Monday, June 17, 2024

 

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 11

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

திங்கள், ஜூன் 17 2024

அனைவருக்கும் வணக்கம்

இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 24 மற்றும் 25 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்

நேற்றைய ஸ்லோகங்களில் ஸ்ரீ நகர வர்ணனையைப் பார்த்தோம். இன்று முதல் பண்டாசுர வதம் ஆரம்பிக்கின்றது.ஸ்ரீ லலிதாம்பிகையின் அவதார நோக்கமே பண்டாசுர வதமேயாகும்

24) தேவர்ஷி கணஸங்காத ஸ்தூயமானாத்ம வைபவா |
ண்டாஸுர வதோத்யுக்த க்திஸேனா ஸமன்விதா || 24 |

25)ஸம்பத்கரீ ஸமாரூட ஸிந்துர வ்ரஜஸேவிதா |
ஸ்வாரூடா திஷ்டிதாஸ்வ கோடிகோடி பிராவ்றுதா || 25 ||

தேவர்ஷி

தேவதைகள்,ஞானிகள், ரிஷிகளும்

கண

கணங்களின் படையும்

சங்காத

தொடர்பு,கூட்டம்

ஸ்தூயமான

போற்றுதல்

ஆத்ம

ஆத்மா

வைபவா

வலிமை பொருந்திய

பண்டாசுர

பண்டாசுரன்

வதோத்

வதைத்து அழிக்க

யுக்த

கூடி சேர்ந்து

ஷக்திசேனா

வலிமைமிக்க சேனை

சமன்விதா

கொண்டிருத்தல்

தேவாதி தேவ கணங்களும்,முனிவர் குழாமும் போற்றிப் புகழும் பெருமை மிகுந்த ஆத்ம வலிமை உடையவள். பண்டாசுரனை அழிக்க வலிமை பொருந்திய பெரும் சேனையை கொண்டிருப்பவள்

ஸம்பத்கரீ ஸமாரூட ஸிந்துர வ்ரஜஸேவிதா |
ஸ்வாரூடா திஷ்டிதாஸ்வ கோடிகோடி பிராவ்றுதா || 25 ||

சம்பத்கரீ

ஷக்தி சேனையின் தலைவி ஷம்பத்கரி

சமாரூட

ஏறி அமர்ந்திருத்தல்

சிந்தூர

யானை

வ்ர்ஜ

மந்தை,சேனை

சேவிதா

சேவை செய்தல்

 

 

அஷ்வா

குதிரை

அஷ்வாரூட

குதிரையில் அமர்ந்திருப்பவள்

திஷ்டிதா

அமைந்திருத்தல்

கோடி

கோடிக் கணக்கான

கோடி

மீண்டும்  கோடிக்கனக்கான

ப்ராவ்ருதா

சூழப்பட்டவள்

 

 

 

 

ஸம்பத்கரி என்ற தேவியின் தலைமையில் திகழும் பெரும் யானைப் படையின் சேவையை ஏற்றிருப்பவள். அஷ்வாரூடா என்னும் தேவியின் ஆணையின் கீழ் கோடிக் கணக்கில் குழுமியுள்ள உயர்ந்த குதிரைகள் கொண்ட படையால் சூழப்பட்டிருப்பவள்

இந்த ஸ்லோகங்களுக்கான விளக்கங்களை voice மூலமும் கொடுத்துள்ளேன் கேட்டு மகிழுங்கள்

 

இன்று இந்த இரண்டு ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேர ருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

திங்கள்,, ஜூன்,17, 2024

 

No comments:

Post a Comment