ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 15
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
வெள்ளி,,ஜூன் 21, 2024
அனைவருக்கும் வணக்கம்
இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 32 மற்றும் 33 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்
இந்த இரண்டு ஸ்லோகங்கள் அம்பாளின் பண்டாசுரன் மீதான போரின் இறுதிக்
கட்டத்தை விளக்குகின்றன.முக்கியமாக மஹாவிஷ்ணுவின் தசாவதாரம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும்
இன்றைய பதிவோடு பண்டாசுர வதம் நிறைவுறுகிறது
கராம்குளி நகோத்பன்ன நாராயண தஸாக்றுதிஃ |
மஹா பாஸுபதாஸ்த்ராக்னி நிர்தக்தாஸுர ஸைனிகா || 32 ||
காமேஸ்வராஸ்த்ர நிர்தக்த ஸபண்டாஸுர ஸூன்யகா |
ப்ரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி தேவஸம்ஸ்துத
வைபவா || 33 ||
32) கராம்குளி நகோத்பன்ன நாராயண தஸாக்றுதிஃ |
மஹா பாஸுபதாஸ்த்ராக்னி நிர்தக்தாஸுர ஸைனிகா || 32 ||
| கர | கைகள் | 
| அங்குலி | விரல்கள் | 
| நக | நகங்கள் | 
| உத்பன்ன | அதனின்றும்
  தோன்றுதல் | 
| நாராயண | ஸ்ரீ
  நாராயணன் | 
| தஷாக்ருதி | பத்து
  வடிவங்கள்,தசாவதாரம் | 
| மஹாபாசுபதாஸ்த்ர | சிவனின்
  பாஸுபதாஸ்த்ரம் | 
| அக்னி | நெருப்பு | 
| நிர்தக்த | அழிதிடல் | 
| அசுர சைனிகா | அசுர
  சேனை | 
ஸ்ரீமன்
நாராயணின் பத்து அவதாரங்களான் தஸாவதாரங்களை தன்னுடைய பத்து நகங்களின் முனையில் அமைந்துள்ள
நகங்களின் முனையிலிருந்து உருவாக்கியவள். 
சிவனின் மஹாபாசுபதாஸ்திரம் என்ற உன்னதமான அஸ்த்ரத்தினால் எழும் தீப்பிழம்பினால்
மொத்த அசுர சேனையையும் சின்னா பின்னமாக்கியவள்
33) காமேஸ்வராஸ்த்ர நிர்தக்த ஸபண்டாஸுர ஸூன்யகா |
ப்ரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி தேவஸம்ஸ்துத
வைபவா || 33 ||
| காமேஷ்வர | இறைவன்
  காமேஷ்வர்ர | 
| அஸ்த்ர | ஆயுதம் | 
| னிர்தக்த | முழுதும்
  அழித்தல் | 
| ஸ பண்டாசுர | பண்டாஸுரனின்
  தலைனகரான | 
| ஸூன்யகா | சூன்யகா | 
| ப்ரஹ்ம | ப்ரம்ம
  தேவன் | 
| உபேந்த்ர | மஹாவைஷ்ணு | 
| மஹேந்த்ராதி | இந்திரன்
  முதலிய | 
| தேவ | தேவர்கள் | 
| சம்ஸ்துத | புகழ்கின்ற | 
| வைபவா | வீரமும்
  ஆற்றலுமுடையவள் | 
|  |  | 
காமேஷ்வர
அஸ்த்ரத்தை எய்து பண்டாசுரனையும் ,சூன்யகா எனும் அவனது தலைநகரையும் பூண்டோடு அழித்தவள்.ப்ரம்மா,விஷ்ணு,
இந்திரன் மற்றும் தேவர்களாலும் போற்றப்படுகின்ற் பேறாற்றலை உடையவள். 
இவ்விதமாக
அம்பாளின் பண்டாசுர வதம் நிறைவுற்றது
இந்த
ஸ்லோகங்களுக்கான விளக்கங்களை voice மூலமும் கொடுத்துள்ளேன் கேட்டு மகிழுங்கள்
இன்று இந்த
இரண்டு ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து
அம்பிகையின் பேர ருள் பெற்றுய்யுங்கள்
நாளை மீண்டும்
சந்திப்போம்
ஓம் நமசிவாய:                                                               
சிவதாஸன்
ஜகன்நாதன்                                                          
வெள்ளி,, ஜூன்,21, 2024
 
No comments:
Post a Comment