ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 22
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
வியாழன்,,ஜூன் 27 2024
அனைவருக்கும் வணக்கம்
இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 46,47 மற்றும் 48 வது என மூன்று ஸ்லோகங்களைப் பார்ப்போம்
இந்தமூன்று ஸ்லோகங்களிலும்
அம்பாளின் நிர்குண வடிவங்களே தொடர்ந்து விளக்கப் பட்டுள்ளன அம்பாளின்
தனித்துவத்தையும்,இயல்பையும் சில பெயர்களால் மட்டுமே விளக்கிவிட முடியாது .எனினும்
இயன்றவரை அவற்றை விளக்க முற்படபட்டுள்ளது.இவைகள் அனைத்துமே அம்பாலின் சூக்க்ஷம வடிவங்களையே
போற்றுகின்றன
46) னிஷ்காரணா, னிஷ்களங்கா, னிருபாதி, ர்னிரீஸ்வரா |
னீராகா, ராகமதனீ, னிர்மதா, மதநாஸினீ || 46 ||
நிஷ்காரணா |
காரணமற்று முதன்மையாகத் திகழ்பவள் |
நிஷ்களங்கா |
களங்கமற்று தூய்மையாய் திகழ்பவள் |
நிருபாதி |
வரையறை யற்றவள் |
ஈஷ்வர |
தலைவர் முதன்மையான இறைவர் |
நிரீஷ்வரா |
தனக்கு அப்பார்ப் பட்ட தலைமை அற்றவள் |
ராக |
புல இன்பத்தின் அபிலாஷைகள் |
நிராகா |
புலங்களின் இச்சைக்கு கட்டுப் படாதவள் |
ராகமதனி |
லோகாபிலாஷைகளை அழிப்பவள் |
மதம் |
ஆணவம்,செறுக்கு |
நிர்மதா |
ஆணவம் / செறுக்கு அற்றவள் |
மத |
ஜீவங்களின் ஆண்வம் என்னும் மாயை |
நாஸினீ |
ஒதுக்கி அழிப்பவள் |
|
|
அம்பாள்காரணமற்றுமூலமாகத்திகழ்கிறாள்.
களங்கமில்லாத்தூய்மையானவள்.வரையறைக்கு உட்படாமல் எல்லையற்று விளங்குபவள்.ப்ரபஞ்சத்தில்
தனக்கு அப்பாற்பட்ட தலைமையில்லாதவள்.ஐம்புலன் களின் இச்சைக்குக் கட்டுப் படாதவள்.லோகத்தின்
அப்லாஷைகளை அழித்து ரக்ஷிப்பவள்.ஜீவன்களின் கர்வம் என்ற குணத்தை அழித்துக் காப்பவள்.
47) னிஸசிந்தா, னிரஹங்காரா, னிர்மோஹா, மோஹனாஸினீ |
னிர்மமா, மமதாஹம்த்ரீ, னிஷ்பாபா, பாபனாஸினீ || 47 ||
நிஷஸிந்தா |
கவையோ பதற்றமோ அற்றவள் |
நிர் |
இல்லாதவள் |
அஹங்காரா |
மமதை என்ற தீய குணம் |
னிர் |
அப்பார்ப் பட்டவள் |
மோஹா |
மாயை,குழப்பம்,கவனச் சிதறல் |
மோஹநாசினீ |
மோஹ மாயைகளை அழிப்பவள் |
நிர்மம |
தான் தனதெனும் சுய நலம் அற்றவள் |
மமதா
|
தனது என்ற சுயநலத்தை |
ஹந்த்ரீ |
அழிப்பவள் |
நிஷ் |
ஆட்படாதவள் |
பாபா |
பாபங்களுக்கு |
பாப
|
பாபச் செயல்களை |
நாஸ்னீ |
அழித்து நாஸம் செய்பவள் |
கவலையோ
பதற்றமோ அற்றவள் தெளிவான சிந்தனை உடையவள்.மமதை என்னும் அஹங்காரம் அற்றவள்.மோஹம்
என்னும் மாயை களுக்கு அப்பாற் பட்டவள்.அவளடியை சரணடிந்தவர்களின் மோக வலையை அறுத்தெரிந்து
நாஸம் செய்பவள்.தன்னலமற்றவள்.இருமையற்ற ஒருமைப் பாட்டின் தத்துவமாய் விள்ங்குபவள்.ஜீவாத்மாக்களின்
தான் தனது என்ற சுய நலத்தை ஒழிப்பவள்.பாபங்களுக்கு உட்படாமல் அப்பார்ப் பட்டவள்.ஜீவங்களின்
பாபங்களை நசுக்கி அழிப்பவள் பாப விமோசனத்திற்குக் காரணமாயிருப்பவள்
48) னிஷ்க்ரோதா, க்ரோதஸ்மனீ, னிர்லோபா, லோபனாஸினீ |
னிஃஸம்ஸ்யா, ஸம்ஸ்யக்னீ, னிர்பவா, பவநாஸினீ || 48 ||
நிஷ்க்ரோதா |
கோபம்,ஆத்திரங்களுக்கு ஆட்படாதவள் |
க்ரோத |
கோபம் ஆத்திரம் |
ஸமனீ |
சாந்தப் படுத்துபவள் |
நிர் |
இல்லாத |
லோபா |
லோபம் என்னும் பேராசையற்றவள் |
நாசினீ |
அழிப்பவள் |
லோப |
பக்தர்களின் பேராசையை |
நிஸ்ஸம்ஸ்யா |
ஐயங்களுக்க அப்பாற்பட்டவள் அம்பாள் |
ஸம்ஷ்யக்னீ |
ஐயங்களை தகர்த்து தெளிவாக்குபவள் |
பவா |
ஆரம்பம்,மூலம் |
நிர்பவா |
ஆரம்பமும் முடிவும் அற்றவள் |
பவநாசினீ |
பிறப்பு இறப்பு சுழற்சியை தவிர்ப்பவள் |
அம்பாள் ஆத்திரம்
கோபம் போன்ற உணர்வுகளுக்க அப்பார்ப் பட்டவள்,ஜீவராசிகளிம் கோபம் ஆத்திரம் போன்ற குணங்களை
சாந்தப் படுத்துபவள்.லோபம் என்னும் பேராசை அற்றவள்.அவ்வறே அந்த லோபம் பேராசை என்ற
பக்தர்கள்ன் குணங்களையும் அழிப்பவள். ஐயங்களுக்கு அப்பார்ப் பட்டவள். அதேபோன்று பக்தர்களின்
ஐயங்களைப் போக்குபவள்.ஆரம்பமும் முடிவுமல்லாத ஆதியந்தமற்றவள்.பிறப்பு இறப்பு என்ற
சுழற்சியை தவிர்ப்பவள்.கானல் நீர் போன்ற கற்பனையான பிம்பங்களுக்கு பொய்மைக்கு ஆட்படாதவள்
இன்று இந்த மூன்று
ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து
அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன்
ஜகன்நாதன்
வியாழன்,, ஜூன்,27,, 2024
No comments:
Post a Comment