ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 13
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்3
புதன்,ஜூன் 19 2024
அனைவருக்கும் வணக்கம்
இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 28 மற்றும்    29 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்
இந்த இரண்டு ஸ்லோகங்களில் பண்டாசுர வதத்துக்குப் புறப்படும் அன்னை
அவளால் சூழ்ந்திருந்து படை நடத்தும் பிறதேவியர் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது இவைகளில்
 லலிதாம்பிகையின் படைத்தளபதிகளான சக்திசேனா,
நித்யதேவி,பாலாம்பிகை மற்றும் மந்திரிணிதேவி ஆகியோர் பண்டாசுரனின் மகன் மற்றும் தம்பியை
த்வம்சம் செய்து அழித்ததையும் அதனால் அம்பாள் அடைந்த மகிழ்ச்சியையும் விவரிக்கின்றன
பண்டஸைன்ய வதோத்யுக்த ஸக்தி விக்ரம ஹர்ஷிதா |
நித்யா பராக்ரமா டோப னிரீக்ஷண ஸமுத்ஸுகா || 28 ||
பண்டபுத்ர வதோத்யுக்த பாலாவிக்ரம நந்திதா |
மந்த்ரிண்யம்பா விரசித விஷங்கவத
தோஷிதா || 29 ||
28) பண்டஸைன்ய வதோத்யுக்த ஸக்தி
விக்ரம ஹர்ஷிதா |
நித்யா பராக்ரமாடோப னிரீக்ஷண ஸமுத்ஸுகா || 28 ||
| பண்ட | பண்டாசுர  | 
| சைன்ய | சேனை | 
| வதோத் | அழித்து நாஸமாக்குதல் | 
| யுக்த | செய்லாற்றுதல் | 
| ஷக்தி | ஷக்தி சேனை | 
| விக்ரம | வலிமை பொருந்திய | 
| ஹர்ஷிதா | ஆனந்திப்பவள் | 
| நித்ய  | நித்ய தேவிகள் | 
| பராக்ரம | வீரியம் ,பராக்ரம்ம | 
| ஆடுப | பெருமை | 
| நிரீக்ஷண | கவனித்துப் பார்த்திருத்தல் | 
| சமுத்சுகா | அணர்ச்சிப் பெருக்குடன்,
  ஆர்வமாக | 
பண்டாசுரனின் படைகளை த்வம்சம் செய்த ஷக்தி
சேனையின் பராக்ரமத்தைக் கண்டு ஆன ந்திப்பவள் நித்ய தேவிகளின் ஆற்றலையும், பெருமையும்
கண்டு உணர்ச்சிப் பெருக்கில் ஆர்ப்பரிப்பவள்
29) பண்டபுத்ர வதோத்யுக்த பாலாவிக்ரம நந்திதா |
மந்த்ரிண்யம்பா விரசித விஷங்கவத
தோஷிதா || 29 ||
| பண்டபுத்ர | பண்டாசுரனின்
  புத்திரன் | 
| வதோத் | வதித்த,அழித்த | 
| யுக்த | புரிதல்,செயலாற்றுதல் | 
| பாலா | பாலாம்பிகை | 
| விக்ரம | பராக்ரம், வலிமைம | 
| நந்திதா | குதூகலித்தல்,ஆநந்தித்தல் | 
| மந்த்ரிண்யம்பா | மந்த்ரிணீ தேவி | 
| விரசித | செயல் புரிதல் | 
| விஷங்கவத | விஷங்கன்
  என்ற அசுரனை வதைத்தல் | 
| தோஷிதா | சந்தோஷமடைபவள் | 
| 
 | 
 | 
| 
 | 
 | 
பண்டாசுரனின் புதல்வனை வதம் செய்த பாலாம்பிகையின்
துணிச்சல் கண்டு அகமகிழ்பவள்
மந்த்ரிணீ தேவி விஷங்கன் என்ற பண்டாசுரனின்
சகோதரனான அசுரனை அழித்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைபவள்
இந்த
ஸ்லோகங்களுக்கான விளக்கங்களை voice மூலமும் கொடுத்துள்ளேன் கேட்டு மகிழுங்கள்
இன்று இந்த
இரண்டு ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து
அம்பிகையின் பேர ருள் பெற்றுய்யுங்கள்
நாளை மீண்டும்
சந்திப்போம்
ஓம் நமசிவாய:                                                               
சிவதாஸன்
ஜகன்நாதன்                                                          
புதன்,, ஜூன்,19, 2024
 
No comments:
Post a Comment