Saturday, June 8, 2024

 

 

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம்  

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

அனைவருக்கும் வணக்கம்

அடுத்த தொடராக ஸ்ரீ லிதா சஹ்ஸ்ரநாமம் பற்றி தினம் இரண்டு மூன்று ஸ்லோகங்களாக் தமிழ்ப் பொருளுடன் விளக்கலாம் என எண்ணியுள்ளேன்

இது ஒரு நீண்ட பயனுள்ள பதிவாக இருக்கும் அனைவரும் பொருளுணர்ந்து இந்த அரிய பொக்கிஷத்தை படித்து அன்னை பராசக்தின் பேரருள் பெற்றுய்யுமாறு வேண்டுகிறேன்

ஶ்ரீலலிதாவை வணங்கினால் எல்லோரையும் வணங்கிய பலன் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள். அதனால்தான் ஶ்ரீவித்யை போன்ற மந்திரமோ, ஶ்ரீலலிதை போன்ற தெய்வமோ, ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் போன்ற ஸ்தோத்திரமோ அன்றி வேறில்லை என்கின்றன ஞான நூல்கள்.

பிரபஞ்சத்தின் மையத்தில் அமிர்த சாகரத்தின் நடுவே ஶ்ரீபுரம் எனும் ஶ்ரீசக்கர வடிவ நகரில், ராஜதர்பாரில் ரத்ன சிம்ஹாசனத்தில் ஶ்ரீலலிதா திரிபுர ஸுந்தரி வீற்றிருக்கின்றாள். அவளைச் சூழ்ந்து அவளது மந்திரியான மாதங்கி, படைத் தளபதிகளான அஸ்வாரூடா, வராகி போன்ற சப்த மாதர், மற்ற மகா வித்யாக்கள் அமர்ந்திருக்கின்றனர். சந்தோஷம் பொங்கிப் பெருகிய வேளையில் சகல ஆன்மாக்களையும் ரக்ஷிக்க தேவி கருணை கொண்டாள். அதனால் ஜகன்மாதாவான லலிதாம்பிகை உலக உயிர்கள் இன்புற்று வாழும் பொருட்டுத் தன்னுடைய நாமாவளிகளில் சிறந்தவற்றை வெளிப்படுத்த விரும்பினாள். அவளின் விருப்பத்தைப் புரிந்துகொண்ட வாக் தேவியரான மோதினீ, சர்வேஸ்வரி, கௌலினீ, வஸீனி, விமலா, அருணா, ஜயினீ, காமேஸ்வரி போன்றோர் தொடர்ந்து பாட, அம்பிகையின் சகஸ்ரநாம துதிப்பாடல் வெளியானது. அம்பிகையின் அனந்த கோடி திருநாமங்களில் ஶ்ரீலலிதா என்ற பெயரே அம்பிகைக்கு உவப்பானது என்பதால் அந்த பெயரிலேயே அவள் திருநாமங்கள் 1000 கூறும் பாடலும் உருவானது.

 

லலிதா என்றால் கொடி என்றும், வாக்கு, மனம், எழுத்து எதனாலும் எட்டமுடியாத அபூர்வ சக்தி என்றும் பொருள் கூறுவர். ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் திருநாமம் ஒவ்வொன்றும் ஆழ்ந்த பொருளும் அளவிட முடியாத சக்தியும் கொண்டவை. அற்புதமான இந்தத் துதிப்பாடல், ஹயக்ரீவரால் அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்டு, அவர் மூலம் பூவுலகுக்கு வந்துசேர்ந்தது என்கிறது புராணம்.

 

இந்த லலிதா சஹஸ்ரநாமத்தை தினமும் ஓதுவோருக்கு                                1)இகபர சுகங்கள் யாவுமே கிட்டும் என்கின்றன புராணங்கள். 2)சகல யோகங்களும் சௌபாக்கியங்களும் கிட்டும். குறிப்பாக 3)குழந்தைப்பேறு,4) திருமண வரம், 5)தோஷ நிவர்த்தி, 6)உத்தியோக-வியாபார அபிவிருத்தி, 7)ஆனந்தமான இல்லற வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் அதிகார பலமும் தொழில் வளமும் கிடைக்கும்.

சர்வ லோகங்களையும் ஆளும் பட்டமகிஷியான ஶ்ரீலலிதா பதவி உயர்வும் அரசியல் எதிர்காலமும் வழங்கக் கூடியவள். நிதி அதிகாரத்தை அதிகரிக்கும் இவள், தீய சக்திகளை விலக்கி நன்மைகளை அளிக்கக் கூடியவள். மனமொன்றி இவள் திருநாமங்களை தினந்தோறும் சொல்லி வாருங்கள்; சகல நன்மைகளும் பெறுங்க

ப்ராம்மாண்ட புராணத்தில் ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமதை விளக்கியுள்ளர்.

பரமேஸ்வர் எரிந்துபோன மன்மதனை உயிர்ப்பித்தபோது பண்டாசுரன் என்ற அசுரனும் தோன்றினான். அவன் பெரும் சக்தி கொண்ட கொடுங்கோலனாக விள்ங்கினான்.தேவர்கள் கடுந்தவம் புரிந்த் அவனை அழிக்க வல்ல ஆதிசக்தியான பராசக்தியை வழிபட்டனர். யக்ஞ்யத்திலிருந்து ஜகத்தை ஆளும் பேரழ்ழகு சக்தியான லிதாதேவி அவதரித்தார்.

