ஶ்ரீலலிதா
சஹஸ்ரநாமம் - 2
ஓம்
நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
அனைவருக்கும்
வணக்கம்
இன்று முதல் லலிதா
சஹஸ்ர நாமத்தின் ஸ்லோகங்களைப் பார்ப்போம்.
லலிதா சஹஸ்ர நாமத்தில்
183 ஸ்லோகங்கள் உள்ளன .அவற்றில் ஸ்ரீ லிதா தேவியின் ஆயிரம் நாமங்கள் துதிக்கப் படுகின்றன.
இதில் எந்த ஒரு நாமும் இரண்டு முறை வருவது கிடையாது என்பது விசேஷம்
முதல் எண்பத்து மூன்று ஸ்லோகங்களில்
அம்பாளின் அழகு மிகுந்த தோற்றமும் இந்த வரலாறும் விளக்கப் படுகின்றது
இன்று 1 முதல்
5 வரையிலான ஐந்து ஸ்லோகங்களைப் பார்ப்போம்
முதலில் 5 ஸ்லோகங்களைத்
தருகிறேன்
ஸ்ரீ மாதா, ஸ்ரீ மஹாராஜ்ஞீ, ஸ்ரீமத்-ஸிம்ஹாஸனேஸ்வரீ |
சிதக்னி குண்டஸம்பூதா, தேவகார்ய ஸமுத்யதா || 1 ||
உத்யத்பானு ஸஹஸ்ராபா, சதுர்பாஹு ஸமன்விதா |
ராகஸ்வரூப பாஸாட்யா, க்ரோதாகாராம் குஸோஜ்ஜ்வலா || 2 ||
மனோரூபேக்ஷுகோதண்டா, பஞ்சதன்மாத்ர ஸாயகா |
னிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத்-ப்ரஹ்மாண்ட மண்டலா || 3 ||
சம்பகாஸோக புன்னாக ஸௌகந்திகல ஸத்கசா
குருவிந்த மணிஸ்ரேணீ கனத்கோடீர மண்டிதா || 4 ||
அஷ்டமீ சந்த்ர விப்ராஜ தளிகஸ்தல ஸோபிதா |
முகசந்த்ர களங்காப ம்றுகனாபி விஸேஷகா || 5 ||
இனி ஒவ்வொரு ஸ்லோகமாகப்
பொருளுடன் பார்ப்போம்
முதல் ஸ்லோகம்
1) ஸ்ரீ மாதா, ஸ்ரீ மஹாராஜ்ஞீ, ஸ்ரீமத்-ஸிம்ஹாஸனேஸ்வரீ |
சிதக்னி குண்டஸம்பூதா, தேவகார்ய ஸமுத்யதா || 1 ||
பொருள்
சர்வோத்தமான ஜகன் மாதா, சகல ப்ரபஞ்சங்களையும் பரிபாலம்
செய்பவள்,சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவள்,சித் என்ற அறிவாகிய ஹோம குண்த்திலிருந்து
உதித்தவள்,தேவர்களின் காரியங்களை செய்வதில் ஊக்கமுடையவள்
2) உத்யத்பானு ஸஹஸ்ராபா, சதுர்பாஹு ஸமன்விதா |
ராகஸ்வரூப பாஸாட்யா, க்ரோதாகாராம் குஸோஜ்ஜ்வலா || 2||
பொருள்
ஆயிரம் சூர்யப்ரஹாசத்தை உடையவள்,நான்கு கைகளை
உடையவள்,இச்சையின் ரூபமான பாசாயுதம் உடையவள், க்ரோதம்,ஞானம் இவைகளான அங்குசம் தரித்திருப்பவள்
மனோரூபேக்ஷுகோதண்டா, பஞ்சதன்மாத்ர ஸாயகா |
னிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத்-ப்ரஹ்மாண்ட மண்டலா || 3 ||
பொருள்
3) சங்கல்பம்,விகல்பம்
எங்கிற மனமாகிய கரும்பு வில்லை உடையவள்,ஐந்து உணர்வுகளான கேட்டல்,உணர்தல்,கானல்,ருசித்தல்,முகர்தல்
என்றவைகளை அம்புகளாக உடையவள்,தன்னுடைய சிவந்த ப்ரகாசத்தில் ப்ரம்மாண்ட மண்டலங்களை
மூழ்கச் செய்பவள்
4) சம்பகாஸோக புன்னாக ஸௌகந்திகல ஸத்கசா
குருவிந்த மணிஸ்ரேணீ கனத்கோடீர மண்டிதா || 4 ||
பொருள்
ஜண்பகம்,அசோகம்,புன்னாகம்,சௌகந்திகம்
என்ற மலர்களை கூந்தலில் அணிந்து விளங்குபவள் குருவிந்த மணி என்னும் பத்மராக மனிகளின்
கோர்வையால் ப்ரகாசிக்கும் க்ரீடத்தை அணிந்து மிளிர்பவள்
5) அஷ்டமீ சந்த்ர விப்ராஜ தளிகஸ்தல ஸோபிதா |
முகசந்த்ர களங்காப ம்றுகனாபி விஸேஷகா || 5 ||
பொருள்
வளர்பிறை அஷ்டமி
என்ற எட்டாம் நாள் சந்திரனைப் போன்ற ப்ரகாசிக்கும் நெற்றியை உடையவள்.முழு நிலவில்
காணப்படும் களங்கம் போல் தன் முகமாகிய சந்திரனில் கஸ்தூரித்திலகமுடையவள்
அன்பர்களே இன்று இந்த ஐந்து ஸ்லோகங்களையும் பொருளோடு படித்துணர்ந்து அம்பிகையின்
பேருள் பெற்றுய்யுங்கள்
நாளை மீண்டும் சந்திப்போம்ர
ஓம்
நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
No comments:
Post a Comment