ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 21
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
வியாழன்,,ஜூன் 27 2024
அனைவருக்கும் வணக்கம்
இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 44 மற்றும் 45 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்
இந்த இரண்டு ஸ்லோகங்களிலும் அம்பாளின்
நிர்குண வடிவங்கள் விளக்கப் பட்டுள்ளன அம்பாளின் தனித்துவத்தையும்,இயல்பையும் சில
பெயர்களால் மட்டுமே விளக்கிவிட முடியாது .எனினும் இயன்றவரை அவற்றை விளக்க முற்படபட்டுள்ளது
44)
னிர்லேபா, னிர்மலா, னித்யா, னிராகாரா, னிராகுலா |
னிர்குணா, னிஷ்களா, ஸாந்தா, னிஷ்காமா, னிருபப்லவா || 44 ||
லேபா--நிர்லேபா |
களங்கம்--களங்கமற்றவள் |
மல—நிர்மலா |
அழுக்கு—தூய்மையானவள் |
நித்யா |
நிரந்தரமானவள் |
நிராகாரா |
வெளித்தோற்றமிலாது
அரூபமானவள் |
நிராகுலா |
குழப்பமில்லாது
தெளிவானவள் |
நிர்குணா |
மூன்று
குணங்களும் அப்பார்ப் பட்டவள் |
நிஷ்கலா |
பூரணத்தின்
தத்துவமானவள் |
ஷாந்தா |
சாந்தம்
பொருந்தியவள் |
நிஷ்காமா |
இச்சைகளின்
பிடிக்கு அப்பார்ப் பட்டவள் |
நிருபப்லவா |
அழிவற்ற
தன்மையுடையவள் |
|
|
அம்பாளின் நிர்குண
ஸ்வ்ரூபங்கள் இந்த ஸ்லோகத்தில் அழகாக விளக்கப் பட்டுள்ளன.அம்பாள் களங்கமில்லாத தூய்மையான
வளாகவும்,அழிவற்ற நிரந்தரமானவளாகவும்,புறத் தோற்ற மில்லாது அரூபமானவளாகவும்,குழப்பமில்லாத
தெளிவான வளாகவும்,சத்வ,ராஜ,தாமஸ குணங்களுக்கு அப்பார்ப் பட்ட வளாகவும்,பூரணத்தின் தத்துவமாகவும்,சாந்தமேயான
வடிவினளாகவும், இச்சையின் பிடிகளுக்கு அப்பார்ப் பட்டவளாகவும்,அழிவற்றதன்மையோடு நிரந்தரமான
வளாகவும் உள்ளாள்
45) னித்யமுக்தா, னிர்விகாரா, னிஷ்ப்ரபஞ்சா, னிராஸரயா |
னித்யஸுத்தா, னித்யபுத்தா, னிரவத்யா, னிரந்தரா || 45 ||
நித்ய |
என்றென்றும் |
முக்தா |
நிரந்தரமாக முக்தியில் நிலைத் திருப்பவள் |
நிர்விகாரா |
பேதமற்றவள் மாறுதலுக் குட்படாதவள் |
நிஷ்ப்ரபஞ்சா |
ப்ரபஞ்சத்திற்கு அப்பார்ப் பட்டவள் |
நிராஷரயா |
சார்பின்றி ஸ்வாதீன சுயம்புவானவள் |
நித்ய |
என்றென்றும் |
சுத்தா |
அப்பழுக்கற்றவள் |
நித்யபுத்தா |
என்றென்றும் அறிவாகி ஞானியானவள் |
நிர |
அற்றவள் |
அவத்யா |
குறைபாடுகள் |
நிரந்தரா |
எங்கும் எக்காலமும் நிறைந்திருப்பவள் |
அம்பாள் என்றென்றும் நிரந்தரமான முக்தியில் நிலைத்திருப் பவள்,பேதமில்லாது
எந்தவித மாறுதலுக்கும் உட்படாதவள் இந்த ப்ரபஞ்சத்திற்கப் பார்ப் பட்டவள்,எந்தவித சார்புமின்றி
சுயம்புவானவள்,என்றென்றும் அப்பழுக்கற்ற தூய்மையானவள்,என்றென்றும் அறிவின் உருவாகி
ஞானியாகி இருப்பவள்எந்த வித குறை பாடுகளும் அற்றவள் காலமும் இடமும் கடந்து எங்கும்
எக்காலமும் நிறைந்திருப்பவள்
இன்று இந்த
இரண்டு ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து
அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்
நாளை மீண்டும் சந்திப்போம்
ஓம் நமசிவாய:
சிவதாஸன்
ஜகன்நாதன்
வியாழன்,, ஜூன்,27,, 2024
No comments:
Post a Comment