Tuesday, June 25, 2024

 

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 19

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்                                                        

செவ்வாய்,,ஜூன் 25  2024

அனைவருக்கும் வணக்கம்

இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 40 மற்றும்   41 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்

இன்று அம்பாளின் மந்த்ர ஸ்வரூபத்தின் கடைசி ஸ்லோகத்தையும்,  ( 40 வது ஸ்லோகம் ),பக்தானுக்ரஹத்தின் முதல் ஸ்லோகத்தையும்  ( 41 வது ஸ்லோகம் ) பார்ப்போம்

தடில்லதா ஸமருசிஃ, ஷட்-சக்ரோபரி ஸம்ஸ்திதா |
மஹாக்திஃ, குண்டலினீ, பிஸதம்து தனீயஸீ || 40 ||

தடித்

மின்னல்

லதா

கிரணம், கதிர்

சம

அதனையொத்த ,சமமான

ருசிர

ஒளி,வெளிச்சம்

ஷட் சக்ர

ஆறு சக்கரங்கள்

உபரி

மேலே

சம்ஸ்திதா

இருப்பவள்,நிலைபாடு கொண்டவள்

மஹ

விழா, கொண்டாட்டம்

ஆசக்தி

பிடித்தமான

குண்டலினீ

குண்டலினீ சக்தியான மூலாதாரம்

பிஸ தந்து

தாமரை இழை

தனீயஸீ

மெல்லிய சிறிய வடிவம்

 

 

அம்பாள் மின்னலின் கிரணங்களின் ஒளிக்கு இணையானவள்.குண்டலியின் ஆறு ஸ்தானங்களான  மூலாதாரம்,ஸ்வாதிஷ்டானம்,மணிபூரகம்,அனாஹதம்,விஷுக்தி,ஆக்ஞ்யை களின் மேலே நிலை கொண்டிருப்பவள்

அம்பாள் மஹாசக்திபடைத்தவளாகவும் ,தானே அந்த சக்தியாகவும் விளங்குபவள்,குண்டலியின் ஆதாரமான மூலாதாரத்தில் இருந்து தாமரையின் இழை போல மென்மையாகவும் சிறியதாகவும் இருந்து எளிதில் அகப்படாதவள்

பவானீ, பாவனாகம்யா, பவாரண்ய குடாரிகா |
பத்ரப்ரியா, பத்ரமூர்தி, ர்பக்தஸௌபாக்ய தாயினீ || 41 ||

பவானீ

ஈஸ்வரரின் பத்தினி

பவானீ

சுபிக்ஷத்தை உண்டாக்குபவள்

பாவனா

சிந்தனையை ஒருமுகப்படுத்துதல்

கம்யா

சாத்தியமானது

பவ

உலகம், சம்ஸார ஸாகரம்

ஆரண்ய

ப்ரிய காடு,வனம்

குடாரிகா

கோடாலியால் அழிப்பவள்

பத்ர

கனிவான அருள்நிறைந்த

ப்ரியா

பிரியமானவள்

பத்ர

மகிழ்ச்சியான, மங்கலமான

மூர்த்தி

வடிவம் கொண்டவள்

பக்த

பக்தர்கள்

சௌபாக்ய

வள்மான வாழ்வு

தாயினி

அருளிக் கொடுப்பவள்


அம்பாள் பரமேஸ்வரரின் பத்தினியாகவும்,வளத்தையும் சுபிக்ஷத்தை அளிப்பவளாகவும் இருக்கின்றாள்.அவள் ஒருமுகப் படுத்தப் பட்ட த்யானத்தால் புத்திக்கும் ஆன்மாவுக்கும் புலப்படப் படுபவள்.கடக்க அரியதான பெரும் காட்டை கோடாலி அழிப்பதிப் போல உலக வாழ்வென்ற பெரு வனத்தை அழித்து பயனத்தை எளிதாக்குபவள்.

அவள் கனிவாஅன அருள் நிறைந்த பிரியமானவள்.மங்களமும் செல்வமும் செழிக்கும் நற்பேறுகளின் உருவமானவள்.பக்தர்களின் வாழ்வில் செழிப்பும் வள்மும் அருள்பவள்

இந்த ஸ்லோகங்களுக்கான விளக்கங்களை voice மூலமும் கொடுத்துள்ளேன் கேட்டு மகிழுங்கள்

இன்று இந்த இரண்டு ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேர ருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

செவ்வாய்,, ஜூன்,25,, 2024

 

 

No comments:

Post a Comment