Thursday, June 13, 2024

 

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 7

 

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

அனைவருக்கும் வணக்கம்

இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின்  16 மற்றும் 17வது  ஸ்லோகங்களைப் பார்ப்போம்.

16 )அருணாருண கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத்-கடீதடீ |
ரத்னகிங்கிணி காரம்ய ரனாதாம பூஷிதா || 16 ||

அருணாருண

உதய சூரியன் மற்று மாணிக்கத்தின் சிவப்பு

 

கௌசம்ப

கௌசமப் பூவின் இளம் சிவப்பு

 

வஸ்த்ர

ஆடை

 

பாஸ்வத்

மிளிரும்

 

கடி

இடை

 

தடீ

இடைச் சரிவு

 

ரத்ன

ரத்னங்கள் பதித்தன

 

கிண்கிணிகா

சிறு மணிகள்

 

ரம்யா

ரம்யமான அழகாக

 

ரஷனா

ஒட்டியானத்தை அணியும் இடை

 

தாம

மாலை சங்கிலி

 

பூஷிதா

அலங்காரமாய் அணிந்திருத்தல்

 

 

சிவப்பும் இளம் சிவப்புமாய் ஒளிரும் வஸ்த்திரத்தைக் கொண்டு இடையையும் இடை சரிவையும் அலங்கரித்தவள்

சிற்றிடையில் சிறு மணிகள் கிண்கிணிக்கும் ரத்தினங்கள் பதித்த ஒட்டியானத்தை அணிந்திருப்பவள்ன


17 )
காமே ஜ்ஞாத ஸௌபாக்ய மார்தவோருத் வயான்விதா |
மாணிக்ய மகுடாகார ஜானுத்வய விராஜிதா || 17 ||

 

காமேஷ

காமேஸ்வர ரான ஈஸ்வரன்

ஞாத

அரிந்த உணர்ந்த

சௌபாக்ய

மங்கலமான அழகான

மார்தவ

கனிவான மென்மையான

ஊரு

தொடைப் பகுதி

த்வயான்விதா

இரண்டு ஜோடி அழகாய் அமைந்திருத்தல்

மாணிக்க மகுட

மாணிக்க க்ரீடம்

ஆகார

தென்படுதல்

ஜானு

முழங்கால்

த்வய

இரண்டும்

அன்விதா

எழிலுடன் விளங்கும்

 

அவளது மணாளரான காமேஸ்வரர் மட்டுமே உணரக்கூடிய மென்மையான ம்ருதுவான தொடைகளை உடையவள்

இரு முழங்கால்களும் மாணிக்கத்தாலான மகுடம் போல் ஜ்வலிக்கப் பெறுபவள்

இன்று இந்த இரண்டு ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேர ருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்

ஓம் நமசிவாய:

சிவதாஸன் ஜகன்நாதன்

வியாழன்,, ஜூன், 13, 2024

 


No comments:

Post a Comment