Saturday, June 29, 2024

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 23

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்                                                        

சனி,ஜூன் 27  2024

அனைவருக்கும் வணக்கம்

இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் ,49 மற்றும்  50 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்

இந்த இரண்டுஸ்லோகங்களும் அம்பாளின் நிர்க் குண உபாஸனையை சொல்லும் கடைசி ஸ்லோகங்களாகும்.இவைகளும் அம்பாளின் சூக்க்ஷும ஸ்வரூபங்களையே விவரிக்கின்றன

49) னிர்விகல்பா, னிராபாதா, னிர்பேதா, பேதனாஸினீ |
னிர்னாஸா, ம்றுத்யுமதனீ, னிஷ்க்ரியா, னிஷ்பரிக்ரஹா || 49 ||

நிர்விகல்பா

பொய்யான ப்ரதி பிம்பங்களில் ஆட்படாதவள்

நிர் ஆபாதா

இடையூறுகளால் நிலைகுலையாதவள்

னிர்பேதா

பேதம் / வேறுபாடு அற்றவள்

பேதநாசினீ

பேதங்களை அழிப்பவள்

நிர்நாஸா

அழிவுக்கு அப்பார்ப் பட்டவள்

ம்ருத்யு

மரணம்

மதனி

முடிவுக்கு கொண்டுவருபவள்

நிஷ்க்ரியா

கர்மங்களுக்கு அப்பார்ப் பட்டவள்

நிஷ்பரிக்ரஹா

தேவைகள் ஏதும் சாராதிருப்பவள்

அம்பாள் பொய்யான ப்ரதிபிம்பங்களுக்கு ஆட்படாதவள்.தனக்கென ஒரு உண்மையான ஸ்வரூபம் உடயவள் எனவே ப்ரதி பிம்பங்களுக்கு ஆட்படாமல் இருக்கின்றாள்.உன்னதமான பெரும் சக்தியானதால் அம்பாள் எந்தவித இடையூறுக்கும் நிலைகுலையாத தன்மையுடையவள்.எல்லாவிதமான பேதங்களையும் வேறுபாடுகளையும் அழிப்பவள்.அழிக்க முடியாத ,அழிவுக்கு அப்பார்ப் பட்டவள்.பிறப்பு இறப்பு என்ற சுழற்சியை அழித்து மரணத்தை முடுவுக்குக் கொண்டுவருபவள். எல்லாவிதமான கர்மங்களுக்கும் அப்பார்ப் பட்டவள்.எந்தவிதமான தேவைகளும் இல்லாமலிருப்பவள்

50)
னிஸ்துலா, னீலசிகுரா, னிரபாயா, னிரத்யயா |
துர்லபா, துர்கமா, துர்கா, துஃகஹம்த்ரீ, ஸுகப்ரதா || 50 ||


நிஃஸ்துலா

ஈடு இணையற்றவள்

நீலசிகுரா

கருநீல வண்ணக் கூந்தலை உடையவள்

நிரபாயா

அபாயம் அல்லது அழிவுக்கு அப்பார்ப் பட்டவள்

நிரத்யாயா

வரையறைகளுக்கு உட்படாது கடந்தவள்

துர்லபா

அடைவதற்கும் வெல்வதற்கும் அரியவள்

துர்கமா

அணுகுவதற்கு கடினமானவள்

துர்கா

பக்தர்களுக்கு கவசமாகி பாதுகாப்பவள்

துஃக

துக்கம் மற்றும் துயரங்களை

ஹந்த்ரீ

அழிப்பவள்

சுக

மகிழ்ச்சியையும்,ஆனந்தத்தையும்

ப்ரதா

வழங்குபவள்

 

 

தனக்கு இணையாக எந்த ஈடும் இணையும் இல்லாதவள்.அழகிய கரு நீலவண்ணக் கூந்தலை உடையவள். அபாயம் அல்லது அழிவுக்க அப்பார்ப் பட்டவள்.வரையறைகளைக் கடந்து அவற்றிற்கு உட்படாதவள்.வெல்லப் படுவதற்கும்,அடைவதற்கும் அரியவள்.அணுகுவதற்கு கடினமானவள்.பக்தர்களின் கவசமாக இருந்து பாதுகாப்பவள்.துக்கம் மற்றும் துயரங்களை அழிப்பவள்.சுகத்தையும் மகிழ்ச்சியையும் வழங்குபவள்

இன்று இந்த  ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்.

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

சனி ஜூன்,29,, 2024

 

  

No comments:

Post a Comment