ஆதியில் வாக்தேவிகளால் அன்மையை போற்றி ஓதப்பட்ட திரு நாமங்களே ப்ரம்மாண்ட புராணத்தில் ஹயக்ரீவரால் வ்யாசருக்கு உப்தேசிக்கப்பட்டன


 

த்யாநம்

அன்னையின் அழகையும் வடிவத்தையும் பெருமையை உணர்த்தும் நான்கு த்யான ஸ்லோகங்களையும் பார்ப்போம்

1)ஸிந்தூராருணவிக்ரஹாம்த்ரிநயநாம்                             மாணிக்யமௌலிஸ்புரத்                                                             தாராநாயகஶேகராம்                                        ஸ்மிதமுகீமாபீநவக்ஷோருஹாம்                                  பாணிப்யாமலிபூர்ணரத்நசஷகம்                                                                   ரக்தோத்பலம் பிப்ரதீம்ஸௌம்யாம்                            ரத்நகடஸ்தரக்தசரணாம்                                                   த்யாயேத்பராமம்பிகாம்

 

பொருள்

குங்குமத்தின் நிறத்தை ஒத்த திருமேனியும் முக்கண்ணும் ,சிவந்த மாணிக்கத்தை சிரசிலும்,சந்திரனை உச்சியிலும் தரித்தவளும், மந்தஹாசப் புன்னகை சிந்துபவளும்,திண்மையான மார்பகத்தை உடையவளும்,கைகளில் தேன் நிரம்பிய ரத்ன கிண்னத்தையும்,சிவந்த மலர்களையும் கொண்டவளும் சிவந்த  பாதத்தை ரத்னக் குடத்தில் இருத்தி வீற்றிருப்பவலும் சௌந்தர்யம் பொருந்தியவளுமான அம்பிகையை த்யானிக்கிறேன்


 

பொருள்

2)அருணாம் கருணா தரங்கிதாக்ஷீம்                                          த்ருதபாஶாங்குஶ புஷ்பபாண சாபாம் ।                                               அணிமாதி பிராவ்ருதாம்                                                                  மயூகைரஹமித்யேவ                                                                                             விபாவயே பவாநீம்

 

பொருள்

சூரியோருணோதயத்தின் நிறத்தைக் கொண்டவளும்,அருட்கண்களால் கருணை அலையை தவழ விடுபவளும்,பாசம் அங்குசம் தரித்தவளும்,மலர் அம்புகளையும் கரும்பு வில்லையும் கொண்டு அஷ்டமா சித்திகளால் சூழப்பட்டவளுமான் பவானியை த்யானிக்கின்றேன்


 

3)த்யாயேத்பத்மாஸநஸ்தாம்                                                                    விகஸிதவதநாம்பத்மபத்ராயதாக்ஷீம்                                                  ஹேமாபாம்பீதவஸ்த்ராம் கரகலிதலஸத்தேம                                                                                                      பத்மாம் வராங்கீம்

ஸர்வாலங்காரயுக்தாம்                                                                                      ஸததமபயதாம்பக்தநம்ராம்பவாநீம்                                                        ஶ்ரீவித்யாம் ஶாந்தமூர்திம்ஸகல ஸுரநுதாம்                                                         ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம்

பொருள்

பத்மத்தில் வீற்றிருப்பவளும்,ஒளிரும் திங்களென முகமுடையவளும்,தாமரை இதழை ஒத்த கண்களை உடையவளும்,ப்ரகாசிக்கும் பட்டாடை தரித்தவளும்,கைகளில் மிளிரும் தங்கத்தாமரையைய் கொண்டவளும்,சகல விதமான ஆடை ஆபரண அலங்காரங்களுடன் பூரித்திருப்பவளான் பவனியை வணங்குகிறேன்


ஸகுங்குமவிலேப நாமலிகசும்பி கஸ்தூரிகாம்

ஸமந்த ஹஸிதேக்ஷணாம் ஸஶரசாப பாஶாங்குஶாம்

அஶேஷ ஜநமோஹிநீம ருணமால்ய பூஷாம்பராம்

ஜபாகுஸும பாஸுராம்                                                                                 ஜபவிதௌ ஸ்மரேதம்பிகாம்

 


 

பொருள்

குங்குமத்தி பூசியிருப்பவளும்,நெற்றியில் கஸ்தூரித் திலகம் கொஞ்சுபவளும்,மென்மையான புன்னகை சிந்துபவளும்,அம்பு வில் பாசாஅங்குசம் ஏந்தியவளும்,எல்லா ஜீவங்களும் தன்னித்தில் அன்பு கொள்லச் செய்திருப் பவளும்,சிகப்பு மாலை செம்பருத்தி பூ சூடியிருப்பவளும் அழகு அணிசெய்யும் அலங்காரத்துடன் ஜ்வலிப்பவளுமான அம்பிகையை ஜபத்தின் பொழுது த்யானிக்கிறேன்


 

இன்று இந்த முன்னுறை மற்றும் த்யான ஸ்லோகங்களுடன் நிறைவு செய்கிறேன்

நாளை முதல் ஒவ்வொரு ஸ்லோகமாக பொருலுடன் விளக்குகிறேன்

ஓம் நமசிவாய:

ஸிவதாஸன் ஜகன்நாதன் 

No comments:

Post a Comment