ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 10
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
ஞாயிறு, ஜூன் 16, 2024
அனைவருக்கும் வணக்கம்
இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 22 மற்றும் 23 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்
ஸுமேரு மத்ய ஸ்றுங்கஸ்தா, ஸ்ரீமன் நகரனாயிகா |
சிம்தாமணி க்றுஹாந்தஸ்தா, பஞ்சப்ரஹ்மாஸன ஸ்திதா || 22 ||
மஹாபத்மாடவீ ஸம்ஸ்தா, கதம்ப வனவாஸினீ |
ஸுதாஸாகர மத்யஸ்தா, காமாக்ஷீ காமதாயினீ || 23 ||
ஸூமேரு |
உயர்ந்த மேலான மேரு மலை |
||||
மத்ய |
நடுவில் |
||||
ஸ்ருங்க |
மலை உச்கியில் |
||||
ஸ்தா |
இருப்பவள் |
||||
ஸ்ரீமன் |
மங்களமான ,மேன்மையுடைய |
||||
நகர |
நகரம் |
||||
நாயிகா |
தலைவியாக |
||||
சிந்தாமணி
|
எண்ணங்களாலான ரத்தினம் வீட்டில் உறைபவள் |
||||
பஞ்ச |
ஐந்து |
||||
ப்ரஹ்மாஸன |
அரியாஸனம் |
||||
ஸ்திதா |
இருப்பவள் |
||||
|
|
உயர்ந்த ஸூமேரு
மலையின் உச்சியில் நடுவில் குடிகொண்டிருப்பவள்.பெருமைக்குரிய ஸ்ரீ நகரத்தின் அரசியாக
விளங்குபவள்.எண்ணம் என்னும் ரத்திங்களான வீட்டின் உள்ளுறைபவள்அந்த எண்ணங்களை நிறைவேற்ற
அருள்பவள் ப்ரபஞ்சத்தின் படைப்பின் தன்மைகளை அரியணையாக ஏற்று அதன்மீது கொலெஉவிருப்பவள்
மஹாபத்மாடவீ ஸம்ஸ்தா, கதம்ப வனவாஸினீ |
ஸுதாஸாகர மத்யஸ்தா, காமாக்ஷீ காமதாயினீ || 23 ||
மஹா |
பெரிய, மேன்மை பொருந்திய |
பத்ம |
தாமரை |
அடவி |
காடு |
ஸம்ஸ்தா |
இருப்பவள் |
கதம்பவன |
கதம்ப மரங்களின் காட்டில் |
வாஸி |
வசிப்பவள் |
ஸுதா |
தேன் |
ஸாகர |
சாகரமான கடல் |
மத்யஸ்தா |
நடுவில் இருப்பவள் |
காமாக்ஷி |
அன்பைப் பொழியும் கண்களுடையவள் |
காமதாயினி |
இச்சைகளை பூர்த்தி செய்பவள் |
|
|
தாமரை மலர்கள்
நிறைந்த பரந்த வனத்தில் குடியிருப்பவள் கதம்ப மரங்கள் நிறைந்த வனத்தின் நடுவில் இருப்பவள்.தேன்
ஆற்றின் நடுவில் வசிப்பவள்.அன்பைப் பொழியும் விழியுடையாள் பக்தர்களின் இச்சைகளை பூர்த்திசெய்பவள்
இன்று முதல் இந்த ஸ்லோகங்களுக்கான விளக்கங்களை voice மூலமும்
கொடுத்துள்ளேன் கேட்டு மகிழுங்கள்
இன்று இந்த இரண்டு ஸ்லோகங்களுடன்
இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேர ருள்
பெற்றுய்யுங்கள்
நாளை மீண்டும்
சந்திப்போம்
ஓம் நமசிவாய:
சிவதாஸன்
ஜகன்நாதன்
ஞாயிறு,, ஜூன், 16, 2024
No comments:
Post a Comment