ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 17
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
ஞாயிறு,,ஜூன் 23 2024
அனைவருக்கும் வணக்கம்
இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 36 மற்றும் 37 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்
இன்றைய இரண்டு ஸ்லோகங்களில் ஒரு பெண்மணியாக
அம்பாளின் தன்மைகளும் பெருமையும் விளக்கப் படுகின்றன
மூலமந்த்ராத்மிகா, மூலகூட த்ரய களேபரா |
குளாம்றுதைக ரஸிகா, குளஸங்கேத பாலினீ || 36 ||
குளாங்கனா, குளாந்தஃஸ்தா, கௌளினீ, குளயோகினீ |
அகுளா, ஸமயாந்தஃஸ்தா, ஸமயாசார தத்பரா || 37 ||
36)
மூலமந்த்ராத்மிகா, மூலகூட த்ரய களேபரா |
குளாம்றுதைக ரஸிகா, குளஸங்கேத பாலினீ || 36 ||
மூலமந்த்ர |
அடிப்படையான மந்த்ரம் |
ஆத்மிகா |
தனது தன்மையாகக் கொண்டவள் |
மூலகூட |
மூலமந்த்ரத்தின் இருப்பிடமாக |
த்ரய |
மூன்று |
களேபரா |
உடல் பாகங்கள் |
குல-அம்ருத |
சஹஸ்ரத்தில் இருந்து பெருகும் அமுதம் |
அம்ருதைக |
அம்ருதத்திலிருந்து |
ரசிகா |
விருப்பமுள்ளவள் |
குல |
பரம்பரை,குலம் |
சங்கேத |
பாதைகள் வழிமுறைகள் |
பாலினீ |
பாதுகாப்பவள் |
|
|
அம்பாள் அடிப்படை மந்த்ரமான பஞ்சதசாக்ஷரி மந்த்ரத்தை தனது தன்மையாகக்
கொண்டவள்.அம்த அடிப்படை மந்திரத்தை மூன்று உடல் பாகங்களாக கொண்டவள்.
சஹஸ்ரத் திலிருந்து பெருகும் அமிர்தத்தில் விருப்பமுள்ளவள். குலத்தின் பரம்பரை
வழிமுறைகளைப் பாதுகாப்பவள்
37)
குளாங்கனா, குளாந்தஃஸ்தா, கௌளினீ, குளயோகினீ |
அகுளா, ஸமயாந்தஃஸ்தா, ஸமயாசார தத்பரா || 37 ||
குல |
குலம் |
ஆங்கனா |
பெண்மணி |
குல |
குலமான வேத சாஸ்த்ரங்கள் |
அந்தஸ்தா |
உள் உறைபவள் |
கௌலினி |
கௌலினி வழிபாட்டுமுறைகளானவள் |
குல யோகினி |
பரமாத்மாவிடம் ஒன்றுபட்டு யோக வழியில் நடப்பவள் |
அகுலா |
குலத்திற்கு அப்பார்ப் பட்டவள் |
சமயா |
சமயாசார நெறிமுறைகளும் வழிபாடும் |
அந்தஸ்தா |
உள்ளுறைபவள் |
சமயா |
சமயாசார நெறிமுறைகளும் வழிபாடும் |
ஆசார |
ஆசார பழக்க வழக்கங்கள் |
தத்பராத |
பிடித்தமானவள், ஈடுபாடுடையவள் |
|
|
அம்பாள் ஒரு சிறந்த குல பெண்மணியாவாள்.அவள்
வேத சாஸ்த்ரங்களின் உள் உறைபவள்.கௌலினி வழிபாட்டு முறையின் வடிவமானவள்.பரமாத்மாவிடம்
ஒன்று பட்டு யோகவழியில் நடப்பவள்
அவள் எந்த ஒரு குலத்திற்கும் அப்பார்ப் பட்டவள்.சமயம் தொடர்பான நெறிமுறைகளிலும்,வழிபாடுகளிலும் உள்ளுறைபவள்.சமயாசாரம் சார்ந்த ஆசார பழக்க வழக் கங்களில்பிரியமான ஈடுபாடு உடையவள்
இந்த
ஸ்லோகங்களுக்கான விளக்கங்களை voice மூலமும் கொடுத்துள்ளேன் கேட்டு மகிழுங்கள்
இன்று இந்த
இரண்டு ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து
அம்பிகையின் பேர ருள் பெற்றுய்யுங்கள்
நாளை மீண்டும்
சந்திப்போம்
ஓம் நமசிவாய:
சிவதாஸன்
ஜகன்நாதன்
ஞாயிறு,, ஜூன்,23,, 2024
No comments:
Post a Comment