ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 16
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
சனி,,ஜூன் 22 2024
அனைவருக்கும் வணக்கம்
இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 34 மற்றும் 35 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்
நேற்றோடு பண்டாசுர வதம் முடிந்தது. இன்றுமுதல்
நாம் அம்பாளின் மந்த்ர ஸ்வரூபத்தைப் பார்க்கப் போகின்றோம்
34)
ஹர நேத்ராக்னி ஸம்தக்த காம ஸம்ஜீவனௌஷதிஃ |
ஸ்ரீமத் வாக்பவ கூடைக ஸ்வரூப முகபங்கஜா || 34 ||
ஹரநேத்ர
|
சிவனின்
நெற்றிக் கண் |
அக்னி |
நெருப்பு |
சந்தக்த |
எரிந்த |
காம |
காம
தேவன், மன்மதன் |
ஸ்ஞ்சீவன
|
புனர்
ஜன்மமெடுத்த |
ஔஷதி |
மருந்து |
ஸ்ரீமத் |
மேன்மையான
மங்களம் மிகுந்த |
வாக்
பவ |
வார்த்தை
பிறக்கும் |
கூட |
முகட்டின்
இருப்பிடம் |
ஸ்வரூப |
வடிவம் |
முக |
முகம் |
பங்கஜா |
தாமரை |
சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்த எழுந்த நெருப்பினால் எரிந்துபோன
காமனை உயிர்ப்பித்து எழுப்பிய மருந்தானவள்
மேன்மை மிகுந்த வார்த்தைகள் பிறக்கும் இடமான வாக்பவ கூடமாகிய முகம் தாமரை வடிவமாகக் கொண்டவள்
35) கண்டாதஃ கடிபர்யந்த மத்யகூட ஸ்வரூபிணீ |
ஸக்திகூடைக தாபன்ன கட்யதோபாக தாரிணீ || 35 ||
கண்டி |
கழுத்து |
அத |
கீழே |
கடி |
இடுப்பு |
பர்யந்த |
வரையிலான |
மத்ய கூட |
மத்தியில் அமைந்துள்ள நடுப்பகுதி |
ஸ்வரூபினி |
வடிவமானவள் |
ஸக்திகூட |
பஞ்சதஸாக்ஷரத்தின் கடை நாலு எழுத்துக்கள் |
ஆபன்ன |
பெற்றிருத்தல் |
கடி |
இடை |
அதோபாக |
கீழ் பாகங்கள் |
தாரிணி |
கொண்டிருத்தல் |
|
|
கழுத்திலிருந்து இடுப்பு வரையிலான சூக்ஷும
உடலின் நடுப்பகுதியை பஞ்ச தஸாக்ஷரி மந்திரத்தின் நடுப்பகுதியாக க்கொண்டிருப்பவள்.
இடை முதல் அடி வரையிலான பாகங்களை பஞ்ச
தஸாக்ஷரி மந்திரத்தின் கடைசி நாலு எழுத்துக்களை வடிவமாகக்கொண்டிருப்பவள்
இந்த ஸ்லோகங்களில் அம்பாளின் மந்த்ரஸ்வரூபம்
விளக்கப் படுகின்றது. சிவனின் நெற்றிக் கண் அக்னியால் சாம்பலான மதனை அம்பாள் ஔஷதமாயிருந்து
உரிர்ப்பித்ததையும் அம்பாளின் தாமரை முக அழகையும்,பஞ்ச தசாக்ஷரி மந்திரத்தின் மந்திர
அக்ஷரங்களின் ஸ்வரூபமாகவே அம்பாளின் ஸ்தூல சரீர பகுதிகள் அமைந்திருப்பதையும் இந்த ஸ்லோகங்கள்
விவரிக்கிறன
இந்த
ஸ்லோகங்களுக்கான விளக்கங்களை voice மூலமும் கொடுத்துள்ளேன் கேட்டு மகிழுங்கள்
இன்று இந்த
இரண்டு ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து
அம்பிகையின் பேர ருள் பெற்றுய்யுங்கள்
நாளை மீண்டும்
சந்திப்போம்
ஓம் நமசிவாய:
சிவதாஸன்
ஜகன்நாதன்
சனி,, ஜூன்,22,, 2024
No comments:
Post a Comment