ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 4
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
அனைவருக்கும் வணக்கம்
இன்று முதல் தினம் இரண்டு ஸ்லோகங்களை பதம் பிரித்து ஒவ்வொரு பதத்திற்கான அர்த்தத்தையும் பின் முழு ஸ்லோகத்தின்
பொருளையும் தருகிறேன்
இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 10 மற்றும் 11வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்.
10 )ஸுத்த வித்யாம்குராகார த்விஜபங்க்தி
த்வயோஜ்ஜ்வலா |
கர்பூர வீடிகா மோத ஸமாகர்ஷ
த்திகந்தரா || 10 |
ஷூத்த வித்யாம் |
தூய மெய்யறிவு |
ஆகார் |
வெளித்தோற்றம் |
த்விஜ |
பற்கள் |
பங்க்தி |
வரிசை |
த்வ்ய |
ஜோடி |
உஜ்வலா |
மின்னுதல் |
வீடிகா |
வெற்றிலை பாக்கு நறுமணப்பொருள்கள் |
கற்பூரம் மோத |
கற்பூரம் நறுமணம் |
சமாகர்ஷி |
பரவலாக மணம் கமழ்தல் |
திகந்தரா |
ப்ரபஞ்சம் |
ஒளிரும் பல் வரிசை இரண்டும் ஞான மொட்டுக்கள் முகிழ்ந்திருப்பது
போல் அமையப் பெற்றவள் நறுமணத்தாம்பூலத்தை
மென்று ப்ரபஞ்சம் எங்கும் இனிய மணத்தைப் பரப்புபவள்
11) னிஜஸல்லாப மாதுர்ய வினிர் பர்த்ஸித கச்சபீ |
மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத்-காமேஸ மானஸா || 11 ||
சல்லாப |
சம்பாஷனை/உறையாடல் |
கச்சபி |
சரஸ்வதியின் வீணை |
மாதுர்ய |
இனிய,மதுரமான |
நிஜ |
எப்பொழுடும் |
விநிர்ப்ப |
பழித்தல்,விமர்சித்தல் |
ஸ்தித |
இருத்தல் |
மந்த ஸ்மித |
நளின மந்தஹாஸ புன்னகை |
ப்ரபா |
ப்ரகாஸம் |
பூர |
பொங்கும் ப்ரவாகம் /
கடல் |
மஜ்ஜத் |
மூழ்குதல் |
காமேஷ மானஸா |
காமேஸ்வரரின் மனம் |
ஸரஸ்வதி வாசிக்கும் வீணையைப் பழிக்கும் இனிய சம்பாஷனையை
தரக்கூடியவள்.தனது மென்மையான புன்னகையின் ஒளிப்ரவாகத்தில் காமேஸ்வரரின் மனதை மூழ்கி லயிக்கச்
செய்பவள்
இன்று இந்த இரண்டு ஸ்லோகங்களுடன் இந்தப்
பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேர ருள் பெற்றுய்யுங்கள்
நாளை மீண்டும் சந்திப்போம்
ஓம் நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
10,ஜூன்,2024
No comments:
Post a Comment