ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 14
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
வியாழன்,ஜூன் 20, 2024
அனைவருக்கும் வணக்கம்
இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 30 மற்றும் 31 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்
இந்த இரண்டு ஸ்லோகங்களில் பண்டாசுர வதத்துக்குப் புறப்படும் அன்னை
அவளால் சூழ்ந்திருந்து படை நடத்தும் வாராகி என்ற தேவி விசுக்ரன் என்ற படைத்தளபதியும்
அசுரனுமானவனை அழித்ததற்காக வாராஹியின் பராக்ரமத்தை மெச்சுகிறாள். அதோடு மஹா கணபதியின் தோற்றத்தையும் கூறுகிறது
மஹா கணபதி விக்ணங்களை அழிப்பதையும்,பண்டாசுரனின் பாணங்களை அம்பாள் நேர்கொண்டு அழிப்பதையும் கூறுகிறது
30) விஸுக்ர ப்ராணஹரண வாராஹீ
வீர்ய நந்திதா |
காமேஸ்வர முகாலோக கல்பித ஸ்ரீ கணேஸ்வரா || 30 ||
31) மஹாகணேஸ நிர்பின்ன விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா |
பண்டாஸுரேந்த்ர நிர்முக்த ஸஸ்த்ர ப்ரத்யஸ்த்ர
வர்ஷிணீ || 31 |
விஸுக்ர ப்ராணஹரண வாராஹீ
வீர்ய நந்திதா |
காமேஸ்வர முகாலோக கல்பித ஸ்ரீ கணேஸ்வரா || 30 ||
விஷுக்ர |
விஷுக்ரன்
என்ற பண்டாசுரனின்சகோதரன் |
ப்ராண |
ஜீவன்,உயிர் |
ஹரண |
பரித்தல்
,களைதல் |
வாராஹீ |
தண்டநாதா
எனும் வாராஹீ தேவி |
வீர்ய |
பலம் |
நந்திதா |
அகமகிழ்தல் |
காமேஷ்வர |
காமேஷ்வரரான
சிவன் |
முகா |
முகம் |
ஆலோக |
பார்வை
படுதல் |
கல்பித |
உருவாக்கப்
பட்ட |
ஸ்ரீ கணேஷ்வரா |
மஹா
கணேஸ்வரர் |
பண்டாசுரனின்
சகோதரன் ஆன விஷுக்ரனை வாராஹீ வீழ்த்தியதால் அந்த வீரச் செயலால் உவகை கொண்டவள் காமேஸ்வர ரான பரமேஸ்வர
ரின் முக அழகைக்கண்டு அவ்வாறே கணேஷ்வரரை படைத்தவள்
மஹாகணேஸ நிர்பின்ன விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா |
பண்டாஸுரேந்த்ர நிர்முக்த ஸஸ்த்ர ப்ரத்யஸ்த்ர
வர்ஷிணீ || 31 |
மஹாகணேஷ |
|
மஹா
கணபதி |
நிர்பின்ன |
|
உடைத்து
அழித்தல் |
விக்ன |
|
விக்னங்கள்,
காரியத்தடை |
யந்த்ர |
|
விஷுக்ரனால்
உருவாக்கப்பட்ட யந்த்ரம் |
ப்ரஹர்ஷிதா |
|
குதூகலித்து
மகிழ்தல் |
பண்டாசுர |
|
பண்டாசுரன் |
இந்த்ர |
|
சிறந்த
தலைவன் |
நிர்முக்த |
|
இழப்பு |
ஷஸ்த்ர |
|
வாள்,வேல்
முதலிய ஆயுதங்கள் |
ப்ரத்ய |
|
ஒவ்வொரு |
ஆஅஸ்த்ர |
|
ஏவுகணைகள் |
வர்ஷ |
|
பொழிதல்,வர்ஷ்த்தல் |
விஷுக்ரன் உருவாக்கிய விக்னம் என்ற எந்திரத்தை விகேஸ்வரரான கணபதி நிர்மூலமாக்கியதால்
குதூகலம் கொள்பவள் பண்டாசுரனின்
ஒவ்வொரு சஸ்த்ர ஆயுத்தையும் தனது ஆயுத மழையால் முறியடித்து நிற்கதியாக்கியவள்
இந்த
ஸ்லோகங்களுக்கான விளக்கங்களை voice மூலமும் கொடுத்துள்ளேன் கேட்டு மகிழுங்கள்
இன்று இந்த
இரண்டு ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து
அம்பிகையின் பேர ருள் பெற்றுய்யுங்கள்
நாளை மீண்டும்
சந்திப்போம்
ஓம் நமசிவாய:
சிவதாஸன்
ஜகன்நாதன்
வியாழன்,, ஜூன்,20, 2024
No comments:
Post a Comment