Wednesday, June 26, 2024

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 20

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்                                                        

புதன்,,ஜூன் 26  2024

அனைவருக்கும் வணக்கம்

இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 42 மற்றும்   43 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்

இந்த ஸ்லோகங்களில் அம்பாளின் பக்தானுக்ரஹங்கள் விளக்கப்படுகின்றன.இறுதியில் அம்பாளின் நிற்குண உபாசனையும் சொல்லப்படுகின்றது

42) பக்திப்ரியா, பக்திகம்யா, பக்திவஸ்யா, பயாபஹா |
ஸாம்பவீ, ஸாரதாராத்யா, ர்வாணீ, ர்மதாயினீ || 42 ||
 

பக்திப்ரியா

மெய்யான பக்தியால் சந்தோஷிப்பவள்

பக்தி

பரிபூரண பக்தியால்

கம்யா

உணரப் படக்கூடியவள்

பக்தி

களங்கமில்லா தூய பக்தியால்

வஸ்யா

கட்டுப் படுபவள்

பய

பயத்தை

ஆபஹா

களைபவள்

ஷாம்பவீ

ஷம்புவான சிவனின் துணைவியானவள்

ஷாரதா

சரஸ்வதி, இலையுதிர் காலம், நவராத்ரி

ஆராத்யா

ஆராதனைக்கும் பூஜைக்கும் உகந்தவள்

ஷர்வா

சிவனின் ப்ரிதிவி என்னும் பூமி வடிவம்

ஷர்வாணீ

சிவனின் பத்னியானவள்

ஷர்ம

இன்பம்,மகிழ்ச்சி

தாயினி

அளிப்பவள்

லலிதாம்பாள் உண்மையான பக்தியால் மகிழ்ச்சி அடைபவள்.பரிபூரண பக்தியால் உண்ரப்படக் கூடியவள்.அந்த பக்திக்கே கட்டுப்படக் கூடியவள்.பக்தர்களின் பயத்தைப் போக்கிக் களைபவள்.

சம்புவாகிய சிவபெருமானின் துணைவியானவள். சாரதா எனும் கலைமகளால் துதிக்கப் படுபவள்.நவராத்ரியின் ஆராதனைக்கும் பூஜைக்கும் உகந்தவள் சர்வா என்ற பூமி வடிவான சிவனின் பத்தினியானவள்.பக்தர்களுக்கு இன்பமும் ,மகிழ்ச்சியும் அளிப்பவள்


43) ஸாங்கரீ, ஸ்ரீகரீ, ஸாத்வீ, ரச்சந்த்ரனிபானனா |
ஸாதோதரீ, ஸாந்திமதீ, னிராதாரா, னிரஞ்ஜனா || 43 ||

ஷாங்கரீ

இறைவனின் சிவரூபமான சங்கரரின் பத்தினி

ஸ்ரீ

தனம்,செல்வம்

கரீ

காரணமானவள்

சாத்வீ

நற்பண்புகளின் லக்ஷணமானவள்

ஷரத்

இலையுதிர்காலம்

சந்திர

சந்திரனின்

நிப

சாயல் ஒத்த

ஆனன

முகம்

ஷதோதரீ

மெல்லிய இடையை உடயவள்

ஷாந்திமதி

சாந்தம்,அன்பையே வடிவமானவள்

நிராதாரா

பற்று மற்றும் பிடிப்பற்றவள்

நிரஞ்சனா

புலங்களின் பேதங்களுக்கு அப்பார்ப்பட்டவள்

 

 

சர்வேஸ்வரரின் ஸ்வரூபமான சங்கரரின் பத்தினி யானவள்.எல்லாவிதமான செல்வங்களுக்கும் காரணமானவள்.நற்பண்புகளின் இலக்கணமானவள்.

ஷரத் எனும் இலை உதிர் கால சந்திரனை ஒத்த முக சோபையும் ஒளியும் பொருந்தியவள்.மெல்லிய இடையை உடையவள்.சாந்தம்,அன்புமே வடிவானவள்,எதிலும் பற்று அல்லது பிடிப்பு அற்றவள்.ஐம்புலங்களுக்கும்,பேதங்களுக்கும் அப்பார்ப் பட்டவள்

இன்று இந்த இரண்டு ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

புதன்,, ஜூன்,26,, 2024

 

  

No comments:

Post a Comment