Friday, June 14, 2024

 

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 8

 

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

அனைவருக்கும் வணக்கம்

இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின்  18 மற்றும்                                                               19 வது  ஸ்லோகங்களைப் பார்ப்போம்.

18) ந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா |
கூடகுல்பா கூர்மப்றுஷ்ட ஜயிஷ்ணு ப்ரபதான்விதா || 18 ||

 

இந்த்ரகோப

சிவப்பு பூச்சி இனம்

பரிக்ஷிப்த

சிதறப்பட்டிருத்தல்

ஸ்மர

காமதேவன்

தூண

அம்பராத்துணி

ஜங்கிகா

முன்னங்கால்

கூட

மறைக்கப் பட்ட

குல்ஃபா

கனுக்கால்

கூர்ம

ஆமை

ப்ருஷ்ட

பின்புறம்

ஜயிஷ்னு

வென்ற வெல்லுதல்

ப்ரபதா

பாதத்தின் வளைவு

அன்விதா

அழகுற விளங்குதல்

 

 

 

காம தேவனது அம்பராத்துணி போன்ற முன் கால்களில் இருந்து அம்புகள் போன்ற விரல்களில் இந்திரகோபம் என்ற மின்னும் பூச்சிகளைப் போன்ற சிவந்து மிளிரும் நகங்களை கொண்டவள்

ஆமையின் ஓடுதனை விஞ்சும் அழகான பாத வளைவுகளைக் கொண்டு விளங்குபவள்


19) னகதீதிதி ஸஞ்சன்ன மஜ்ஜன தமோகுணா |
பதத்வய ப்ரபாஜால பராக்றுத ஸரோருஹா || 19 ||

 

நக

நகங்கள்

தீதிதி

மினுமினுப்பு

ஸஞ்சன்ன

மறைந்திருக்கும்

அல்லாத

மஜ்ஜன

மூழ்குதல் நரகத்தில் மூகுதல்

தமோ

இருள் /அஞ்ஞ்சானம்

குணா

குணம்

பத த்வய

பாதம் இரண்டும்

ப்ரபா

பளபளப்புடன்

ஜால

பிணப்பு

பராக்ருத

ஒதுக்கி எள்ளி நகையாடல்

ஸரோருஹா

தாமரை

 

பக்தர்களின் புத்தியை மூடி நரகத்தில் மூழ்கி மறையச் செய்யும் அஞ்ஞானத்தை தனது நகங்களின் காந்தியாலேயே போக்க வல்லவள்
தாமரைகளை இகழ்ந்து ஒதுக்கித்தள்ளி எள்ளி நகையாடக்கூடியதாய்த் திகழும் ஒளிர்மையுடைய பாதங்களைக் கொண்டவள்

இன்று இந்த இரண்டு ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேர ருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்

ஓம் நமசிவாய:

சிவதாஸன் ஜகன்நாதன்

வெள்ளி,, ஜூன், 14, 2024

 


No comments:

Post a Comment