Monday, June 24, 2024

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 18

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்                                                        

திங்கள்,,ஜூன் 24  2024

அனைவருக்கும் வணக்கம்

இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 38 மற்றும்   39 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்

இன்றைய இரண்டு ஸ்லோகங்களில் நுட்பமான குண்டலினி யோகத்தின் வடிவமாகவும், அந்த சக்தியின் தளைகளையும் தடைகளையும் தகர்த்து எரிபவளாகவும் இருக்கும் அம்பாளின் ஸ்வரூபம் விளக்கப் படுகின்றது குண்டலினி சக்தியே இந்த உயிர் இயங்குவதற்கு ப்ரதானமாக விளங்குகிறது.

அது மூலாதாரத்தில் ஆரம்பித்து துரியத்தில் முடிகிறது அவை 1.மூலாதாரம் 2 ஸ்வாதிஷ்டாணம் 3.மணிபூரகம் 4. அனாகதம் 5.விசுக்தி 6. ஆக்ஞை 7.துரியம் என்பவனாகும்

இதை பற்றிய விளக்கத்தை என்னுடைய voice பதிவில் விளக்குகிறேன்

மூலாதாரைக நிலயா, ப்ரஹ்மக்ரந்தி விபேதினீ |
மணிபூராந்த ருதிதா, விஷ்ணுக்ரந்தி விபேதினீ || 38 ||

ஆஜ்ஞா சக்ராந்தராளஸ்தா, ருத்ரக்ரந்தி விபேதினீ |
ஸஹஸ்ராராம்புஜா ரூடா, ஸுதாஸாராபி வர்ஷிணீ || 39 ||

 

மூலாதாரைக நிலயா, ப்ரஹ்மக்ரந்தி விபேதினீ |
மணிபூராந்த ருதிதா, விஷ்ணுக்ரந்தி விபேதினீ || 38 ||

மூலாதார

மூலாதார சக்கரம்

மூலாதாரைக

அந்த மூலாதாரத்தில்

நிலயா

நிலைத்திருப்பவள்

ப்ரஹ்ம

மூலாதாரத்தின் ஆதாரமான ப்ரம்மா

க்ரந்தி

முடிச்சி

விபேதினி

துளைப்பவள்

மணிபூர

மண்பூர சக்கரம்

அந்தர்

உள்ளே

உதிதா

எழுபவள்

விஷ்ணு

மணிபூர தத்துவஸ்வரூபமான விஷ்ணுவின்

க்ரந்தி

முடிச்சுகளை

விபேதினி

துளைத்தெடுப்பவள்

 

 

அம்பாள் மூலாதார்த்தில் நிலை கொண்டுள்ளாள்.மூலாதாரம் குண்டலி ஸ்தான ங்களில் முதன்மையானது.இது நமது முத்கெலும்புத்தொடரின் அடிப்பாகத்தில் அமைந்துள்ளது.இந்த மூலாதாரத்தின் தேவ தத்துவமாக ப்ரம்மா திகழ்கிறார்.அவரது நாடிகளைக் கட்டும் முடிச்சுகளை அம்பாள் துளைத்தெடுக்கிறாள்

மணிபூரக சக்ரத்தில் எழுந்தருளி இருப்பவள். மணிபூரகம் தொப்புளுக்கு மேலே அமைந்துள்ல மூன்றாவது ஸ்தானமாகும் மன்பூரகத்தின் தத்துவ தேவ ஸ்வரூபமாக விஷ்ணு திகழ்கிறார். அவரது முடிச்சுகளையும் அம்பாள் துளைத்து எடுக்கிறாள்

ஆஜ்ஞா சக்ராந்தராளஸ்தா, ருத்ரக்ரந்தி விபேதினீ |
ஸஹஸ்ராராம்புஜா ரூடா, ஸுதாஸாராபி வர்ஷிணீ || 39 ||

ஆக்ஞா சக்ரா

ஞானக்கண் அமைந்த நெற்றி பகுதி

அந்தரால

நடுவில் அமைந்து

ஸ்தா

இருத்தல்

ருத்ர க்ரந்தி

ஆக்ஞையின் தத்துவ தேவனான ருத்ரன்

விபேதினி

அவரது முடிச்சுகளை துளைத்து எடுப்பவள்

சஹஸ்ரார

சஹஸ்ரார சக்ரம்

அம்புஜ

தாமரை

ஆருடா

ஏறுதல்

சுதாசார

அமிர்த சொரிவு

வர்ஷிணி

பொழிதல் வர்ஷித்தல்

 

 

புருவ மத்தியில் அமைந்துள்ள ஆக்ஞா சக்கரத்தின் நடுவில் அமர்ந்திருப்பவள்.ஆக்ஞா சக்ரத்தின் தத்துவ விளக்க தேவதா ரூபமாக ருத்ரன் இருக்கிறார்.அவரது முடிச்சுகளை அம்பாள் துளைத்து எடுக்கிறாள்

ஆயிரம் இதழ் கொண்ட தாமரை வடிவமாக உச்சந்தலையில் திகழ்ழ்ழுழ்ம் சஹஸ்ரார தாமரையில் உயர்ந்து எழுபவள் அகிருந்த அமிர்த த்தை மழையாகப் பொழிபவள்

குண்டலினியில் சொல்லப்படும் சக்கரங்களும் நாடிக்ரந்திகளும் ஸ்தூலமானவை அல்ல. அவைகள் சூக்ஷுமமானவையே ஆகும்

இந்த ஸ்லோகங்களுக்கான விளக்கங்களை voice மூலமும் கொடுத்துள்ளேன் கேட்டு மகிழுங்கள்

இன்று இந்த இரண்டு ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேர ருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

திங்கள்,, ஜூன்,24,, 2024

No comments:

Post a Comment