Sunday, June 9, 2024

 

 

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம்  3

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

அனைவருக்கும் வணக்கம்

இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின்  6 முதல் 9 வரையிலான நான்கு ஸ்லோகங்களைப் பார்ப்போம்.

 

6)வதனஸ்மர மாங்கல்ய க்றுஹதோரண சில்லிகா |
வக்த்ரலக்ஷ்மீ பரீவாஹ சலன் மீனாபலோசனா || 6 ||

 

மதன் வாழும் மங்கல இல்லத்திற்கு இணையான முகத்திற்கு தோரணங்கள் போன்ற புருவங்களை உடையவள். முகத்தின் அழகு வெள்ளத்தில் துள்ளும் மீன்களைப் போல உள்ள கண்களை உடையவள்


7)னவசம்பக புஷ்பாப னாஸா தண்ட விராஜிதா |
தாராகாந்தி திரஸ்காரி னாஸாபரண பாஸுரா || 7 ||

 

புதிதாக மலர்ந்திருக்கும் ஷண்பக மலரைப் போன்ற அழகிய மூக்கினை உடையவள். நக்ஷத்திரத்தின் ஜோதியை தோற்கடிக்கும் காந்தியுள்ள மூக்குத்தியை அணிந்தவள்

8)
கதம்ப மஞ்ஜரீக்லுப்த கர்ணபூர மனோஹரா |
தாடங்க யுகளீபூத தபனோடுப மண்டலா || 8 ||

 

கதம்பப் பூவை தன் காதுகளில் தரித்திருக்கும் மனோஹரமான ரூபமுடையவள். சூரிய மற்றும் சந்திர மண்டலங்களை இரு காதுகளில் கம்மல் களாக அணிந்தவள்

9)
பத்மராக ஸிலாதர் பரிபாவி கபோலபூஃ |
னவவித்ரும பிம்ப ஸ்ரீஃன்யக்காரி ரதனச்சதா || 9 ||

 பத்மராகத்தால் செய்யப்பட்ட கண்ணாடியைக் காட்டிலும் அதிகமாகப் ப்ரதிபலிக்கும் கன்னனங்களை உடையவள். புதியதான பவழம், கோவைப் பழம் இவைகளின் காந்தியைவிட சிறந்த காந்தி உடைய உதடுகளை உடையவள்.

 

அன்பர்களே இன்று இந்த நான்கு ஸ்லோகங்களையும் பொருளோடு படித்துணர்ந்து அம்பிகையின் பேருள் பெற்றுய்யுங்கள்

 

நாளை மீண்டும் சந்திப்போம்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

ஜூன், 9 , 2024

No comments:

Post a Comment