Saturday, June 15, 2024

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 9

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

அனைவருக்கும் வணக்கம்

இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 20 மற்றும்  21 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்

20) ஸிஞ்ஜான மணிமஞ்ஜீர மண்டித ஸ்ரீ பதாம்புஜா |
மராளீ மந்தகமனா, மஹாலாவண்ய ஸேவதிஃ || 20 ||

21) ஸர்வாருணா ‌உனவத்யாங்கீ ஸர்வாபரண பூஷிதா |
ஸிவகாமேஸ்வராம்கஸ்தா, ஸிவா, ஸ்வாதீன வல்லபா || 21 ||

சிஞ்ஜான

கலகலவென்று ஒலி எழுப்பும்

மணி

முத்துக்கள்,ரத்தினங்கள்

மஞ்ஜீர

கொலுசு

மண்டித

அழகூட்டும்

ஸ்ரீ பத

மேன்மையான பாதங்கள்

அம்புஜ

தாமரையைப் போன்ற

மராளீ

அன்னப் பறவை

மந்த

மெதுவான ,மென்மையான

கமனா

நடையழகுடையவள்

மஹா

மஹத்துவம் மிக்க

லாவண்ய

அழகு

ஷேவதி

பொற்கிடங்கு

 

 

 

பாத கமலங்களை ரத்ன மணிகள் பதித்த கிண்கிணிக்கும் சலங்கைகளால் அலங்கரித்திருப்பவள்

அன்னத்தைப் போண்ற நளினமான நடையழகு உடையவள். பேரழகின் பொற்குடங்களாக விளங்குபவள்

 

 

21) ஸர்வாருணா ‌உனவத்யாங்கீ ஸர்வாபரண பூஷிதா |
ஸிவகாமேஸ்வராம்கஸ்தா, ஸிவா, ஸ்வாதீன வல்லபா || 21 ||

ஸர்வ

எங்கும் ஒவ்வொன்றும்,சகலமும்

அருண

மானிக்கத்தின் சிவப்பு

அன்

மறுக்கும்

அவத்ய

கீழ்மை,தரமற்ற

அங்க

உடலின் அங்கம்

ஸர்வ

எல்லாமும்

ஆபரண

ஆபரணங்கள்

பூஷிதா

அணிந்திருப்பவள்

ஷிவ காமேஷ்வர

சிவனின்            

அங்கஸ்தா

பாதியைக் கொண்டவள்

ஷிவா

சிவனுமானவள்

ஸ்வாதீன

தனித்தன்மையுடன்

வல்லபா

விளங்குபவள்

 

 

 

ஒவ்வொரு அங்கத்திலும் சிவப்பு நிறத்தைப் பிரதிபலிப்பவள்.சிவப்பின் தன்மையை தன் இயல்பாக்கியவள் நிகரில்லாத உன்னத தேகத்துடன் திகழ்பவள்.அனைத்து ஆபரண அலங்கார பூஷணங்களும் தரித்திருப்பவள்.சிவனின் பாதியைக்கொண்டு அவரின் அந்தராங்கினியானவள்.சிவனுமான்வள்,எதனையும் சாராது தனித்தன்மையுடன் விளங்குபவள்

 

இது வரை அம்பாளின் கேசாதி பாத வருணணைகளைப் பார்த்தோம் நாளை முதல் அம்பாளின் ஸ்ரீ நகர வருணனைகளைப் பார்ப்போம்

 

இன்று இந்த இரண்டு ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேர ருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்

ஓம் நமசிவாய:

சிவதாஸன் ஜகன்நாதன்

சனி,, ஜூன், 15, 2024

  

 


No comments:

Post a Comment