கல்ய ஸூத்ரஸோபித கந்தரா || 12 ||

அனா அகலித

ஒப்பிட முடியாத

சாத்ருஷ்ய

அழகான சாயையுடைய

சிபுக

தாடை

ஸ்ரீ விராஜிதா

அழகுடன் அமையப்பெற்றல்

 

 

காமேஷ

காமேஸ்வரரான ஈஸ்வரன்

பந்த

கட்டிய

மாங்கல்ய சூத்ர

திருமாங்கைய சூத்திரம்

ஷோபித

மின்னும்

கந்தரா

கழுத்தை

 

 

 

ஒப்பிடமுடியாத வியப்பிற்கப்பால் அழகுடன் திகழும் தாடையை அமையப் பெற்றவள்

காமேஸ்வர ரான் ஈஸ்வரன் அணிவித்த திருமாங்கல்ய நாணுடன் சோபிக்கும் கழுத்தை உடையவள்

 

 

13) கனகாங்கத கேயூர கமனீய புஜான்விதா |
ரத்னக்ரைவேய சிந்தாக லோலமுக்தா பலான்விதா || 13 ||

கனகாங்கத

தங்க வளையல்

கேயூர

புஜங்களில் அணியும் வங்கி

கமனீய

ரம்யமான

புஜ

கைகள்

அன்விதா

அதனுடன் கூடிய

 

 

ரத்ன

ரத்ன மணிகள்

க்ரைவேய

பதக்கமான மாலை

சிந்தாக

ஓயாது அலைக்கழித்தல்

லோல

ஆடுகின்ற

முக்த பல்

முத்துக்கள்

அன்விதா

சேர்த்துக் கூடிய

 

தங்க வளையலும் புஜங்களில் வங்கியும் அணிந்து அலங்கரிக்கும் ரம்யமான கரங்களை உடையவள்

முத்துமாலையுடன் கூடி ரத்தினங்களும் சேர்ந்து ஓயாது ஆடும் பதக்கமான ஹாரத்தை அணிந்திருப்பவள்

 

இன்று இந்த இரண்டு ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேர ருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்

ஓம் நமசிவாய:

சிவதாஸன் ஜகன்நாதன்

செவ்வாய், ஜூன், 11, 2024

 


No comments:

Post a Comment